பிரதீப்க்கு ரெட் கார்ட் கொடுக்க உண்மையான காரணம் இதுதானா? வெளியான தகவல்.. இதை கவனிச்சீங்களா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் பிரதீப் அதிரடியாக வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
அதே நேரத்தில் பிரதீப்புடைய வெளியேற்றம் சரியானது அல்ல என்று அதிகமானார் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் பிரதீப் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணம் என சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் இப்போது இணையத்தில் அதிகமானோர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி பேசி வருகின்றனர். அதிலும் எதிர்பாராத விதமாக கடந்த சனிக்கிழமை எபிசொடில் பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பெரிய அளவில் சமூக வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
அதுவும் பிரதீப் குறித்து சொல்லப்பட்ட குற்றச்சாட்டு தான் ஏற்புடையது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்கு கெட்ட வார்த்தை பேசி கொண்டு இருக்கிறார். பல நேரங்களில் இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை பேசி இருக்கிறார். ஆனால் அவரால் பிக் பாஸ் வீட்டிற்குள் பாதுகாப்பு இல்லை என்று சொன்னது ஏற்றுக்கொள்ள முடியாது என்று பல நடிகர் நடிகைகளும் தொடர்ச்சியாக பேட்டி கொடுத்து கொண்டிருக்கின்றனர்.
இப்படியாக இருக்கும் நிலையில் பிரதீப்பை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே ஏற்றுவதற்கு சில காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. அதாவது கடந்த சீசன் அசீமிற்க்கு ஏற்கனவே இரண்டு முறை ரெட் கார்ட் கொடுத்து கடைசியில் அவர் டைட்டில் வின்னராக ஜெயிக்க வைக்கப்பட்டது ரசிகர்களில் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி ஒரு நெகட்டிவ் மேஜிக் தொடங்கி விட்டிருக்கிறது.
அதனால் பிக்பாஸ் தரப்பினர் தாங்கள் சரியாக செயல்படுவதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக கூட இப்போது இந்த முடிவை எடுத்து இருக்கலாம். அதுபோல பிரதீப் மீது சில பெண் போட்டியாளர்கள் எங்களுக்கு பிரதீப்பால் பாதுகாப்பு இல்லை என்று கூறி இருந்தாலும் உள்ளே பிரதீப் எப்படி எல்லாம் நடந்து இருக்கிறார் என்பதை பற்றி 24 மணி நேரமும் அங்கு கேமராக்களில் கண்காணிக்கப்பட்டு தானே இருக்கும். அதனால் அவர் மீது தவறில்லை என்றால் கண்டிப்பாக சேனல் தரப்பில் இருந்து வெளியே அனுப்ப மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
அது போல இந்த சீசனில் பிரதீப்புக்கு மட்டுமல்லாமல் உள்ளே அவரைப்போலவே இரட்டை வசனங்களை பேசுபவர்களையும் மாட்டி விட வேண்டும் என்பதற்காகத்தான் 24 மணி நேர காட்சிகளில் உள்ளே சில புல்லி கேங் செய்யும் செயல்களையும் அப்படியே ஒளிபரப்பிற்கு வருகிறார்கள். அதுபோல ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் பேசும் மோசமான வார்த்தைகளையும் கூட டாஸ்க் என்கிற பெயரில் போட்டு காட்டி அவர்களைப் பற்றிய ரகசியத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றனர்.
அதனால் கடந்த சீசனில் ஏற்பட்ட நெகட்டிவ் இமேஜை போக்குவதற்காக பிக் பாஸ் இந்த முறை இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல கடந்த வாரத்தில் பிரதீப்க்கு டோஸ் கிடைத்தது போல இந்த வாரம் நிக்சன் மற்றும் மாயா குரூப்க்கு கண்டிப்பாக கமல் முன்பு தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த வாரம் நிக்சன் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்றும் தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதுபோல பிரதீப் தான் இரண்டாவது வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவேன். அப்போது உள்ளே இரண்டு பேருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் நான் தான் ஏழாவது வார தலைவராக இருப்பேன் என்று பதிவு போட்டு இருக்கும் நிலையில் பிரதீப் இனி மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வருவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் சில தகவல்கள் கூறப்படுகிறது.
இதுவரைக்கும் பிக் பாஸ் வரலாற்றிலேயே இந்த மாதிரி ரெட் கார்ட் வாங்கிக் கொண்டு வெளியே போனவர்கள் யாரும் உள்ளே அனுப்பி வைக்கப்பட்டது கிடையாதாம். அதுபோல தெலுங்கில் மட்டும்தான் ஒருமுறை ரெட் கார்ட் வாங்கிக் கொண்டு போனவர்கள் உள்ளே வந்திருக்கிறார். ஆனால் அவர் சக போட்டியாளரோடு அடிதடி பிரச்சனையில் ஈடுபட்டதால் அவர் வெளியேற்றப்பட்டு சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் உள்ளே வர வைத்திருக்கின்றனர்.
இதனால் பிரதீப் உள்ளே வர வாய்ப்பில்லை. அதுபோல உள்ளே இருப்பவர்களில் இன்று யாருக்கு ஆப்பு இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications