பாடகி ராஜலட்சுமி நடிக்கும் திரைப்படத்தில் பிரபல சீரியல் நடிகையின் கணவர்! நடிகை அந்த சொன்ன வார்த்தை?
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பிரபலமான ராஜலட்சுமி தற்போது புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் அந்த திரைப்படத்திற்கு லைசன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
ராஜலட்சுமி நடிக்கும் திரைப்படத்தில் தன்னுடைய கணவர்தான் ஒளிப்பதிவாளர் என பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிபர் நெகிழ்ச்சியோடு தெரிவித்து இருக்கிறார்.

பாக்கியலட்சுமியின் பழைய ராதிகா
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஜெனிபர் அந்த சீரியலில் இருந்து விலகி இருந்தார். அப்போது அவரும் அவருடைய கணவரும் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தனர். தன்னுடைய மனைவியின் கேரக்டருக்கு தகுந்த மாதிரி சீரியலின் கதை செல்லவில்லை. சீரியலில் கதை இனி வேற மாதிரி இருக்கப் போவதாகவும், அது எங்களுக்கு செட்டாகவில்லை அதனால் அந்த சீரியலில் இருந்து விலகி விட்டோம் என்று கூறியிருந்தனர். அதற்குப் பிறகு ஜெனிபர் கர்ப்பமாக இருந்ததால் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். தற்போது அவருக்கு இரண்டாவது முறையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து ஒரு சில மாதங்கள் ஆகிவிட்டதால் தற்போது புது சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கணவருக்காக உணர்வு பூர்வமான பதிவு
ஜெனிபர் எந்த சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான செய்தியை கூறவில்லை ஆனாலும் தன்னுடைய கணவருக்கு புது வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்து இருக்கிறார். ஜெனிபரின் கணவரான காசி விஸ்வநாத் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மூலமாக பிரபலமடைந்த பாடகி ராஜலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் லைசென்ஸ் என்ற திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகி இருக்கிறாராம். அதை குறித்து உணர்வு பூர்வமாக பதிவிட்டு இருக்கிறார்.

வியக்க வைக்கும் புகைப்படங்கள்
நடிகை ஜெனிஃபரின் கணவரான காசி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது ஒவ்வொன்றுமே பார்த்து பார்த்து எடுக்கப்பட்டதாகவும் அழகை அப்படியே அள்ளிக் கொள்ளும் வகையில் உணர்வு பூர்வமாக தத்ரூபமாக கண்களை கவரும் விதத்தில் இருப்பதாகவே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருவார்கள். இந்த நிலையில் இந்த புது திரைப்படத்தில் இவருடைய புது முயற்சி வெற்றி பெற பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.

ஃபர்ஸ்ட் போஸ்டர்
அதே நேரத்தில் மக்கள் இசை பாடகியாக விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது பல ஹிட்டான பாடல்களின் பின்னணி பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ராஜலட்சுமி திரைப்படங்களில் கதாநாயகி ஆகவும் அறிமுகமாகி இருக்கிறார். அவருடைய திரைப்படத்தில் ஃபர்ஸ்ட் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. அதில் அவருடைய கெத்தான கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் திரைப்படத்தில் போஸ்டரை பார்த்ததுமே கதை என்ன மாதிரி இருக்கும் என்று எதிர்பார்ப்பு தோன்றி இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய மனைவியின் புது பயணம் வெற்றி அடைய வேண்டும் என்று செந்தில் கணேஷ் சமூக வலைதள பக்கங்களில் மனைவிக்கு ஆதரவாக போஸ்ட் வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார்.
-
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications