பிக் பாஸ் 8: இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன்? இரவில் பேக்கப் இவரா? சீரியல் நடிகருக்கு வந்த சோதனை!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் இரண்டு எவிக்ஷன் நடைபெறப்போகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதில் யார் வெளியேறப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதை தொடர்ந்து ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் வந்திருக்கின்றனர்.

அதுபோல இந்த நிகழ்ச்சியில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள்தான் கலந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கு முந்தைய சீசன்களை விடவும் இந்த சீசனில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் ரசிகர்களுக்கு நன்றாக பரீட்சயமான முகங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது.
அதுபோல இந்த நிகழ்ச்சியில் இருந்து ரவீந்தர், அர்னாவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, சிவகுமார், சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி போன்றோர் எலிமினேஷன் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் அடுத்த வாரத்திற்கான நாமினேஷன் லிஸ்டில் பவித்ரா, அருண், சத்யா, தர்ஷினி, ஜாக்குலின், சௌந்தர்யா, அன்ஷிதா, வி.ஜே விஷால், ரயான் போன்றோர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் நடைபெற்று சாச்சனா மற்றும் ஆர்ஜே ஆனந்தி இருவரும் வெளியேற்றப்பட்டது போல இந்த வரமும் இரண்டு எவிக்ஷன் நடைபெற வேண்டும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அதுபோல நிகழ்ச்சி கிட்டத்தட்ட 65 நாட்களைத் தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் இன்னும் அதிகமான போட்டியாளர்கள் இருப்பதால் இரண்டு எவிக்ஷன் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
போட்டியாளர்கள் குறைக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள், அப்போது ஏற்கனவே எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் ரீ என்ட்ரி கொடுப்பார்கள். இதுதான் வழக்கமாக நடப்பது. அதனால் இந்த வாரத்தில் இரண்டு எவிக்ஷன் நடப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ரசிகர்கள் இந்த வாரத்தில் விஜே விஷால் மற்றும் தர்ஷிகா இருவரையும் வெளியேற்றினால் நன்றாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

இவர்களுடைய காதல் கண்டென்ட் ரசிகர்கள் ரசிக்கும்படி இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. அதே நேரத்தில் வாக்குகளின் அடிப்படையில் சத்யா மற்றும் தர்ஷிகா இருவரும் வெளியேற்றுவதற்கு தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் தாரக மந்திரம். அதுபோல பலமுறை இந்த நிகழ்ச்சியில் நடைபெற்றிருக்கிறது.
இந்த முறையும் எதிர்பார்க்காத மாற்றம் நடைபெறப்போகிறதா? அல்லது ரசிகர்கள் எதிர்பார்க்கும் விஷயம் நடக்கப்போகிறதா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications