கவுண்டமணி மனைவி கையால் சாப்பிட்டு இருக்கிறேன்.. சந்தானத்தோடு போனபோது சொன்ன வார்த்தை! கூல் சுரேஷ் எமோஷனல்
சென்னை: நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி நேற்று உடல்நல குறைவினால் காலமானார். இன்று அவருடைய உடலுக்கு இறுதி சடங்குகள் நடந்திருக்கிறது. அந்த இறுதி சடங்கில் நடிகர் கூல் சுரேஷ் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி இருக்கிறார். பிறகு செய்தியாளர்களை சந்தித்து எமோஷனலாக பேசியிருக்கிறார். அப்போது கவுண்டமணியின் வீட்டில் தான் பல நாள் சாப்பிட்டேன் என்றும் கவுண்டமணி மனைவி குறித்தும் எமோஷனலாக கூல் சுரேஷ் பேசி இருக்கிறார்.
பலரையும் மனம் விட்டு சிரிக்க வைத்த நடிகர் கவுண்டமணி இன்று மனைவி இல்லாத சோகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அவருடைய மனைவியின் இறப்பால் அவர் மனம் தளர்ந்து போயிருக்கிறார். அவருடைய இரண்டு மகள்களும் குடும்பத்தினரும் கண்கலங்கி இருக்கிறார்கள். கவுண்டமணியின் மனைவி 67 வயதில் காலமாகி இருந்தாலும் அவர் இருந்த வரைக்கும் கவுண்டமணியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாராம்.

மனைவி செய்த செயல்
கவுண்டமணி சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரிடமும் ஜாலியாக கலகலப்பாக பேசுவாரார். ஆனால் சூட்டிங் முடிந்ததுமே நேராக வீட்டிற்கு சென்று விடுவாராம். தன்னுடைய சம்பளத்தை அப்படியே மனைவியிடம் கொடுத்து விடுவாராம். குடும்பத்தை நிர்வகித்தது முழுக்க அவருடைய மனைவி தானாம். இரண்டு குழந்தைகளுக்கும் திருமணத்தின் போது கவுண்டமணி தன்னுடைய மனைவியை முன்னிறுத்தி தான் எல்லா வேலைகளையும் செய்து இருக்கிறார்.
கூல் சுரேஷ் பேட்டி
பொதுவாக வாழ்க்கை துணை என்பது வயதான காலத்தில் தான் கணவனுக்கும் மனைவிக்கும் அதிகமாக தேவைப்படுகிறது. அந்த நேரத்தில் ஒரு கணவன் மனைவியை இழப்பதும், மனைவி கணவனை இழப்பதும் மிகவும் வருத்தமானது தான். அது போல இப்போது சோகத்தின் உச்சத்தில் கவுண்டமணி இருக்கும் நிலையில் அவருடைய மனைவியின் உடலுக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
கவுண்டமணி மனைவி இறுதி சடங்கு
கவுண்டமணியின் மனைவி இறுதி சடங்கில் நடிகர் கூல் சுரேஷ் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது கூல் சுரேஷ் கவுண்டமணி பற்றி எமோஷனலாக பேசியிருக்கிறார். நான் இதுவரைக்கும் எந்த இறப்பு வீட்டிலும் டான்ஸ் ஆடுகிறது கிடையாது. ஆனால் இப்போது கவுண்டமணி மனைவி இறப்பிற்கு வந்து டான்ஸ் ஆடி இருக்கிறேன். சாந்தி அம்மா கையால் நானும் சாப்பிட்டு இருக்கிறேன். அந்த ஒரு பாசத்திற்காக தான் நான் இங்கு வந்து இந்த இறுதி சடங்கில் டான்ஸ் ஆடினேன்.
கவுண்டமணிக்கு இருந்த நோய்
ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படத்திற்காக நானும் சூட்டிங்கில் கலந்து கொண்டேன். அப்போது கவுண்டமணி சார் வீட்டுக்கு போய் சாப்பிடலாம்னு கூட்டிட்டு போனாரு. அங்க பாகற்காய் குழம்பும், சாதமும் வெச்சிருந்தாங்க. நானும் சாப்பிட்டுட்டு வந்தேன். அப்புறம் ஒரு நாள் அதேபோல வீட்டுக்கு கூட்டிட்டு போனாரு. அப்போது பாகற்காய் பொறியல் பண்ணி இருந்தாங்க. நானும் என்ன சார் உங்க வீட்டில் தினமும் பாகற்காய் ஸ்பெஷலா வைக்கிறாங்கன்னு கேட்டேன்.
கவுண்டமணி செய்த கிண்டல்
அதற்கு எங்க ரெண்டு பேருக்கும் சுகர் அதனால எங்க அம்மணி பாகற்காய் வச்சு பாடாய் படுத்துறாங்கன்னு கிண்டலா சொன்னாரு. அதை எல்லாம் மறக்க முடியாது. அதுபோல 15 வருஷத்துக்கு முன்னாடி சந்தானத்துடன் கவுண்டமணி சார் ஆபீசுக்கு போயிருந்தேன். அப்போ சந்தானம், கவுண்டமணி சாரிடம் சார் இவன் ரகுவரன் இடத்தை பிடிக்காமல் விடமாட்டேன் என்று சொல்லுகிறான் என்று சொல்ல, அதற்கு கவுண்டமணி சார், அப்படியே போ அந்த சுடுகாட்டில் தான் ரகுவரன் சமாதி இருக்கு அங்க போய் படுத்து கிட என்று கிண்டல் பண்ணாரு.
கூல் சுரேஷ் எமோஷனல்
இப்படி எந்த சூழ்நிலையிலும் ஜாலியா இருப்பாரு. ஆனா இப்போ அவருடைய மனைவி இல்லாம அவர் உடைந்து போய் இருக்கிறார். பொதுவாக மனைவி உயிரோட இருக்கும்போது கணவன் இறந்து போயிட்டா கூட தன்னம்பிக்கையோட அவங்க வாழ்ந்துடுவாங்க. ஆனா ஒரு மனைவி இறந்த பிறகு கணவன் வாழ்வது ரொம்பவும் கொடுமையானது. மனைவி இருக்கிற வரைக்கும் தான் நம்ம எந்த வேலைக்கு போனாலும் எப்ப வருவீங்க? சாப்பிட்டீங்களா? என்று உரிமையா கேட்பாங்க. அதற்குப் பிறகு அப்படி யாருமே கேட்க மாட்டாங்க என்று எமோஷனலாக கூல் சுரேஷ் பேசியிருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications