ரோஜா பிறந்தநாளில் குவிந்த பிரபலங்கள்.. மீனா, பிரபுதேவா, சங்கீதா, மோகன் ராஜா கொடுத்த சர்ப்ரைஸ்
சென்னை: 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் நடிகைகளில் ஒருவரான ரோஜாவிறகு பிறந்தநாள் என்றால் அவருடைய ரசிகர்களுக்கு ஸ்பெஷல் தான். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினியாக வலம் வந்தவர். இப்போது அரசியல், டிவி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கும் ரோஜா தனது பிறந்த நாளை நண்பர்களும் திரையுலக பிரபலங்களும் சூழ கொண்டாடி இருக்கிறார்.

நடிகை ரோஜாவின் பதிவு
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படங்களை ரோஜா சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். மேலும் அந்த பதிவில், "எனக்கு அழகான சர்ப்ரைஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை வழங்கிய நலம் விரும்பிகள், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. நீங்கள் எதிர்பாராத விதமாக செய்த இந்த அன்பான விஷயங்கள் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருந்தது. எவ்வளவு அன்பும் பாசமும் கிடைத்து இருப்பது, என்னை ஆசிர்வதிக்கப்பட்டவள் ஆகவும் நெகிழ்ச்சியுடனும் உணர வைத்திருக்கிறது. நன்றி" என்று ரோஜா சொல்லி இருக்கிறார்.

பிரபலங்கள் வருகை
இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் ரோஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் இந்த முறை அவருடைய பிறந்தநாள் புகைப்படத்தில் ரசிகர்களின் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருப்பது பிரபலங்களின் வருகைதான். நடிகை மீனா, டான்ஸ் மாஸ்டரும் நடிகருமான பிரபுதேவா, நடிகை சங்கீதா, இயக்குனர் மோகன்ராஜா என பலர் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு இருக்கின்றனர். கேக் ஊட்டும் போது ரோஜாவிடம் பிரபுதேவா, மீனா என சிலர் செல்லமாக விளையாட்டு காட்டி இருக்கின்றனர்.

திரை உலக நட்பு
இந்த புகைப்படங்களை பார்க்கும்போது ரோஜாவுக்கு திரையுலகில் இருக்கும் நட்பு வட்டம் எந்த அளவுக்கு பெரியது என்று தெரிகிறது. குறிப்பாக மீனாவும் ரோஜாவும் ஒரே காலகட்டத்தில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை பார்த்த பழைய ரசிகர்களுக்கு 90ஸ் சினிமா நினைவுகள் நிச்சயம் வந்து இருக்கும். அது போல ரோஜாவுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த பிரபுதேவாவும் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

ரோஜாவின் அறிமுகம்
ரோஜாவை பொருத்தவரை தமிழ் சினிமாவில் அவருடைய அறிமுகமே மறக்க முடியாத ஒன்று. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் பிரசாந்த் ஜோடியாக நடித்த செம்பருத்தி படத்தில் மூலம் தமிழில் ரசிகர்களிடம் அறிமுகமானார். அதை தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வீரா, ஆயுதபூஜை, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

சில வருடங்கள் தமிழில் நடிக்காமல் இருந்த ரோஜா இப்போ மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். ஒரு காலத்தில் திரையில் பார்த்து ரசித்த ரோஜாவை இப்போது அவருடைய திறை உலக நண்பர்கள் சூழ பிறந்த நாள் கொண்டாடும் புகைப்படங்களில் பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குதித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications
