நீ கட்டிப்பிடிக்கும் போது மூடு ஆகிட்டு.. காது கூச வைத்த விக்ரம்.. பூர்ணிமாவின் எதிர்பாராத பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமடைந்த சரவணன் பூர்ணிமாவிடம் ஆபாசமாக பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் சரவணன் உன்னை எனக்கு ஏற்கனவே ரொம்ப பிடிக்கும். ஆனால் நீ என்னை கட்டிப் பிடிக்கும் போது எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறார்.

அதற்கு பூர்ணிமாவும் சாதாரணமாக பேசிக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதனால் பிரதீப் ரசிகர்கள் இவர்கள் மட்டும் இரட்டை அர்த்தத்தில் பேசலாமா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து காதல் கண்டெண்டுகளும் சண்டை சச்சரவுகளும் பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. கடந்த வாரத்தில் யாரும் எதிர் பார்க்காத வகையில் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார். அதை தொடர்ந்து அவரைப் பற்றியே பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் வெளியேயும் பேசப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்கள் குறித்தும் அதிகமான விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது. பிரதீப்பால் பிக் பாஸ் வீட்டுக்குள் பெண்களுக்குள் பாதுகாப்பு இல்லை என்று காரணம் கூறி அவரை வெளியே அனுப்பி வைக்கப்பட்டு இருந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் சிலர் செய்யும் செயல் பலரையும் முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
ஏற்கனவே நிக்சன் மற்றும் ஐசு இருவரும் நெருங்கி பழகி எப்போதும் தொட்டு தடவி பேசிக் கொண்டிருப்பது குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் தொடர்ச்சியாக கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிற்குள் இரவு நேரத்தில் தனியாக சுற்று திரிந்த சரவணன் அதாவது பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் கண்ணனாக பிரபலமானவர்தான்.
இவர் கேமரா முன்பு நின்று கொண்டு நான் தான் இந்த சீசனில் டைட்டில் வின்னர் என்று பேசிக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. அதைத் தொடர்ந்து அவரை வைத்து அதிகமான மீம்ஸ்களும் வலம் வந்து கொண்டிருக்கிறது. காரணம் பிக் பாஸ் விற்குள் சரவணன், மிச்சர் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் என்று ரசிகர்கள் சொல்லும் நிலையில் சரவணன் தன்னை டைட்டில் வின்னர் என்று கூறியது வைத்து பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்போது இன்னொரு வீடியோவும் வெளியாகி இருக்கிறது. அதில் சரவணன் பூர்ணிமா பெட்டில் படுத்து இருக்கும் போது பக்கத்தில் சரவணன் நின்று கொண்டிருக்கிறார். அப்போது சரவணன் பூர்ணிமாவிடம் எனக்கு உன்னை ஏற்கனவே ரொம்ப பிடிக்கும். ஆனால் அன்னைக்கு நீ என்ன கட்டி பிடிச்ச போது எனக்கு ஒரு மாதிரி ஆகிட்டு என்று சொல்ல, அதற்கு பூர்ணிமா என்ன மூட் ஆகிட்டா என்று கூலாக கேட்கிறார்.
அதற்கு சரவணன் அப்படி எப்படின்னு என்னால சொல்ல முடியல, ஆனா ஒரு மாதிரி இருந்து. ஏற்கனவே உன்னை பிடிக்கும். ஆனாலும் அதையெல்லாம் மனசுக்குள்ள மறைச்சு வச்சுட்டு தான், நான் அங்கே இங்கே சாப்பிட்டுவிட்டு அப்படி இப்படி நடந்துக்கிட்டே இருந்தேன். ஆனால் நீயா வந்து என்னை கட்டிப்பிடித்த போது எனக்குள் வந்த ஃபீலிங்கை சொல்ல முடியல என்று பேசி இருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த நிலையில் இப்படி ஓபன் ஆக சரவணன் பேசிய போதும் பூர்ணிமா எதுவும் சொல்லாமல் இருக்கும் நிலையில் இதை குறித்தும் கமல்ஹாசன் முன்பு சரவணன் என்னிடம் தப்பாக பேசினார் என்று கம்ப்ளைன்ட் செய்யப் போகிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications