நானும் உள்ளாடையை தூக்கி காட்டவா விளாசிய விஷ்ணு.. பிக் பாஸை விட்டு வெளியேறும் மாயா? கண்ணீரோடு பூர்ணிமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று நீதிமன்ற டாஸ்க் தொடங்கி இருக்கிறது.

அதில் மாயா மீது தினேஷ் நிக்சனிடம் உள்ளாடையை தூக்கி காட்டிய விவகாரம் குறித்து வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த இந்த வழக்கில் தினேஷுக்கு ஆதரவாக விஷ்ணு பல கேள்விகளை எழுப்பி இருந்த நிலையில் அதனால் பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் அழுது நாங்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியே போகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

bigg boss tamil season 7 Dinesh and Vishnu raised Maya for showing her underwear

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிரதீப் உடைய வெளியேற்றத்திற்கு பிறகு நிகழ்ச்சி வேற லெவலில் பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதீப் வெளியே போயிருந்தாலும் உள்ளே அவரைப் பற்றிய பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. அந்த மாதிரி தான் இன்று கூட நீதிமன்ற டாஸ்க் நடந்து இருக்கிறது.

இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நீதிமன்ற டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதில் தங்களுக்கு இருக்கும் கேள்விகளை எதிர் தரப்பினர் மீது வழக்காக தொடுத்து கேட்டுக் கொள்ளலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கும் நிலையில் ஏற்கனவே நிக்சன் மாஸ்க் கேட்டபோது மாயா தன்னுடைய உள்ளாடையை தூக்கி காட்டி இது வேண்டுமா? என்று கேட்ட விவகாரம் குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் ஆண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்று சொல்லி தினேஷ் வழக்கு தொடுத்து இருந்தார்.

அதில் இந்த வழக்கு கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. ஆரம்பத்தில் தினேஷ் தனக்கு ஜட்ஜ் ஆக கானா பாலாவை வைக்கலாம் என்று சொல்லி இருந்தார். பிறகு வேண்டாம் பிராவோவே வைக்கலாம் என்று சொல்லி இருந்த நிலையில் பிராவோ ஆரம்பத்தில் இந்த கேசில் சொதப்பி தள்ளி இருந்தார். தினேஷ் பேசும்போது நீங்கள் விரிவாக பேச வேண்டாம் சுருக்கமாக பேசுங்கள் என்று ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டிருந்தார்.

பிராவோ கடைசி நேரத்தில் எப்படியோ சரியான தீர்ப்பை கொடுத்துவிட்டார். இது ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்று இருக்கிறது. அதில் கேசின் ஆரம்பத்திலேயே தினேஷ் மாயாவிடம் நீங்கள் ஒரு ஆண் முன்பு உங்கள் உள்ளாடையை தூக்கி காட்டி இருந்தீங்க. அதுபோல நாங்கள் செய்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அது சரியா என்று கேட்க இது அடல்ட் காமெடி அவ்வளவுதான்.

நாங்கள் சீரியஸாக அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று செய்யவில்லை. சும்மா கிண்டல் செய்தோம் அவ்வளவுதான் என்று விளக்கம் கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் ஆண்களிடம் இது பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்போ நிக்சன் ஒருவேளை நான் மாயா செய்த செயலை பார்த்திருந்தால் அவரை திட்டி இருப்பேன்.

அதுபோல அவர் காமெடிக்காக செய்திருக்கிறார் என்று எனக்கு அப்போதே விளக்கம் தந்திருந்தால் நானும் சேர்ந்து சிரித்திருப்பேன் என்று கழுவுற மீனில் நழுவுறது போல நழுவி இருந்தார். அதைத் தொடர்ந்து கூல் சுரேஷ், மணி போன்றோரிடம் கேட்கும் போது இப்படி எங்கள் முன்பு செய்திருந்தால் நாங்களும் கேள்வி கேட்போம் என்று கூறியிருந்தனர். அப்போது சரவணன் மட்டும் என் முன்பு இப்படி செய்திருந்தால் நான் ஒன்றும் செய்திருக்க மாட்டேன்.

இதை ஒரு பெரிய விசயமாக்கி இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். அப்போது விஷ்ணு இது எப்படி சரியா வரும். நீங்கள் செய்தால் அது காமெடி ஆனால் ஆண்கள் செய்தால் மட்டும் அது உங்களுக்கு அபியூசா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதுபோல நீங்கள் உங்கள் பிராவை தூக்கி காட்டியது போல நானும் ஜட்டியை தூக்கி காட்டினால் உங்களுக்கு ஓகேவா என வெளிப்படையாக கேள்வி கேட்கிறார்.

அதைக் கேட்டு பூர்ணிமா மற்றும் மாயாவின் முகம் மாறிப்போகிறது. அதைத்தொடர்ந்து பிராவோ இது உள்ளே நீங்கள் காமெடியாக இப்படி செய்திருந்தாலும் வெளியே இருந்து பார்க்கும்போது தவறாக தான் தெரியும். அதனால் இந்த வழக்கில் தினேஷ் ஜெயிக்கிறார் என்று கூறியிருந்தார். அதனால் இந்த விவாதம் நடைபெற்ற பிறகு பூர்ணிமா மற்றும் மாயா இருவரும் அழுது கொண்டிருந்தனர்.

அதிலும் மாயா என்னை தயவு செய்து வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் உள்ளே இருப்பவர்கள் யாருமே சரி கிடையாது. இங்கே இருப்பவர்களுக்கு எது காமெடி எது சீரியஸ் என்று தெரியவில்லை. அதனால் என்னை இவர்களோடு இருக்க வைக்க முயற்சி செய்யாதீர்கள். என்னை வீட்டிற்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதுபோல பூர்ணிமாவும் தயவு செய்து என்னையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விடுங்கள். இல்லை என்றால் வெளியில் இருந்து நல்ல அறிவு உள்ளவர்களை மட்டுமே உள்ளே அனுப்புங்க. இப்படி சிந்தனை உள்ளவர்களோடு எங்களால் இருக்க முடியாது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+