சிவக்குமாருக்கு ராம்குமார் சொத்து கிடைக்குமா? சிவாஜி பேரனை அரவணைக்கும் நடிகை ஸ்ரீபிரியா: பிரபலம் நச்
சென்னை: "சிவாஜி குடும்பத்தினரால் சிவக்குமார் கைவிடப்பட்டாலும், ராம்குமாரால் மனரீதியாக கைவிடப்பட்டுவிட்டார் என்று உறுதியாக சொல்ல முடியாது. மனரீதியாக சிவக்குமாரை கைவிடுவதானால், அதை என்றோ ராம்குமார் அறிவித்திருப்பார்" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார்.
Kingwoods TV சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டி ஒன்றை தந்துள்ளார். அந்த பேட்டியில், "ஸ்ரீபிரியா யார் என்பதை முதலில் சொல்லியாகணும்.. எல்லாரும் அறியப்பட்ட நடிகைதான்.. ரஜினியின் பில்லா படத்திலும், பைரவி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர்.. சிவாஜியுடன் பல படங்களில் நடித்தவர்.

தமிழ் சினிமா ஹீரோயின்களில், ஸ்ரீபிரியாவுக்கு எப்போதுமே ஒரு முக்கிய இடம் உள்ளது.. ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்ற 2 சூப்பர் ஸ்டார்களுடன் நட்பாய் இருப்பவர்.
பாலச்சந்தர்: ஒரு பேட்டியில் பாலச்சந்தர் சொன்னார், "ஸ்ரீபிரியா இல்லை என்றால் ரஜினி இல்லை" என்றார். காரணம், ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்ட சூழலில், அவரை பாதுகாத்து, பராமரித்தது ஸ்ரீபிரியாதான். ரஜினி மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்ட அந்த சூழலில், பாதுகாத்தது ஸ்ரீபிரியாதான். அதேபோல, அரசியலுக்கு கமல் வந்தபோது, அவருக்கும் துணை நின்றவர்தான் ஸ்ரீபிரியாதான்.
ஸ்ரீபிரியாவின் உடன்பிறந்த அக்கா மீனாட்சி.. இவர், ராம்குமாரின் சட்டப்பூர்வ மனைவி இல்லை என்று சொல்லப்படுகிறது... அதேசமயம் திருமணமாகாத உறவில் இருந்திருக்கிறார்.
ஸ்ரீபிரியா: சிவாஜி காலத்தில் "லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்" என்பது தப்பான விஷயமாக பார்க்கப்பட்டது. மிகப்பெரிய நடிகராக சிவாஜி இருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் எந்த குறையும் காண முடியாது. ஆனால், ராம்குமார் - ஸ்ரீபிரியாவின் அக்கா மீனாட்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது. சிவாஜி சாயலில், சிவக்குமார் என்ற இளைஞரை பற்றி, இப்போதுதான் சோஷியல் மீடியாவில் செய்திகள் அதிகமாக வருகின்றன.
தனிப்பட்ட முறையில் இந்த விவகாரம் நமக்கு தேவையில்லை என்றாலும், பாதிக்கப்பட்ட நபர் என்ற முறையில் சிவக்குமாருக்காக நிற்க வேண்டியிருக்கிறது. சிவக்குமாரை சட்டப்பூர்வ ஏற்றுக்கொள்வார்களா? இல்லையா? என்பதெல்லாம் அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால், எந்த இடத்திலும், சிவக்குமாரை இதுவரை தன்னுடய மகன் என்று ராம்குமார் சொல்லவில்லை. சிவக்குமாரும் முழுக்க முழுக்க ஸ்ரீபிரியா கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
சிவாஜி அடையாளம்: சில வருடங்களுக்கு முன்பு, "சிங்கக்குட்டி" படம் ஸ்ரீபிரியா தயாரிப்பில் சிவக்குமார் நடித்து வெளியாகியிருந்தது. அப்போது சிவாஜியின் அடையாளத்தை சிவக்குமார் பயன்படுத்தக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாக இன்னொரு தகவலும் உலாவியது.
ஏற்கனவே 2 விஷயத்தில் சிவாஜி காயப்பட்டிருந்தார்.. ஒன்று குஷ்பு விவகாரம்.. திருமணமானவர் என்று தெரிந்தும் பிரபு குடும்பத்தில் குஷ்பு நுழைய முயன்றதுடன், சட்டப்பூர்வமாக வெளிப்படையாக தன்னை மனைவியாக ஏற்று கொள்ள வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தார். இப்படியொரு நெருக்கடி சூழ்நிலையின்போது, ஒரு குடும்ப தலைவனாக இருந்து அனைத்தையும் சரிசெய்தார் சிவாஜி. அதேபோல அவரது பாசத்துக்கு குடும்பமே கட்டுப்பட்டது. சின்ன எம்ஜிஆர், அதாவது தன்னுடைய பேத்தியின் கணவர் விஷயத்திலும் சிவாஜி காயப்பட்டிருந்தார்...
சிவக்குமார்: இன்று சிவாஜி குடும்பத்தின் மூத்தவராக ராம்குமார் விளங்குகிறார்.. அப்படியிருக்கும்போது, சிவக்குமாரை அங்கீகரித்து கொண்டால், பிறருக்கு தப்பான உதாரணமாக ஆகிவிடுவார். மேலும், சிவாஜி குடும்பத்தில் சட்டப்பூர்வமான மனைவி சார்ந்த பிள்ளைகளுக்குதான் சொத்துக்கள் போகும். அந்தவகையில் சிவக்குமாருக்கு அங்கீகாரம் தருவதானால், சொத்துக்களையும் தர வேண்டியிருக்கும். அனால் இதை ராம்குமார் மட்டுமே முடிவு செய்ய முடியாது.
வேண்டுமானால் தன் சொந்த உழைப்பில் சொத்து இருந்தால், அதை சிவக்குமாருக்கு தர வாய்ப்புள்ளது. ஆனால், சிவக்குமார் தரப்பில் சொத்து பற்றி எதுவுமே கேட்கவில்லை.. அவர்கள் அங்கீகாரம் மட்டுமே கேட்பதாக தோன்றுகிறது.
ராம்குமார்: சிவாஜி குடும்பத்தினரால் சிவக்குமார் கைவிடப்பட்டாலும், ராம்குமாரால் மனரீதியாக கைவிடப்பட்டுவிட்டார் என்று உறுதியாக சொல்ல முடியாது. காரணம், மனரீதியாக சிவக்குமாரை கைவிடுவதானால், அதை என்றோ ராம்குமார் அறிவித்திருப்பார். ஆனால், இதுவரை அப்படி சொல்லவில்லை. நாலு சுவற்றுக்குள் உளப்பூர்வமான முறையில் மகன் என்று அங்கீகாரம் தந்திருக்கலாம். அதை பகிரங்கமாக குடும்ப கவுரவத்துக்காக சொல்லாமல் இருக்கலாம். மொத்தத்தில் சிவக்குமாரை ராம்குமார் ஏற்றுக்கொள்ளவுமில்லை, அவரை மறுக்கவுமில்லை
அதேபோல, நல்ல வாய்ப்பு கிடைத்தால், தன்னுடைய திறமைகளை வெளிக்காட்டி, மிகப்பெரிய ஹீரோவாகவும் சிவக்குமார் வருவார்" என்று சேகுவேரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications