சல்லுன்னு ரிட்டர்ன் ஆன சாயா சிங்.. செம என்ட்ரி.. எதுல தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியல் சாயாசிங் அறிமுகமாக போகிறார். சாயாசிங்கின் வருகையால் அவரது ரசிகர்கள் செம உற்சாகமாகியுள்ளனர். சினிமாவில் நல்ல பெயரெடுத்தவர் சாயா சிங். அவரது சீரியல் வருகையும் அதே அளவுக்கு பெயர் பெறும் என்பது ரசிகர்களின் ஏகோபித்த கருத்தாக உள்ளது.

சீரியலில் நியூ என்ட்ரி சரிதான். ஆனால் என்ன கேரக்டரில் வருகிறார் என்று தான் தெரியவில்லை!! ஆனால் சீரியலிலும் மாடர்ன் உடையில் தான் கலக்கப் போகிறார். பூவே உனக்காக சீரியலில் அவரது ரோல் குறித்து அறிய பலரும் ஆவலாக உள்ளனர்.

உண்மையில் சாயாசிங்கின் கணவரும் சீரியலில் பிசியாக உள்ளவர்தான். தெய்வமகள் சீரியலில் நடித்த கிருஷ்ணாதான் சாயாசிங்கின் கணவர். இப்போது கணவர் வழியில் சாயாசிங்கும் சீரியல் குளத்தில் குதித்து நீச்சலடிக்க முடிவெடுத்து விட்டார்.

எல்லாரையும் ஆட வச்சவராச்சே

எல்லாரையும் ஆட வச்சவராச்சே

திருடா திருடி படத்தில் அந்த மன்மதராசா...மன்மதராசா..பாட்டுக்கு ஆட்டம் போட்ட சாயாசிங்கை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அதுவும் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் குத்து சாங் என்றால் இது தான். இன்னிக்கு வரைக்கும் அப்படி ஒரு குத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. இத்தனைக்கும் கடுமையான காய்ச்சலுடன் அந்த பாட்டுக்கு ஆடியிருந்தாராம் சாயாசிங். இந்தப் பாட்டுக்கு ஆட்டம் போட்டு பலபேர் தூக்கத்தை கெடுத்து கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த சாயாசிங் தான் அதற்குப் பிறகு ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டாலும் சும்மா நச்சுனு மனதில் பதிகிற மாதிரி வந்து போய்க்கொண்டிருந்தார். விக்ரமுடன் அருள் படத்தில் "மருதமலை அடிவாரம்" என்னும் பாட்டுக்கு இடுப்பை வளைத்து நெளித்து அவர் ஆடிய ஆட்டமும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது. இந்த ஆட்டம் ஆடியவர் அதற்குப் பிறகு ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்தாலும், திருப்பாச்சி படத்தில் மீண்டும் "கும்பிட போன தெய்வம்" என்னும் பாட்டுக்கு அந்த கிரீன் கலர் சேலையில் சாமி வந்து ஆடுவது போல அருள்வாக்கும் சொல்லி நாட்டுநடப்புகளையும் தன்னுடைய அழகான நடனத்தில் கூறிவிட்டார்.

ரொம்ப பிசியானவங்க தான்

ரொம்ப பிசியானவங்க தான்

என்னதான் திரைப்படங்களில் பல நடிகைகள் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும் அதற்கு பிறகு அங்கு அவர்களுக்கு மதிப்பு கொஞ்சம் குறைய ஆரம்பித்ததும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து விடுகிறார்கள். அந்த மாதிரிதான் தற்போது சாயாசிங் சீரியலில் அறிமுகமாகி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். ஆனால் இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், வங்காளம் என பல மொழிகளிலும் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தநிலையில் கிடைக்கும் நேரங்களிலாம் அப்பப்போ சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் தலையை காட்டி விடுகிறார்.

மீண்டும் சீரியலில் தரிசனம்

மீண்டும் சீரியலில் தரிசனம்

இவர் சீரியலில் 2011 முதல் 12 வரை சன் டிவியில் ஒளிபரப்பான நாகம்மா சீரியலில் நாகம்மா கேரக்டரில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு மீண்டும் சன் டிவியில் ரன் சீரியலில் திவ்யா கேரக்டரில் அவருடைய கணவருடன் நடித்திருந்தார். அதோடு நிற்காமல் கெஸ்ட் ரோலில் வந்து தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் ஒளிபரப்பான நந்தினி சீரியலிலும் நடித்திருந்தார். ஆனால் இப்போ கொஞ்ச நாட்களாகவே சீரியலை விட்டு விலகி இருந்தாலும், இவர் தன்னுடைய கணவருடன் அடிக்கடி போட்டோசூட் போட்டோக்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்தான் மீண்டும் இவருக்கு சீரியலில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

திருமணத்துக்கு பிறகும் மாறாத காதல்

திருமணத்துக்கு பிறகும் மாறாத காதல்

இவர் 2010இல் வெளிவந்த அனந்தபுரத்து வீடு என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார். திகில் நிறைந்த அந்த திரைப்படத்தில் அவருடன் நடித்த கிருஷ்ணா.. அதாங்க, சன் டிவியின் தெய்வமகள் பிரகாஷ், அவரை தான் இவர் காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். இவருடைய திருமண செய்தியை கேட்டு பல இளைஞர்கள் ரொம்பவே பீல் ஆகிவிட்டனர். அதுமட்டுமல்லாமல் கிருஷ்ணாவுக்கு பல அறிவுரையும் கூறி வந்தனர். எங்க செல்லத்தை பத்திரமா பாத்துக்கோங்க, என்றெல்லாம் அந்த அறிவுரையில் இருந்தது. அந்த அளவிற்கு ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்த இவர் திருமணம் முடிந்த பிறகு கணவருடன் சந்தோஷமான திருமண வாழ்க்கையை என்ஜாய் பண்ணி கொண்டிருந்தாலும் திருமணத்திற்குப் பிறகும் இவர்கள் இருவருமே நடிப்பை விட்டு விடவில்லை.

என்ன கேரக்டரா இருக்கும்! !??

என்ன கேரக்டரா இருக்கும்! !??

தற்போது சன் டிவியில் கிருஷ்ணா தாலாட்டு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே சன் டிவியில் தான் மீண்டும் சாயாசிங் அறிமுகமாக போகிறாராம். அதுவும் பூவே பூச்சூடவா சீரியலில் களம் இறங்கப் போகிறார் என்று செய்திகள் வலம் வருகிறது. ஆனால் அவர் என்ன கேரக்டரில் நடிக்க போகிறார் என்றுதான் யாருக்கும் தெரியவில்லை. இவர் மாடர்ன் உடையில் வருவதை பார்த்து பலர் கீர்த்தியோட ரீப்ளேஸ்மெண்ட் ஆக இருக்குமோ!!??என்று கூறிவருகின்றனர். ஆனால் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை கமெண்டுகளில் கூறுங்கள், பார்ப்போம்..யார் சொல்வது சரி என்று...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+