அர்னவ் எவிக்சன் தொடர்ந்து அடுத்த வெளியேற்றம்..? கொளுத்தி போட்ட பிக்பாஸ்.. ஆட்டம் ஆரம்பம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் அக்டோபர் 21ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதில் இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார்கள் என்பதற்கான நாமினேஷன் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் அதிகமாக பெண் போட்டியாளர்கள் தான் நாமினேஷன் செய்யப்படுகிறார்கள்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி தொடக்கப்பட்டு இரண்டு வாரம் முடிவடைந்து இருக்கிறது. இதில் முதல் வாரத்தில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது வாரத்தில் அர்னவ் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனில் 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்ட நிலையில் இதில் ஒன்பது ஆண் போட்டியாளர்களும், ஒன்பது பெண் போட்டியாளர்களும் கலந்து கொண்டனர்.

இப்போது ஆண்கள் அணியில் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில் இந்த வாரத்தில் யார் வெளியேற்ற பட போகிறார்கள் என்பதற்கான நாமினேஷனை இன்றைய முதல் ப்ரோமோவில் பிக் பாஸ் அறிவித்திருக்கிறார். அதில் இந்த வாரம் மிக்ஸ் நாமினேஷன் யார் யாரை வேணாலும் நாமினேசன் செய்யலாம் என்று கூறியிரக்கிறார்.
அதில் முதல் ஆளாக விஜே விஷால் ஜாக்லினை நாமினேஷன் செய்கிறார். பர்சனலா ரொம்ப ஷேடோ பண்ற மாதிரி இருக்கு என்று அவர் அதற்கான காரணத்தை சொல்லி இருக்கிறார். அதை தொடர்ந்து சத்யா வாண்டடா வந்து நிறைய விஷயங்களில் ஈடுபடுறாங்க என்று ஜாக்லினை அவரும் நாமினேஷன் செய்கிறார்.
இவர்கள் இருவரையும் தொடர்ந்து பெண்கள் அணியில் இருந்து ஆர்.ஜே ஆனந்தி சௌந்தர்யாவை நாமினேஷன் செய்கிறார். அதற்கான காரணம் அவங்க டீமுக்குன்னு எந்த விஷயத்தையும் செய்யாத மாதிரி இருக்குது என்று சொல்கிறார். சௌந்தர்யா இரண்டு வாரங்களாக நாமினேஷனில் வந்தாலும் அதிகமான வாக்குகளை பெற்றுக் கொண்டிருக்கிறார். ஆனால் வீட்டிற்குள் எவ்வளவு கலவரம் நடந்தாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் தான் உண்டு, சாப்பாடு உண்டு என்று இருக்கும் சௌந்தர்யாவை இந்த வாரமும் போட்டியாளர்கள் குத்த தொடங்கி விட்டார்கள்.
அடுத்ததாக ஆண்கள் அணியில் இருந்து ரஞ்சித் கலந்து கொள்கிறார். அவர் அன்ஷிதாவை நாமினேஷன் செய்கிறார். அதற்காக அவர் கூறிய காரணம், அன்ஷிதா எப்போதும் யாரையாவது சார்ந்து இருப்பதாக எனக்கு தோன்றுகிறது என்று சொல்லி இருக்கிறார். இதில் அதிகமான நாமினேஷனை பெற்ற ஜாக்குலின் சுவாரஸ்யம் ரொம்ப கம்மியா இருக்குற மாதிரி இருக்கு என்று அன்ஷிதாவை நாமினேஷன் செய்கிறார்.

அதுபோல சுனிதா சத்யா பார்டிசிபேஷன் ரொம்ப கம்மியா கொடுக்கிறார் என்று அவரை நாமினேஷன் செய்கிறார். அடுத்ததாக அன்ஷிதா சத்யாவை நாமினேஷன் செய்கிறார். கடைசியாக முத்துக்குமரன் பவித்ரா ஜனனி ரொம்ப சேஃப்பா விளையாடுறாங்களோ என்று எனக்கு தோன்றுகிறது என்று நாமினேஷன் செய்திருக்கிறார்.
இதில் இந்த வாரம் அதிகமான பெண் போட்டியாளர்கள் தான் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள் என்று தெரிகிறது. கடந்த வாரத்தில் ஆண்கள் எல்லோரும் பெண்களில் யாரை நாமினேஷன் செய்ய வேண்டும் என்று பிளான் போட்டு கடைசியில் அது சொதப்பலில் முடிந்திருந்தது. மூன்று போட்டியாளர்கள் தான் பெண்கள் அணியில் நாமினேஷனுக்கு வந்திருந்தனர்.
அதனால் போன வாரம் அதிகமாக ஆண் போட்டியாளர்கள் தான் நாமினேஷன் லிஸ்டில் இடம் பிடித்தார்கள். இந்த வாரத்தில் எல்லோரும் பிளான் போடாமல் அவரவர்கள் தங்களுடைய கருத்தை தெரிவிக்கிறார்கள். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications