பிக் பாஸில் ரஞ்சித் அப்படி அழுதாரே? மீண்டும் பிக்பாஸ் வர்றாரா சாச்சனா? இதுதான் மேட்டரா? பிக் பாஸ் 8

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஓபன் எலிமினேஷன், பிராங்க் காமெடி என அடுத்தடுத்த பரபரப்புகளை தந்து கொண்டிருக்கிறது பிக்பாஸ் வீடு.. இந்நிலையில், முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் பிக்பாஸுக்கு வரப்போவதாக, இன்னொரு தகவல் தீயாய் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் தமிழ் 8வது சீசனை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த முறை பிக்பாஸில் கமல்ஹாசன் இல்லாத குறையே தெரியக்கூடாது என்பதற்காக, ஆரம்பத்திலிருந்தே சில விஷயங்களில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

Television

போட்டியாளர்கள்: இந்த சீசனை துவக்கி வைத்த விஜய் சேதுபதி, போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வாழ்த்து சொல்லி வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்.. ஆனால், பங்கேற்பாளர்களிலிருந்து ஒருவர், 24 மணி நேரத்தில் வெளியேற்றப்படவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகி, ஓபன் நாமினேஷன் நடந்தது.. இதையடுத்து, நிஜமாகவே முதல் எலிமினேஷனும் நடந்துவிட்டது.

"ஆண்கள் சொன்னதை போல இந்த வாரத்தில் ஆண் போட்டியாளர்களை பெண்கள் நாமினேஷன் செய்யக்கூடாது என்று சொன்னால் பெண் போட்டியாளர்கள் நமக்குள்தான் நாமினேஷன் செய்ய வேண்டியிருக்கும்.. அதுவும் இந்த முடிவை எடுத்தது நம்ம 4 பேரும்தான்.. அதனால், நீங்கள் என்னை நாமினேஷன் செய்தால், நான் எலிமினேட் ஆகிறேன்" என்று தன் சொல்லி, வாயை விட்டு மாட்டிக் கொண்டார் சாச்சனா.

குழம்பிய போட்டியாளர்கள்: சாச்சானா தெரிந்து பேசினாரா? தெரியாமல் பேசினாரா? என்று குழம்பியவாறே, சக போட்டியாளர்களும் அவரை நாமினேட் செய்தார்கள்.. இறுதியில், அதிக நாமினேஷன் செய்யப்பட்டவர் என்ற முறையில், நடிகை சாச்சனா எலிமினேட் ஆனார்... இதையடுத்து சாச்சனாவின் திறமையை கண்டு வியந்த ரவீந்திரன், அவரை மனதார பாராட்டி அனுப்பி வைத்தார்.

அதேபோல, சாச்சானா எலிமினேஷன் ஆவதை பார்த்து நடிகர் ரஞ்சித் கண்கலங்கி அழுதுவிட்டார்... ஆனால், இதனை கவனித்த இணையவாசிகள், வீட்டிற்குள் வந்து 24 மணி நேரம்கூட ஆகவில்லை.. அதற்குள் ரஞ்சித் எதற்கு கண்கலங்குகிறார்? என்று கேள்வியை கேட்க துவங்கிவிட்டார்கள்.

ரஞ்சித் போலவே, அதிக கவலையை வெளிப்படுத்தியிருந்தவர் அர்னவ்.. சச்சனா வெளியேற்றப்பட்டது குறித்து அன்ஷிதாவிடம் பேசி கண்ணீர் விட்டிருக்கிறார் அர்னவ்... தன்னுடைய மனைவி திவ்யா 3 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவரை உதைத்தீர்களே, சித்ரவதை செய்தீர்களே? அப்போது வராத கண்ணீர், இப்போது ஒருநாள் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் இருந்த சச்சனாவுக்காக இந்த அளவுக்கு வேதனைப்பட்டு கண்ணீர் வடிக்கிறாரே? என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

எலிமினேஷன்: ஆண்கள் vs பெண்கள் என்று பிக்பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டதுதான் எலிமினேஷனுக்கு காரணம் என்று சொன்னாலும், வேறு சில காரணங்களும் இணையத்தில் வட்டமடிக்கின்றன.

அதாவது, கமல்ஹாசன் இல்லாத பிக்பாஸ் நிகழ்ச்சி எப்படி இருக்க போகிறதோ? என்ற கலக்கம் விஜய் டிவிக்கு ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது. அதனால்தான், டிஆர்பி-யை நிகழ்ச்சி துவங்கியதுமே உயர்த்திவிட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாம்...

அதுமட்டுமல்ல, பிக்பாஸ் வீட்டிற்குள் விஜய்சேதுபதி, மீண்டும் வருவதற்கு இன்னும் ஒரு வார காலம் ஆகிவிடும் என்பதால், நிகழ்ச்சி துவங்கிய 24 மணி நேரத்திலேயே எலிமினேஷன் அறிவிப்பு வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று முடிவானதாம். அத்துடன், "ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு" என்று சொன்னால் மட்டும் போதுமா? அதை செயலிலும் காட்ட வேண்டும் என்பதற்காகவும், இந்த எவிக்‌ஷன் நடந்ததாம்.

பிக்பாஸ் எதிர்பார்த்ததுபோலவே, முதல்நாள் எவிக்‌ஷன், டிஆர்பியை உயரச்செய்துவிட்டது என்றாலும், இந்த யுக்தி, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே மைனஸ் பாயிண்ட்டாகவும் அமைந்துவிட்டது.

இணையவாசிகள்: "டிஆர்பிக்காக நன்றாக விளையாடிய பெண்ணை வெளியில் அனுப்புவீர்களா? விளையாட வாய்ப்பே தராமல் வெளியே அனுப்புவது எந்தவகையில் நியாயம்? ரசிகர்கள் ஓட்டு போடாமல் அதெப்படி ஒரு போட்டியாளரை வெளியே அனுப்ப முடியும்?" என்றெல்லாம் இணையவாசிகள் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இப்படி பல நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் விஜய் டிவிக்கு உருவானதை, விஜய் டிவியே எதிர்பார்க்கவில்லையாம்.. பிக்பாஸ் விதிமுறைகளுக்கே, இவையெல்லாம் பின்னடைவாகிவிடக்கூடாது என்பதற்காகவே, மீண்டும் சாச்சனாவை பிக்பாஸ் வீட்டிற்குள் கொண்டு வரப்போகிறார்களாம். வழக்கமாக வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் ஒயில்டு கார்டு மூலம் என்ட்ரி தருவார்கள். ஆனால், சாச்சனாவை அதற்கு முன்பேயே உள்ளே அழைக்கப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

மீண்டும் வருகிறார்: "உன்னிடம் பிடித்ததே உன்னுடைய தைரியம் தான்" என்று சாச்சனாவிடம் பெருமையாக சொன்னவர் விஜய் சேதுபதி. அதற்கேற்றவாறு, அனைத்து போட்டியாளர்களைவிட வயதில் குறைவானவராக இருந்தாலும் சாச்சனாவின் தெளிவான பேச்சு பலரையும் ஈர்த்திருந்தது. எனவே, சாச்சனா இந்த முறை வீட்டிற்குள் வரும்போது, "நின்று விளையாடுவார்" என்றே இணையவாசிகள் நம்பிக்கையுடன் சொல்லி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+