“இவங்க” 4 பேரும் டாஸ்க்கில் பங்கேற்க கூடாது! பிக்பாஸ் அதிரடி அறிவிப்பு.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் 89 ஆவது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் டாஸ்க்கில் அருண், பவித்ரா உட்பட நான்கு போட்டியாளர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் 88 நாட்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரத்தில் டிக்கெட் டூ பினாலேவிற்கான டாஸ்க்கள் தான் நடைபெற்று வருகிறது.

டிக்கெட் டு பினாலே டாஸ்கில் வெற்றி பெறுபவர் நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளராக அறிவிக்கப்படும் நிலையில் இந்த போட்டிக்கான கடுமையான போட்டி நிலவுகிறது. அதனால் போட்டியாளர்களுக்குள் வாக்குவாதங்களும் ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக முத்துக்குமரன், ரயான் இடையே சில நாட்களாகவே மோதல்கள் வெடித்துக்கொண்டே இருக்கிறது.
இந்த நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது ப்ரோமோவில் பிக் பாஸ் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அதாவது டிக்கெட் டு பினாலேவின் கடைசி டாஸ்க்கில் இதுவரைக்கும் விளையாடிய டாஸ்க்கில் பாய்ண்ட் இல்லாத பவித்ரா, ஜாக்குலின் அருண், விஷால் என நான்கு பேரும் கலந்து கொள்ள முடியாது என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார்.
இதனால் அந்த நான்கு பேரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். அதற்கு பிறகு மற்ற எல்லா போட்டியாளர்களும் விளையாடுகிறார்கள். கார்டன் ஏரியாவில் ஒரு ரவுண்டான கடிகாரம் சேப்பில் எண்கள் எழுதப்பட்டிருக்கிறது. அதில் எண்கள் முன்பு ஒரு குழி இருக்கிறது.
கொடுக்கப்பட்டிருக்கும் பந்தை அந்த கடிகாரத்தில் ஏறி நின்று ஆட்டி அதை வெளியே விழாமல் குழிக்குள் மட்டும் விழவைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது தெரிந்து கொள்வதற்காக போட்டியாளர்கள் எல்லோரும் வரிசையில் காத்திருக்கும் போது கடைசியில் ரிசல்ட் சனிக்கிழமை தெரியும் என்று பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
அதேபோல இந்த டாஸ்க்கில் வெற்றி பெற்றது ரயான் தான் என்ற தகவல்கள் ஏற்கனவே வெளியாகி வருகிறது. தற்போது வரைக்கும் நடந்து முடிந்த டாஸ்க்கில் அதிக புள்ளிகள் பெற்றிருப்பது ரயான் தான் அவரை தொடர்ந்து முத்துக்குமரன் இருக்கிறார். ஆனால் கடைசியாக நடந்து முடிந்த டாஸ்க்கில் ரயான் வெற்றி பெற்று இருக்கிறார்.
இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் முத்துக்குமரன் தோல்வி அடைந்திருக்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதே நேரத்தில் எந்த வாரத்தில் வாக்குகளின் அடிப்படையில் மஞ்சரி கடைசி இடத்தில் இருக்கிறார். அவரை தொடர்ந்து பவித்ராவும் அடுத்ததாக அருணும் இருக்கிறார்கள். இன்று இரவு வரைக்கும் வாக்குகள் செலுத்த வாய்ப்பு இருக்கும் நிலையில் இன்று மாலை இறுதியில் வாக்குகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் குறைவாகத்தான் இருக்கிறது.
அதனால் இந்த வாரத்தில் மஞ்சரி எலிமினேஷன் ஆவார் என்று கூறப்படுகிறது. அதுபோல இப்ப வரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் 10 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இவர்களில் யார் டைட்டில் வெற்றி பெறப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இவர்களில் யார் வெற்றி பெற்றால் நல்லது என்று நீங்க நினைக்கிறீங்க?












Click it and Unblock the Notifications