விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகமாகும் சரண்யா பொன்வண்ணன்.. அதுவும் இப்படியும் பேசுவாரா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஜூலை 27 மற்றும் 28ஆம் தேதிக்கான எபிசோடு இரண்டாவது ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. அதில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக சரண்யா பொன்வண்ணன் கலந்து கொள்கிறார். நிகழ்ச்சியில் அறிமுகமானதும் போட்டியாளர்களை செமையாக கலாய்த்து இருக்கிறார். திரைப்படத்தில் தான் இவர் ஜாலியான அம்மா என்று பார்த்தால் நிஜத்தில் அதைவிட ஜாலியா இருப்பார் போல என்று பலரும் கூறி வருகிறார்கள்.
பொதுவாக டிவி சேனல்களில் டிஆர்பிஐ தக்க வைத்துக் கொள்வதற்காக புதியது புதியதாக பல திருப்பங்களை கொண்டு வருகிறார்கள். ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களை களம் இறக்கி மற்ற சேனல்களுக்கு போட்டியாக ரசிகர்களை கவர வைக்க பல முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி நான்கு சீசன்களாக பெரிய அளவில் வெற்றி பெற்று வரவேற்பு பெற்றது.

ஆனால் ஐந்தாவது சீசன் தொடங்கப்படுவதற்கு முன்பே அதில் இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் தயாரித்து வந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர், நடுவர் செஃப் வெங்கடேஷ் பட் என்று பலரும் விலகி இருந்தனர். அதே நேரத்தில் விஜய் டிவியில் இருந்து இவர்கள் சன் டிவியில் புதிய நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள். இதனால் சன் டிவி மற்றும் விஜய் டிவிக்கு இடையே இந்த நிகழ்ச்சியிலும் பெரிய போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ஐந்தாவது சீசனில் ஆரம்பமான ஒவ்வொரு வாரத்திலும் ஏதாவது ஒரு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நடிகை சரண்யா பொன்வண்ணன் கலந்து கொண்டிருக்கிறார். அவர் நிகழ்ச்சியில் வரவேற்கப்பட்டதும் அவரிடம் தாமு இந்த நிகழ்ச்சியை நீங்க பார்த்திருக்கீங்களா? என்று கேட்க, அதற்கு அவர் ஆமா என்று சொல்கிறார்.
அதற்கு தாமு இங்க என்னதான் பண்ணுறாங்க நீங்க சொல்லுங்க பார்ப்போம் என்று கேட்க இவங்க சமைக்கிறாங்க இவங்க அதைக் கெடுக்குறாங்க என்று சொல்லி இருக்கிறார். அதைத்தொடர்ந்து புகழ் விஜய் நடித்த பிகில் அப்பா கேரக்டர் கெட்டப் போட்டு இருக்கும் நிலையில் என்னை தெரிகிறதா என்று புகழ் அவரிடம் கேட்க, அதற்கு சரண்யா பொன்வண்ணன் அதான் நல்லாவே தெரிகிறது... நீங்க எனக்கு முன்னாடி தானே நிக்கிறீங்க என்று பல்பு கொடுக்கிறார்.
அதைதொடர்ந்து பூஜா சரண்யாவிடம் "அம்மா அம்மா நீ எங்கள் அம்மா" என்று படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி நான் முதல் முறையாக இந்த பாடலை அழாமல் பாடியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அடுத்ததாக ஷாலின் ஜோயாவை பார்த்த சரண்யா பொன்வண்ணன் உங்களுக்கு சமைக்க தெரியுமா தெரியாதா என்று மலையாளத்தில் கேட்க, அவரும் எனக்கு சமைக்க தெரியும் என்று மலையாளத்தில் பதில் சொல்ல அப்படி என்றால் எல்லாவற்றையும் அனுசரித்து சமையல் செய்ய வேண்டும் என்று மலையாளத்தில் சரண்யா ஜோயாவுடன் பேசி இருக்கிறார்.
இந்த ப்ரோமோ இணையத்தில் அதிகமான கருத்துக்களை பெற்று வருகிறது. இவர் சினிமாவில் தான் அழகான மற்றும் காமெடியான அம்மா என்று காட்டி இருப்பார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சியிலும் இவர் அதே போலவே கலகலப்பாக இருக்கிறாரே என்று பலர் பீல் பண்ணி வந்தாலும் ஒரு சிலர் தனக்கு சொல்லிக் கொடுத்ததை அப்படியே சரண்யா இந்த நிகழ்ச்சியில் வந்து சொல்லிவிட்டார் போல என்று கிண்டல் செய்தும் வருகிறார்கள். எது எப்படியோ இந்த வார நிகழ்ச்சி களைகட்ட போகிறது என்று தெரிகிறது, என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications