Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் 8 பைனலில் சௌந்தர்யா சொன்னது எதிர்பார்க்காதது! கலங்கிய முத்துக்குமரன்.. பெருந்தன்மையான சொல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நேற்று நடைபெற்றது. அப்போது முத்துக்குமரன் வின்னர் என்று அறிவிக்கப்பட்டதும் சௌந்தர்யா சொன்ன வார்த்தை யாரும் எதிர்பார்க்காதது. அது குறித்து இணையத்தில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சி 18 போட்டியாளர்களோடு கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆரம்பமே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு பிறகு நிகழ்ச்சி சுவாரசியம் குறைய தொடங்கியதாக ரசிகர்கள் பீல் பண்ணினார்கள். அந்த நேரத்தில் ஆறு வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அனுப்பப்பட்டனர்.

bigg boss tamil television bigg boss tamil 8 8

ஆனால் அதற்கு பிறகு அடுத்தடுத்து ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் வெளியேறியதை தொடர்ந்து 5 போட்டியாளர்கள் மட்டுமே பைனலுக்கு தேர்வாகி இருந்தனர். அதில் முத்துக்குமரன் தான் டைட்டில் ஜெயிக்கப் போகிறார் என்பது எல்லோருக்குமே தெரிந்தது. ஆனாலும் கடைசியில் ரன்னராக சௌந்தர்யா வந்தது எதிர்பார்க்காத சம்பவம்தான்.

நேற்று முன்தினம் அதாவது சனிக்கிழமை வரைக்கும் முத்துக்குமரன் வின்னராகவும், விஜே விஷால் ரன்னர் என்று கூறப்பட்டது. அது பெரிய அளவில் எதிர்ப்புகளை சந்தித்து வந்தது. அதனால் திடீரென்று ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் ரன்னராக சௌந்தர்யா அறிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

bigg boss tamil television bigg boss tamil 8 8

இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருந்தாலும் நேற்று பினாலே மேடையில் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் நடைபெற்றது. அதாவது முத்துக்குமரன் மற்றும் சௌந்தர்யா கைகளை பிடித்த படி விஜய் சேதுபதி இந்த சீசனில் டைட்டில் வின்னர் யார் என்று சிறிது நேரம் அலைக்கழித்தார். பிறகு முத்துக்குமரன் என்று சொல்லிவிட்டார்.

அப்போது சௌந்தர்யாவும் மகிழ்ச்சி அடைந்திருந்தார். அந்த நேரத்தில் முத்துக்குமரன் அம்மா பேசும்போது, தமிழ்நாட்டின் கடைகோடியில் இருந்த ஒரு பையனை கூப்பிட்டு பெருமைப்படுத்திட்டீங்க. எங்களுக்கெல்லாம் சென்னைனா பயம். அப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்த பையன் ஜெயித்திருக்கான் என்றால் இனி எல்லாராலயும் முடியும் என்று முத்துவின் அம்மா உணர்ச்சிகரமாக பேசியிருந்தார்.

bigg boss tamil television bigg boss tamil 8 8

அப்போது முத்துக்குமார் அம்மாவும் விஜய் சேதுபதியும் பேசிக் கொண்டிருக்கும் போது அந்த கேப்பில் கோப்பையை சௌந்தர்யாவிடம் காட்டுவதற்காக முத்துக்குமரன் போய்விட்டார். உடனே விஜய் சேதுபதி நான் இங்கே பேசியே முடிக்கல.. அதுக்குள்ள என்ன? என்று ஜாலியாக கலாய்த்தார்.

அதைத்தொடர்ந்து சௌந்தர்யாவிடம் முத்துவின் வெற்றி பற்றி விசாரித்தார். அப்போது சௌந்தர்யா நான் கூட என் கையை தூக்கிடுவீங்களோ என்று பயந்துட்டேன். அப்படி நடந்திருந்தால் என் அப்பாவே என்கிட்ட இருந்து அந்த ட்ராபியை பிடுங்கி முத்துகிட்ட கொடுத்திருப்பாரு என்று ஜோக் அடித்தார்.

bigg boss tamil television bigg boss tamil 8 8

முத்து இந்த விருதுக்கு தகுதியானவர் என்று சௌந்தர்யா சொன்னது பாசிட்டிவான ஒரு தருணமாக இருந்தது. சௌந்தர்யா இப்படி சொல்வார் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதுபோல முத்துக்குமரன் பேசும்போது இது என்னுடைய வெற்றி அல்ல. எங்கள் 24 பேருடைய வெற்றி.

பிக் பாஸின் உழைப்பு இதற்கு பின்னால் இருக்கிறது. ஏழ்மையான நிலையில் அந்த இருட்டான சூழலில் கூட தன்னம்பிக்கையும் தன்மானத்தையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்த ஒரு பெண்ணின் வெற்றி இது. அது எங்க அம்மா. அவங்க எனக்கு கற்றுக் கொடுத்தது இரண்டே விஷயங்கள். ஒன்று தமிழ், இரண்டாவது உழைப்பு. அதுதான் என்னை இந்த உயரத்தில் கொண்டு வந்தது என்று உணர்வு பூர்வமாக பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+