For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரண்டு நாளைக்கு முன்புதான்.. இதை நம்ப முடியவில்லை.. வாணி ஜெயராம் மறைவு பற்றி சித்ராவின் பதிவு

வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்ட நான் மிகுந்த அதிர்ச்சி மற்றும் அவ நம்பிக்கையுடன் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அவரிடம் பேசினேன் என்று பாடகி சித்ரா தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இன்று மரணம் அடைந்திருக்கிறார் .அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

பிரபல பாடகியாக இருந்து வரும் சித்ரா, வாணி ஜெயராம் மறைவு பற்றி தன்னுடைய வருத்தத்தை பகிர்ந்து இருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய வாணி ஜெயராம் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தன்னுடைய பீலிங்கை சித்ரா கொட்டியதை தொடர்ந்து ரசிகர்கள் பலர் தங்களுடைய வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அப்பா இல்லாத எனக்கும் அப்பா இல்லாத எனக்கும் "அந்த பிரச்சனை" நடந்திருக்கிறது..மனம் திறந்த அயலி பட அம்மா.. குவியும் கருத்து

மனதை மயக்கும் குரல்

மனதை மயக்கும் குரல்

இனிமையான குரல் மூலம் அதிகமான பாடல்களை பாடி பல்வேறு ரசிகர்களின் மனதை இனிமையாக மாற்றிய வாணி ஜெயராம், 1973 ஆம் ஆண்டு வெளியான தாயும் சேயும் என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமாகி 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் பாடி உள்ளார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகங்கள் என்று இப்போது கேட்டாலும் ரசிகர்களின் மனதை லயிக்க வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர் இன்று இந்த உலகை விட்டு பிரிந்திருக்கிறார்.

உயரிய விருதுகள்

உயரிய விருதுகள்

அது மட்டுமல்லாமல் அபூர்வ ராகங்கள் படத்தில் பாடிய பாடலுக்காக தேசிய விருதையும், தமிழில் LKG திரைப்படத்தில் பாடிய வாணி ஜெயராமுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டிருந்தது என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.இந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் வாணி ஜெயராம் கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சித்ராவின் வருத்த பதிவு

சித்ராவின் வருத்த பதிவு

காலத்தால் அழியாத பல பாடல்களைப் பாடி எல்லா காலத்து ரசிகர்களையும் தன்னுடைய பாடல்களால் மனம் லயிக்க வைத்த பாடகி வாணி ஜெயராம் மறைவு பற்றி சின்ன குயில் சித்ரா தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வாணி அம்மாவின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்ட நான் மிகுந்த அதிர்ச்சி மற்றும் அவநம்பிக்கையுடன் இருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவரிடம் பேசினேன். ஜனவரி 28 அன்று சென்னையில் நடந்த எனது கச்சேரிக்கு அவர் தலைமை விருந்தினராக வந்திருந்தார். ஒரு உண்மையான புராணக்கதை, வலுவான கிளாசிக்கல் அடித்தளத்துடன் கூடிய பல்துறை மற்றும் பழமொழி பாடகர் அவர், ஆன்மா சாந்தியடையட்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆன்மா சாந்தி அடையட்டும்

ஆன்மா சாந்தி அடையட்டும்

பழம்பெரும் பாடகியான வாணி ஜெயராம் மறைவிற்கு இசை உலகை பொருத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என்று நடிகர்கள் மட்டுமில்லாமல் பல்வேறு பிரபலங்களும் தொடர்ந்து மறைவுக்கு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாடகி சித்ராவின் வருத்தப்பதிவை ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து தங்களுடைய ஆறுதல்களை கூறி வருகிறார்கள்.

English summary
Popular playback singer Vani Jayaram has passed away today. Many celebrities have expressed their condolences on her death. Chitra, who has been a popular singer, has shared her grief about Vani Jayaram's death. She spoke two days ago and could not accept that Vani Jayaram is no more. Many are expressing their regrets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X