Bigg Boss: விஜய் சேதுபதி காருக்குள் போட்டு கொடுத்தாரா? பிக் பாஸில் இரவு லைவில் ரகசியத்தை உடைத்த பிரஜன்
சென்னை: விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்று யாரும் எதிர்பார்க்காத விதமாக கெமி வெளியேற்றப்பட்டார். கெமி மற்றும் பிரஜன் இருவரையும் கார் மூலம் வெளியேற செய்துவிட்டு, ஒருவர் வெளியேற்றப்படுவார், ஒருவர் உள்ளே வருவார் என்று அறிவித்ததுமே அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாண்ட்ராவின் மயக்கம்
பிரஜன் வெளியேறுவார் என்று நினைத்து அவரது மனைவி சாண்ட்ரா கதறி அழுது கொண்டிருந்தார். பிறகு பிரஜன் மட்டும் மீண்டும் உள்ளே வந்ததும் அழுதுகொண்டே மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் பிக் பாஸ் வீட்டில் அனைவரும் பதறிப் போனார்கள். இந்த பஞ்சாயத்துகள் ஒருபுறம் இருக்க, கடந்த சனி கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பிரஜனை அதிகமாக ரோஸ்ட் செய்திருந்தார். காரணம் போன வாரம் பிரஜன் போட்ட ஆட்டம் அப்படி; பல இடங்களில் வார்த்தையை விட்டுவிட்டார். அடித்து விடுவேன் கொலை செய்து விடுவேன் என்பது போலவே மற்றவர்களை மிரட்டிக்கொண்டு இருந்தார் என்றும் அவருக்கு அதிகமான நெகட்டிவ் வந்தது.
இதனால் அதிகமான ட்ரோல் செய்யப்பட்டது. அதை பார்த்ததும் விஜய் சேதுபதியின் கண்டித்தும்கூட, நான் செய்தது தவறு இல்லை என்பதுபோலவே பிரஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி, 'சொல்லுங்க சார், வாங்க சார், போங்க சார்' என்று சார் போட்டு பேசி தன் கோபத்தை வெளிக்காட்டினார். ஆனால், இதை பிரஜன் கவனிக்கவே இல்லை என்பதுதான் சுவாரசியம்.
காருக்குள் நடந்த ரகசியம்
நேற்று பிரஜனை கார் மூலம் வெளியே கூட்டிக்கொண்டு போகும்போது, யாருக்கும் தெரியாமல் விஜய் சேதுபதி பிரஜனுடன் காருக்குள் சென்று பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது பிரஜனுடைய விளையாட்டு தவறாக போய்க்கொண்டு இருக்கிறது, அதை மாற்ற வேண்டும் என்று விஜய் சேதுபதி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்துவிட்டார் என்று பலர் சொல்லி வருகிறார்கள்.
அதற்குக் காரணம், வீட்டிற்குள் வந்த பிரஜன் சாண்ட்ராவிடம் பேசும்போது "என்னுடைய விளையாட்டுத் தப்பா போயிட்டு இருக்குன்னு விஜய் சேதுபதி சொன்னாரு" என்று ஒரு இடத்தில் உளறியிருந்தார். அப்போது திவ்யா கவனித்து, அண்ணா இப்ப வேண்டாம் என்று அந்தக் கதையை மாற்றியிருந்தார்.
மக்களின் பார்வை
அதற்கு பிறகு இன்னொரு இடத்திலும் பிரஜன் இதேபோல வார்த்தையை விட்டுள்ளார். அதாவது, சாண்ட்ரா அழுதுகொண்டிருந்தபோது, "அவள் முகத்துக்குத் தான் மொத்த கிளோஸ் அப்பும் வைத்திருந்தார்கள், அவள் இப்படிப் பண்ணுவாள்ன்னு நானும் நினைக்கல, அவளுக்கு என் மீது பாசம் அதிகமாக உண்டு, அவங்க அப்பா இறந்தபோதும்கூட இப்படி அழல, ஆனால் நான் வெளியே போறேன்னு அழுதா, ஆனா அதுதான் அதிகமாகக் காட்டப்பட்டு இருந்ததாம்" என்றும் சொல்லிவிட்டார்.
ரசிகர்களின் கேள்வி
பிரஜன் சொன்னதைக் கேட்ட ரசிகர்கள் பலரும் "வெளியே போய்க் கொண்டிருக்கும் விஷயமெல்லாம் பிரஜனுக்கு விஜய் சேதுபதி சொல்லிவிட்டாரா? அதனால் தான் அவர் இப்படி எல்லாம் பேசினாரா" என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்திலிருந்து பல சர்ச்சைகள் மற்றும் அதிர்ச்சித் திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது. பிரஜன் விஷயத்தில் என்ன நடந்தது என்பது வரும் நாட்களில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications