தமிழச்சி தங்கப்பாண்டியனா..? குஷ்பூவா...? பரபரக்கும் பதில்கள்.. விறுவிறுப்பான விருது நிகழ்ச்சி
சென்னை :கலர்ஸ் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள சுயசக்தி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
இந்தப் ப்ரோமோ சின்னத்திரை ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் இடையேயும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
கட்சி ரீதியாக இரு துருவங்களாக உள்ள இருவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் கேட்கப்படும் சுவாரசியமான கேள்விகளும் அவர்கள் அளிக்கும் சுவாரசியமான பதில்களும் ப்ரோமோ வீடியோவை வைரலாக்கி வருகிறது. இந்த வாரம் சின்னத்திரை ரசிகர் ரசிகைகள் மட்டுமின்றி அரசியல் கட்சியினருக்கும் நல்ல என்டர்டைமென்ட் காத்திருக்கிறது.

சுயசக்தி விருதுகள் அறிமுகம்
பெண்கள் பலர் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமானம் ஈட்டுகின்றனர். அவர்களை சுயசக்திகள் என்று அழைக்கின்றனர். இவ்வாறு தொழில் முனைவதன் மூலம் தங்கள் இலக்குகளை அடைய விரும்பும் பெண்களை அங்கீகரித்து கொண்டாட வழங்கப்படும் விருதுகள் தான் சுய சக்தி விருதுகள். தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் ஹேமா ருக்மணி மற்றும் முன்னாள் அமைச்சர் மாபா பாண்டியராஜன் அவர்களின் மனைவியார் லதா ராஜன் போன்று பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் நடுவர்களாக இருந்து தகுதியான நபர்களுக்கு இவ்விருதினை வழங்கி வருகின்றனர்.

இரு துருவங்கள் ஆன சிறப்பு விருந்தினர்கள்.
சுய சக்தி விருதுகள் 2022 நிகழ்ச்சியை வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை கூட்டி உள்ளது. எதிர்பார்ப்புகளுக்கு முக்கிய காரணமே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள இருவர் தான். திமுகவைச் சார்ந்த தென் சென்னை பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியனும் பாஜகவின் முக்கிய நிர்வாகியுமான குஷ்பூவும் தான் அந்த சிறப்பு விருந்தினர்கள்.கட்சி மற்றும் கொள்கை ரீதியாக கிழக்கும் மேற்குமாய் இருக்கும் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கட்டி அணைத்து கலந்து கொண்டுள்ளது எப்படி இருக்கும் என்பதை காண சின்னத்திரை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

பர பர கேள்விகள் சூடான பதில்கள்
ப்ரோமோவில் ரஜினி, கமல் மற்றும் கருணாநிதி பற்றிய கேள்விகளுக்கு இருவரும் அளித்துள்ள பதில்கள் வேற லெவலில் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ரஜினிகாந்த் பற்றிய கேள்விக்கு ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார் என்று குஷ்பூவும், ஞானிகள் தோற்றமாக தென்படுவார் என்று தமிழச்சி தங்க பாண்டியனும் கூறியுள்ளார். கமல்ஹாசன் பற்றிய கேள்விக்கு தன்னுடைய நண்பர் என்று குஷ்பூவும், மரியாதைக்குரியவர் நாமினல் ஆர்டிஸ்ட் என்று தமிழச்சி தங்க பாண்டியனும் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து கலைஞர் கருணாநிதி பற்றிய கேள்விக்கு தன்னுடைய ஆசான் என்று குஷ்பூவும் தமிழினத்தின் உயிர் மூச்சு என்று தமிழச்சி தங்கபாண்டியனும் புகழ் மாலை சூட்டியுள்ளனர்.

பெண்கள் பிரச்சினைக்கு துணை இருப்போம்
இரு வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களாக தாங்கள் ஒருங்கிணைந்துள்ளதாகவும், பெண் இனத்திற்கு ஒரு பிரச்சனை என்றால் நாங்கள் இதேபோன்று இணைந்து நிற்போம் என்று கூறியுள்ளது அவர்களின் சமூக ஒற்றுமையை காட்டுவதாக கமெண்டில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். வரும் ஞாயிறன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் பொழுது இன்னும் மேலும் பல சுவாரசியங்கள் சின்ன திரை ரசிகர்களுக்கு காத்திருக்குது என்றே சொல்லலாம்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications