பிக்பாஸை விட்டு போனதும் கானா வினோத் செய்த சம்பவம்.. முதலில் சந்தித்த தலைவர்! அலப்பறை ஆரம்பம்
சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த முதல் நாளிலிருந்தே கானா வினோத், "டாஸ்க் மட்டும் இல்ல... டைமிங் காமெடியும் முக்கியம்" என்பதை நிரூபித்துக் கொண்டே இருந்தார். மற்றவர்கள் ஸ்கிரிப்ட் படிச்ச மாதிரி பேசிக்கொண்டிருந்த நேரத்தில், இந்த மனுஷன் நேரா நம்ம மனசுக்குள்ள இருக்கிற டயலாக்கையே போட்டு உடைத்தார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 என்றாலே "யார் ஜெயிப்பார்?" என்ற கேள்வியை விட, "யார் எப்போது பணப்பெட்டியை தூக்கப் போகிறார்?" என்பதே இந்த சீசனின் நிரந்தர சஸ்பென்ஸாக மாறியிருந்தது. அந்த சஸ்பென்ஸுக்கு சரியான ட்விஸ்ட் கொடுத்தவர் தான் கானா வினோத். டைட்டில் வின்னர் லிஸ்ட்டில் ரசிகர்கள் மனசிலே கிட்டத்தட்ட கப் தூக்கி விட்ட நிலையில், டக்கென 18 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை தூக்கிக்கொண்டு அவர் வெளியேறியது, பிக் பாஸ் வரலாற்றிலேயே ஒரு "பெரிய பீப் சவுண்ட்" தருணமாக மாறியது.

அதனால் தான் பல நேரங்களில் "இவன் நாம நினைக்கிறதையே பேசுறானே!" என்ற உணர்வு ரசிகர்களுக்கு வந்தது. பிக் பாஸ் வீட்டில் பாடல், கலாய், நக்கல், நையாண்டி எல்லாத்தையும் ஒரு கானா மிக்ஸாக கொடுத்து, நிகழ்ச்சியையே கொஞ்சம் லைட்டாக மாற்றியவர் கானா வினோத்.
இந்த சீசனில் பங்கேற்ற பலர் சமூக வலைதளங்களில் உருவான செலிப்ரிட்டிகள் என்றாலும், கானா வினோத் அந்த கூட்டத்தில் சேர்ந்தவர் அல்ல. சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக கானா பாடல்கள் மூலம் மக்களிடம் நேரடியாக கனெக்ட் ஆனவர். அதனாலேயே பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் அவர் "ஆடியன்ஸ் பல்ஸ்" பிடிச்சு விளையாடினார்.
ஆரம்பத்தில் திவாகருடன் சேர்ந்து செய்த சேட்டைகள், நட்பு, காமெடி எல்லாம் ரசிகர்களை கட்டிப்போட்டது. ஒருகட்டத்தில் அந்த நட்பே அவர்களுக்கு சிக்கலாக மாறினாலும், கானா வினோத் வெளியேறிய போது திவாகர் கதறி அழுத காட்சி, பிக் பாஸ் வீட்டில் அரிதாக கிடைக்கும் உண்மையான உணர்ச்சிகளில் ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
வெளியே வந்த பிறகு கானா வினோத்துக்கு கிடைத்த வரவேற்பு, "டைட்டில் இல்லையென்றால் என்ன... மக்கள் மனசில் கப் நம்ம கையில்தான்" என்பதற்கு நேரடி சாட்சி. குடும்பம், நண்பர்கள், ரசிகர்கள் என அனைவரும் மேளதாளத்துடன் வரவேற்றனர். அதில் முக்கியமாக, சட்டமேதை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதும், அதற்கு முத்தம் கொடுத்து அன்பை வெளிப்படுத்தியதும், சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது.
பிக் பாஸ் டைட்டில் யாருக்கு போகும் என்பது இன்னும் கேள்விக்குறியாக இருந்தாலும், இந்த சீசனின் "மக்கள் வின்னர்" பட்டம் கானா வினோத்துக்கே என்று சொல்லும் ரசிகர்களின் குரல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பிக் பாஸ் வீட்டில் கப் இல்லாமலே கிங் ஆக முடியும் என்பதை நிரூபித்த ஒரு போட்டியாளர் என்றால், அது கானா வினோத் தான் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications