“குக் வித் கோமாளி” செஃப் தாமுக்கு வந்த பிரச்சனை.. ஐயோ பாவமே! இதைத்தானே டிடியும் சொன்னாங்க?
சென்னை: சமையல் கலைஞர் ஆக பலருக்கும் பிரபலமான செஃப் தாமு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக இருக்கிறார். இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 15 மணி நேரம் நின்று கொண்டு இருப்பதால் வந்த பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு பெயர் போன விஜய் டிவியில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் புதியதாக தொடங்கி வருகிறார்கள். அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டால் தொடர்ந்து பல சீசன்கள் தொடங்கப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனில் இருந்து இப்போது ஐந்தாவது சீசன் வரைக்கும் நடுவராக செஃப் தாமு இருந்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு வெங்கடேஷ் பட்டுடன் இதே விஜய் டிவியில் கிட்சன் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் தொடங்கப்படும் போது வெங்கடேஷ் பட்டை தொடர்ந்து தாமுவும் நான் இந்த சீசனில் இருந்து விலகப் போகிறேன் என்று கூறியிருந்தார்.
ஆனால் பிறகு அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டு ஐந்தாவது சீசனில் இணைந்திருக்கிறார். இந்த நிலையில் செஃப் தாமு அவருடைய உடலில் இருக்கும் பிரச்சனை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் நிலையில் அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசுகையில் இந்த துறைக்கு வந்து கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகிவிட்டதாகவும் வந்ததிலிருந்து நாள்தோறும் 15 மணி நேரம் நிற்க வேண்டியது இருப்பதால் மூட்டு வலியே வந்துவிட்டது என்று கூறியிருக்கிறார்.
அதிலும் 18 மணி நேர வேலையில் 15 மணி நேரம் முழுவதும் நின்று கொண்டே இருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் குக் வித் கோமாளி ஷூட்டிங்கில் ஒரு முறை தான் கீழே விழுந்து விட்டதாகவும் அதிலிருந்து அவரால் அதிக நேரம் நிற்க முடியவில்லை. கொஞ்சம் நேரம் நின்றாலே கால் வலி வந்து விடுகிறது. அதனால் இப்போது கொஞ்ச நேரம் உட்கார்ந்தும் கொஞ்ச நேரம் நிற்பதுமாக இந்த நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டிருப்பதாக ஒரு பேட்டியில் தாமு பேசியிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பலருக்கும் பரிட்சயமான டிடி ஒரு பேட்டியில் பேசுகையில் தானும் எல்லா நிகழ்ச்சியிலும் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்ததால் தான் தன்னுடைய முட்டியில் வலி ஏற்பட அதற்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது அது தவறாக செய்யப்பட்டதால் தனக்கு கால் வலி அதிகமாகிவிட்டது. இப்போது அதிகமான நேரம் நிற்க முடியவில்லை.
ஆனாலும் விஜய் டிவியில் உட்கார்ந்தபடியே ஏதாவது நிகழ்ச்சி தொகுத்து வழங்குகிறேன் என்று சொன்னதற்கு இப்ப வரைக்கும் வாய்ப்பு தரவில்லை என்று வருத்தத்தோடு பேசி இருந்தார். இந்த நிலையில் அப்போ நின்று கொண்டு வேலை பார்க்கும் பலருக்கும் இந்த நிலைமை தானா? இவ்வளவு பிரச்சனை வருகிறது என்று தெரிந்த பிறகும் ஏன் சேனல் தரப்பில் இருந்து தொகுப்பாளர்களுக்கு உட்கார்ந்து பேசுற மாதிரி ஒரு அமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதில்லை என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications