Blind Spot, Eleven: செம த்ரில்லர் மூவி! லெவனில் இரட்டையர்களில் ஒருவரை கொல்வது ஏன்?

Subscribe to Oneindia Tamil

Blind Spot மற்றும் Eleven ஆகிய இரண்டு படங்களும் ஒரே பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன. இரண்டிலும் கதாநாயகன் ஒரு போலீஸாக நடித்திருப்பதுடன், கதையின் முடிவில் அவரே குற்றவாளி என தெரியவரும், அந்த திடீர் திருப்பம் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

blind spot movie

இன்னொரு குறிப்பிடத்தக்க ஒற்றுமை - இரு படங்களிலும் ஒரே ஹீரோ தான் நடித்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தாலும், அது தெரியாமல் கதை நுட்பமாகச் சொல்லப்பட்டுள்ளது. Blind Spot ஒரு கொலையைச் சுற்றி நகரும் கதையாக இருக்கும்; Eleven படத்தில் தொடர்ச்சியான அடுத்து அடுத்து கொலைகள் விழுந்த வண்ணம் இருக்கும் இதை யார் செய்கிறார்கள் எதற்கு செய்கிறார்கள் என்று கோணத்தில் நகரும்.

இந்த இரண்டு படங்களும் வெளியான நேரத்தில் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும், தற்போது ஓடிடி தளங்களில் நல்ல கவனத்தைப் பெறுகின்றன.

ஏன் Blind Spot மற்றும் Eleven பெரிய வரவேற்பை பெறவில்லை?

Blind Spot மற்றும் Eleven ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகியபோது பெரிய வரவேற்பை பெறவில்லை என்பதற்கான முக்கிய காரணங்கள் இருக்கின்றன. Blind Spot-இல் கதை வலுவாக இருந்தாலும், மேக்கிங் மெதுவாகவும், கதையின் ரிதம் சீராகவும் இல்லை. நடிகர்கள் இயல்பான நடிப்பை வெளிக் கொணர இயலாதது, கதையின் உணர்வுப் பரிமாணத்தை பலவீனமாக்கியது.

பட்ஜெட்டின் கட்டுப்பாடு காரணமாக கதை பெரும்பாலும் மூன்று கதாபாத்திரங்களைச் சுற்றியே நகர்கிறது. இதனால் நிகழ்வுகள் ஒரே மாதிரியாக தொடரும் உணர்வை அளிக்கிறது.

Eleven-இல் தொடர்ந்து கொலைகள் நிகழ்ந்தாலும், கொலை செய்யப்படுபவர்கள் யார் என்றே தெரியாது. இரண்டாவது பாதியில் கொலையாளியின் காரணம் "நியாயமானது" என சித்தரிக்கப்படுவதால், அங்கேயும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு சற்று ஏமாற்றம் அடைகிறது. இந்த காரணங்களால்தான், இரு படங்களும் திரையரங்கில் பெரும் தாக்கம் ஏற்படுத்த முடியாமல் போனது.

ஓடிடியில் மாற்றம்

இப்போது OTT-யில் இரு படங்களும் வெளிவந்து, கிரைம்- த்ரில்லர் திரைபடங்களை விரும்பும் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. திரையரங்கில் பிழைத்துவிட்ட படங்கள், ஓடிடி மூலமாக மறுபிறவி பெறுகின்றன என்பது உறுதியானது.

இப்பொது ஓடிடிக்கு வந்தவுடன் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. crime படத்தை விரும்பி பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த இரு படங்களும் பிடிக்கும்.

Blind Spot மற்றும் Eleven - இரண்டும் தனித்துவம் வாய்ந்த கிரைம் கதைகளாகும். நுணுக்கமான திரைக்கதை, எதிர்பாராத திருப்பங்கள் மனதில் பதியும் வகையில் அமைந்துள்ளன. குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் இயக்குநரின் தைரியமான கதை சொல்லல் அனைவரையும் கவர்ந்து உள்ளது. சில குறைகள் இருந்தாலும், குற்றவியல் சினிமாவை விரும்பும் பார்வையாளர்களுக்கு இந்த இரண்டு படங்களும் தவறவிடக் கூடாதவை.

- குரு கிருஷ்ணன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+