For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

OTT Apps: தியேட்டர்களுக்கு பதிலாகவா OTT இயங்குதளங்கள்?

Google Oneindia Tamil News

சென்னை: OTT இயங்குதளங்கள் தனிப்பட்ட முறையில் இருக்கும் தியேட்டர்கள், மால்களில் இருக்கும் தியேட்டர்களுக்கு பதிலாக வந்து அந்த இடத்தை பிடித்து விடுகிறது என்று, தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கு இடையில் பிரச்சனை கிளம்பி இருக்கிறது.

இதில் உண்மை இல்லை என்பது OTT இயங்குதளங்களின் வாதமாக இருக்கிறது. எது வந்தாலும் சினிமா தியேட்டர்களுக்கு உண்டான மவுசு குறையாது. பதிலாக மக்களுக்கு இது இன்னொரு வசதி மட்டும்தானே தவிர, இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என்று சொல்கிறது இவர்கள் தரப்பு.

திரைப்படங்கள் OTT இயங்குதளங்களில் ரிலீசாகத் துவங்கி இருப்பதுதான் இவர்களின் இந்த வகையான வாதத்துக்கு காரணம். தியேட்டர் உரிமையாளர்களின் பயம் உண்மையாகி விடுமோ என்கிற கவலை பலருக்கும் இல்லாமல் இல்லை.

Pandian Stores Serial: நான் பிரக்னன்ட் ஆனா வேலைக்கு போக வேணாம் இல்லே...?Pandian Stores Serial: நான் பிரக்னன்ட் ஆனா வேலைக்கு போக வேணாம் இல்லே...?

 பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள்

பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT இயங்குதளத்துக்கு விற்கப்பட்டது. இதன் மூலம்தான் தியேட்டர் அதிபர்கள், தயாரிப்பாளர்கள் இடையில் பிரச்சனை எழுந்துள்ளது. ஆனால், லாக்டவுன் நேரத்தில் பொன்மகள் வந்தாள் படத்தை OTT இயங்குதளத்தில் விட்டதுதான் புத்திசாலித்தனம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள்.

 பெட்டிக்கடையில் படங்கள்

பெட்டிக்கடையில் படங்கள்

பெட்டிக்கடையிலும் திரைப்படங்கள் சாமானியனுக்கு கிடைக்க வேண்டும். அப்போதுதான் சினிமா துறைக்கு வெற்றி என்று கமல்ஹாசன் ஆளவந்தான் திரைப்படம் எடுக்கும் சமயத்தில் கூறி இருந்தார். அப்படித்தான் குறிப்பிட்ட காலத்துக்கு பின்னர் புது படங்கள் சிடியில் விற்கலாம் என்று அனுமதி பெற்று திரைப்படங்கள் 60 ரூபாய்க்கு சிடி வடிவில் கிடைத்து வருகின்றன. விஸ்வரூபம் படம் வெளியாகும்போது OTT இயங்குதளங்களிளிலும் படங்கள் வெளியாகும் காலம் வரும் என்று கூறினார். அதுபோலத்தான் இப்போது நடக்கிறது.

 இதற்கு முன்னரும்

இதற்கு முன்னரும்

இதற்கு முன்னரும் திரைப்படங்கள் கேசட் வடிவில் விற்கப்பட்டு வந்தன. கேபிள் டிவியில் படங்கள் போடப்பட்டன...டிவி வந்தபோது திரைப்படங்களுக்கு ஆபத்து என்றார்கள்.. அப்படி எதுவும் நிகழவில்லை. கேபிள் டிவி வந்தபோதும் திரைப்படங்களுக்கு ஆபத்து என்று சொன்னார்கள். அப்போதும் கமலஹாசன் உள்ளிட்ட பலரும் ஒன்றின் வளர்ச்சி இன்னொன்றின் வளர்ச்சிக்கு எப்போதும் தடையாக இருக்காது என்று சொன்னார்கள். அது போலத்தான் சினிமா அழிவில்லாமல் வளர்ந்துக்கொண்டே இருக்கிறது.

 OTT இயங்குதளங்கள்

OTT இயங்குதளங்கள்

இப்போது OTT இயங்குதளங்களால் தியேட்டர்களுக்கு ஆபத்து.. தியேட்டர்களுக்கான இடத்தை OTT இயங்குதளங்கள் ஆக்கிரமிப்பு செய்துவிடும் என்று சொல்கிறார்கள். மக்களுக்கு இயங்குதளங்கள் வசதியைத்தான் ஏற்படுத்து தந்து இருக்கிறது...ஒரே வீட்டில் OTT இயங்கு தளங்கள் மூலம், ஒருவர் டிவியில் படம் பார்ப்பார், இன்னொருவர் மொபைல் போனில் படம் பார்ப்பார்...இன்னொருவர் லேப்டாப்பில் படம் பார்ப்பார்.

 தியேட்டர் திறக்கும் வரைதான்

தியேட்டர் திறக்கும் வரைதான்

OTT இயங்குதளத்தில் மக்கள் படங்களோ அல்லது வேறு எதையுமோ பார்ப்பது என்பது தியேட்டர் திறக்கும் வரைதான். தியேட்டர்கள் திறந்துவிட்டால், வழக்கம் போல அவர்கள் OTT இயங்கு தளமாக இருந்தாலும் சரி, தியேட்டர்களாக இருந்தாலும் சரி...எல்லா வசதிகளையும் பயன்படுத்திக்கொண்டு வளர்ச்சி மூலம் வசதியை அனுபவிப்பார்கள் அவ்வளவுதான். இதற்கு தயாரிப்பாளர் தரப்போ, தியேட்டர் உரிமையாளர்கள் தரப்போ கவலைகொள்ளத் தேவையில்லை என்று OTT இயங்கு தளம் தரப்பில் சொல்லப்படும் சமாதானமாக இருக்கிறது.

English summary
OTT platforms have become a problem between producers and theater owners, with private theaters replacing private theaters and malls.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X