சீரியலில் இருந்து நானாக விலகவில்லை.. நடந்தது இதுதான்.. துரோகம்! பிக் பாஸ் தாமரை ஆதங்கம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 மூலம் தமிழக மக்களுக்கு பரிச்சயமான முகமாக மாறியவர் தாமரைச் செல்வி. மேடை நாடக உலகில் ஏற்கனவே தனக்கென ஒரு இடம் பிடித்திருந்தாலும், அந்த வட்டத்தைத் தாண்டி எல்லா தரப்பு பார்வையாளர்களிடமும் சென்று சேர்ந்தது இந்த நிகழ்ச்சிதான் என்று பலமுறை கூறியுள்ளார். நாடக மேடைகளில் பாடி ஆடி ரசிகர்களை கவர்ந்த அவர், அந்த ஏரியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றபோது, "சில நாட்களில் வெளியே வந்துவிடுவார்" என்று பலரும் நினைத்த நிலையில், 90 நாட்களுக்கும் மேலாக உள்ளே இருந்து தனது இயல்பான பேச்சாலும், தைரியமான கேரக்டராலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சி அவருக்கு பிரபலத்தையும், புதிய வாழ்க்கை பாதையையும் திறந்தது.
சீரியல் வாய்ப்பு
நிகழ்ச்சி முடிந்த பிறகு மீண்டும் மேடை நாடகத்துக்கே திரும்பிவிடுவாரா என்று பலர் எதிர்பார்த்த நேரத்தில், விஜய் டிவி அவருக்கு சீரியல் வாய்ப்பை கொடுத்தது. தற்போது ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் ஹீரோயினியின் அம்மா கேரக்டரில் நடித்தார். குடும்பம் சார்ந்த காட்சிகளில் இயல்பான நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இவருக்கு பதில் இவர்
ஆனால் சமீபத்தில் அந்த சீரியலில் தாமரைச் செல்விக்கு பதிலாக வேறு நடிகை நடிக்க ஆரம்பித்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டிதான் இப்போது பேசப்படுகிறது. அதில், "என்னை அறிமுகம் செய்து சோறு போட்ட நாடகத்தை நான் விட முடியாது. அதே நேரத்தில் பிக் பாஸ் பிறகு சின்னச் சின்ன ஈவென்ட்ஸ், சினிமா வாய்ப்புகள் வந்தது. எல்லாத்தையும் பேலன்ஸ் பண்ணும் போது ஒரே ஒரு நாள் ஷூட்டிங் டேட் கொடுக்க முடியாம போயிடுச்சு. அதுக்காக உடனே சீரியலிலிருந்து என்னை மாற்றிட்டாங்க. வருத்தம்தான்... ஆனா என்ன பண்றது?" என்று வருத்தமாக கூறியுள்ளார்.
மறக்க முடியாத அனுபவம்
இந்த அனுபவம் அவருக்கு ஒரு முக்கியமான முடிவை எடுக்க வைத்திருக்கிறது. இனிமேல் சினிமாவில்தான் கவனம் செலுத்தப் போகிறேன் என்றும், ஒரு படம் ஏற்கனவே முடிந்து ரிலீஸுக்காக காத்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறியுள்ளார். அதுபோல விஜய் டிவியில் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற நிகழ்ச்சியிலும் அவருடைய கணவரோடு கலந்து கொண்டார். அதற்கு பிறகு விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளில் சின்ன சின்னதாக வந்து கொண்டிருக்கிறார்.
இதே பேட்டியில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளப் போவதாக வந்த தகவல் விளக்கம் கொடுத்திருக்கிறார். நிகழ்ச்சிக்காக அழைத்து, ஷூட்டிங் கடல், மலை போன்ற இடங்களில் இருக்கும், ரொம்ப த்ரில்லாக இருக்கும் என்று சொல்லி பேசினார்கள். நான் எல்லாத்துக்கும் ரெடியா இருக்கேன் என்றேன். "போயிட்டு வாங்க, கூப்பிடுறோம்" என்றார்கள். ஆனால் அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை. அடுத்த முறை பார்க்கலாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அந்த நிகழ்ச்சியிலும் நான் இல்லை என்று பேசியிருக்கிறார்.

தாமரை செல்வி போஸ்ட்
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் பொதுவாக ஆமை புகுந்த வீடு விளங்காதுன்னு சொல்லுவாங்க, அதே போல என்னுடைய வாழ்க்கையில் ஒரு ஆமை என் கூடவே இருந்து என்னுடைய வாழ்க்கையை அழித்துவிட்டது. அந்த ரெண்டு பேரால் என்னுடைய வாழ்க்கை சிதைந்து போயிருக்கிறது. அதைப்பற்றி நான் விரைவில் உங்களிடம் பேசுகிறேன் என்று பேசியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு மேடை நாடக நடிகையாக ஆரம்பித்து, ரியாலிட்டி ஷோ, சீரியல், சினிமா என பல துறைகளில் தன்னை முயற்சி செய்து பார்க்கும் தாமரைச் செல்வியின் பயணம் எளிதானது அல்ல. வாய்ப்பு வந்தாலும் அதை தக்கவைத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதையும், அதே நேரத்தில் தன் அடையாளத்தை விட்டுக் கொடுக்க முடியாத நிலையும் இந்த பேட்டியில் வெளிப்படுகிறது.
சீரியலிலிருந்து விலகியிருக்கிறார் என்றாலும், அது அவரின் பயணத்தின் முடிவு அல்ல. "இப்போ சினிமாவே என் கவனம்" என்று அவர் சொல்வதில் ஒரு புதிய நம்பிக்கை தெரிகிறது. மேடை முதல் பிக் பாஸ் வரை வந்த அந்த இயல்பான தாமரைச் செல்வியை, ரசிகர்கள் விரைவில் பெரிய திரையிலும் பார்க்கப் போகிறார்கள் என்பதே தற்போது அவரைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பு.
-
நீயா நானாவில் யாமினி சொன்ன காதல் கதை.. கண்கலங்கி நின்ற கோபி நாத்.. கடைசியில் சொன்ன ‘நச்’ அட்வைஸ் -
சித்திரை திருநாளில் கிடைத்த பரிசு.. இரண்டு வருடம் கழித்து பிறந்த குழந்தை.. பிரதீப் ஆண்டனி நெகிழ்ச்சி பதிவு -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
இதுவும் கடந்து போகும்.. பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் மறுபக்கம்.. நீயா நானாவில் கண் கலங்கிய அம்மா -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications