கிரேசியின் விடாது சிரிப்பு ...பார்த்தீங்களா மக்களே?
சென்னை: ஜெயா டிவியில் கிரேசியின் விடாது சிரிப்பு நாடகம் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.இது மறு ஒளிபரப்பு என்று கூட சொல்ல முடியாது.
ஜெயா டிவி கிரேசியின் விடாது சிரிப்பு நாடகத்தை மறுமுறை மறுமுறை என்று அடிக்கடி ஒளிபரப்பு செய்து வருகிறது. எத்தனை முறை பார்த்தாலும் அதே சிரிப்புத்தான்..சலிப்பதே இல்லை.
லாக்டவுன் காலத்தில் தினமும் மாலை 7 மணிக்கு கிரேசியின் விடாது சிரிப்பு ஒளிபரப்பாகி வருவதால், 7 லிருந்து 8 மணி வரை சிரித்து மகிழ்ந்தபடி இரவு உணவு சாப்பிடலாம்.

சிரிப்புக்கு கேரண்டி
பாருங்க.. உங்க சிரிப்புக்கு நான் கேரண்டி என்று கிரேசி மோகனின் குழு எப்போதும் உத்திரவாதம் தருவது போலத்தான். நாடகத்தை வழங்குவார்கள்.அத்தனை பேருமே காமெடி செய்து இருப்பார்கள். மாது, சீனு, எப்போதும் அதே பெயருடன் எப்போதும் நடித்துக்கொண்டு இருந்தவர்கள்.

வாஸ்து சரியில்லை
மாதுவுக்கும், ஜானகிக்கும் குழந்தை இருக்காது. அப்போது மலையாள நம்பூதிரியா கிரேசி மோகன் வந்து இருப்பார். பாத்ரூம் வாஸ்து சரியில்லை..பெட் ரூம் வாஸ்து சரியில்லை, கிச்சன் வாஸ்து சரியில்லை என்று சொல்லி சொல்லி, கடைசியில் வீடே வாஸ்து சரியில்லை என்று சொல்லிவிடுவார்.

வாசற்படியில் கால்
கடைசியில் வாஸ்து படி வாசற்படியில் கால் வைத்து வெளியில் போக கூடாது. கயிறை கட்டித் தொங்கவிட்டு, அதை பிடித்துக்கொண்டு தொங்கி ஜம்ப் செய்து வாசலைத் தாண்டுவார்கள். மாடிப்படியில் கிச்சன்...பாத்ரூம் டப்பில் மாது படுத்து தூங்குவார்.. இப்படி கதை முழுக்க ஒரே சிரிப்பாக இருக்கிறது.

கடைசியில் வேலை
ப்ரோமோஷன் ப்ரோமோஷன் என்று மாது எதிர்பார்த்து இருக்க...மாடிப்படியில் சமைச்சு, பாத்ரூமில் தூங்கி என்று இருந்ததால் அலுவலகத்துக்கு தினமும் லேட். வேலை போச்சுன்னு வீட்டுக்கு வர்றார்..இருவரும் நம்பூதிரியை திட்டித் தீர்க்கறாங்க. ஜானகி வாந்தி எடுக்க.. மாது அந்த ப்ரோமோஷன் இல்லேன்னா என்னடா.. நீ அப்பா ஆயிட்டேன்னு சொல்றார் கிரேசி மோகன்.
நல்லா சிரிச்சு நிம்மதியா வாழ...இது மாதிரி நகைச்சுவை நாடகங்கள் பார்க்கலாம்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications