கண்ணீரே வரல நல்லா பாருங்க... மீண்டும் கெத்தாக களமிறங்கிய ஜூலி.. ரசிகர்கள் கூறும் அந்த வார்த்தை
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் ஜூலியை டார்கெட் செய்யும் போட்டியாளர்களுக்கு ஜூலியின் பதில் அனைவரையும் கவர்ந்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்துவரும் திருடன் போலீஸ் விளையாட்டில் ஜூலி தன்னுடைய விளையாட்டை தொடங்கியிருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக களமிறங்கிய ஜூலி, இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக வீர மங்கையாகவும், வீரதமிழச்சியாகவும் பலருக்கும் பரிச்சயமாக சமூக வலைத்தளத்தில் இவருக்கு இருந்த வரவேற்பு காரணமாக இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்திருந்தது. அவருடன் கலந்து கொண்டவர்களில் அனைவரும் நடிகர்களாக இருந்தாலும் இவர் ஒரு சமூகப் போராளியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.

அதிகரித்த நெகட்டிவ் கருத்துக்கள்
முதல் சீசனில் இவருக்கு கிடைத்த வாய்ப்பு இவருடைய கேரக்டரை முழுமையாக மாற்றி காட்டிவிட்டது. அனைவரிடமும் நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று இவர் அந்தப் பக்கம் ஒரு பேச்சு இந்த பக்கம் ஒரு பேச்சு என்று பேசியது இவருக்கு ஆப்பு வைக்கும் விதமாக குறும்படம் மூலமாக இவருடைய குட்டு உடைந்தது. தான் செய்தது தவறு என்பதை இவர் உணரும் முன்பு இவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இழந்த பெயரை மீண்டும் பெற்றுவிட வேண்டும் என்று இவரும் எவ்வளவோ செயல்களைச் செய்து வருகிறார். ஆனாலும் அவரை நெட்டிசன்கள் நெகட்டிவ் கருத்துக்களால் கலாய்த்து வருகின்றனர். அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் அதை பற்றி இவர் கண்டு கொள்வதே இல்லை.

அதிகரிக்கும் ஆதரவு
தற்போது மீண்டும் இவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தாங்கள் இழந்த பெயரையும் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட அதை மீண்டும் வெளிக்காட்டி விட வேண்டும் என்று முடிவெடுத்து இருப்பது போல, ஜூலியும் அதே முடிவோடுதான் உள்ளே வந்திருக்கிறார். ஆனால் உள்ளே வந்த முதல் நாளில் இருந்தே சக போட்டியாளர்கள் இவரை டார்கெட் செய்து வருகின்றனர். இதனால் இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஆதரவு கூடி வருகிறது.

பழையபடி மாறிய ஜூலி
இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் ஜூலி காவல்துறை யூனிபார்ம் அணிந்து காவலர் ஆக மாறி இருக்கிறார். ஆனால் வனிதா வழக்கம்போல இவரிடம் சண்டைக்கு மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார். நேற்று நடந்த நிகழ்வுகளை மனதில் வைத்துக்கொண்டு வனிதா பேசும் வார்த்தைகளை கேட்டதும் ஜூலி கோபத்தில் குரலை உயர்த்தி இருக்கிறார். இந்த ட்ராமா கம்பெனி எல்லாம் இங்கே பண்ணினால் எல்லாத்தையும் ஒடச்சிடுவேன் என்று ஆவேசமாகக் கத்திக் கொண்டிருக்கும் வனிதாவிற்கு, என்ன ட்ராமா பணறோம் இப்போ, என்று பதில் கேள்வியை ஜூலி எழுப்பியிருக்கிறார். அப்போது தாடி பாலாஜி ஜூலி இடம் சண்டையை தொடங்கியிருக்கிறார். அப்போது தன்னுடைய கையில் காயம் பட்டு விட்டதாகவும் அதற்கு வனிதா தான் காரணம் என்று ஜூலி கூறிக் கொண்டிருக்கிறார். அதற்கு வனிதா உடனே அழுகையை தொடங்கி விடாதே என்று இவரை மட்டம் தட்ட பார்க்கிறார். ஜூலி நல்லா பாருங்க என் கண்ணில் கண்ணீர் வரவில்லை என்று கூறியிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ப்ரோமோவிலி ஜூலிக்கு ஆதரவாக ரசிகர்கள் கமெண்ட்களை அனுப்பி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications