குக் வித் கோமாளியில் பிரியா ராமனுக்கு சம்பளமே வேஸ்ட்! பேசாம வீட்டுக்கு அனுப்புங்க! ராஜு ஷாக் பேச்சு
சென்னை: குக் வித் கோமாளியில் இருந்து பிரியா ராமனை வீட்டுக்கு அனுப்புமாறும் அவருக்கு தேவையில்லாமல் ஊதியம் தருவதாகவும் சக போட்டியாளர் ராஜு ஜெயமோகன் தெரிவித்ததால் பரபரப்பு எழுந்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 6 நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாக செஃப் தாமு, கவுசிக் சங்கர், மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் உள்ளனர். இது கடந்த 4ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் 10 குக்குகளும் 10 கோமாளிகளும் உள்ளனர். புகழ், சரத், ராமர், சுனிதா, சவுந்தர்யா, சர்ஜின், பூவையார், தங்கதுரை, குரேஷி, டோலி ஆகியோர் கோமாளிகளாக உள்ளனர்.
குக்கு
அது போல் குக்குகளாக மதுமிதா, ஷபானா ஷாஜகான், பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், உமைர் லத்தீப், சவுந்தர்யா சில்லுக்குரி, ராஜு ஜெயமோகன், கஞ்சா, சுந்தரி அக்கா, நந்தகுமார் ஆகியோர் குக்குகளாக உள்ளனர்.
செஃப் ஆப் தி வீக்
கடந்த இரு வாரங்களாக பிரியா ராமன் செஃப் ஆப் தி வீக்காகியுள்ளார். கோல்டன் ஏப்ரான் அவரிடம்தான் உள்ளது. வாராவாரம் செஃப் ஆஃப் தி வீக் என ஒருவரை தேர்வு செய்து அவருக்கு கோல்டன் ஏப்ரான் வழங்கப்படுகிறது.
பிரியா ராமன் முன்னிலை
கடந்த இரு வாரங்களாக புள்ளிகள் அளவிலும் பிரியா ராமனே முன்னணியில் இருக்கிறார். இரண்டாவது இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன், மூன்றாவது இடத்தில் மதுமிதாவும் உள்ளனர். டேஞ்ஜர் ஜோனில் கஞ்சா கருப்பு, சவுந்தர்யா, நந்தகுமார் ஆகியோர் உள்ளனர்.

குக் கோமாளி
இந்த நிலையில் நேற்றைய எபிசோடில் குக்குகளும் கோமாளிகளும் பேரிங் செய்யும் முறை நடந்தது. அதாவது ஒவ்வொரு குக்காக டெலிபோன் பூத்தில் போன் செய்வார்கள். அப்போது மறுமுனையில் கோமாளிகள் போனை அட்டன்ட் செய்து குரல் மாற்றி பேசுவார்கள்.
லட்சுமி ராமகிருஷ்ணன்
அப்போது குக் ஒரு லைட்டை அடித்தால் யார் கையில் போன் இருக்கிறதோ அவர்தான் இந்த வாரம் pair. இந்த நடைமுறையில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு யோகியும், சுந்தரி அக்காவுக்கு பூவையாரும், உமைருக்கு சுனிதாவும், மதுமிதாவுக்கும் சிவாவும் பேர் ஆகினர்.

தங்கதுரை
அப்போது ராஜு ஜெயமோகன், தங்கதுரையை தவிர வேறு யாராவது pair ஆக வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தார். ஆனால் அவர் எண்ணத்திற்கு மாறாக தங்கதுரையே வந்துவிட்டார். தங்கதுரையை ஏன் வேண்டாம் என்கிறீர்கள் என கேட்டதற்கு, அவர் மொக்கை ஜோக் சொல்வதால் சமையல் செய்யும் போது கவனம் சிதறுகிறது என்றார்.
இதையடுத்து ராஜு ஜெயமோகன் இந்த நிகழ்ச்சி குறித்து காமெடியாக கூறுகையில், லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரே மாதிரியாக சமைப்பதாக தெரிவித்தார். அதற்கு லட்சுமி, அடேய் உன்னை அடிக்க போறேன் என்றார்.

பேரிங்
அது போல் ஷபானா- புகழ் பேரிங் குறித்து ஜெயமோகன் பேசுகையில், ஷபானாவுக்கு குக்கிங் வராது, அதனால்தான் பேரிங் குறித்து சொல்கிறேன் என்றார். பின்னர் பிரியா ராமன் குறித்து பேசும் போது, இவங்க இந்த நிகழ்ச்சியில் எதற்கு, இவர்தான் டாப்பில் இருக்கிறார். பேசாமல் இவரிடமே குக் வித் கோமாளி கோப்பையை கொடுத்துவிடலாம். இவர்தான் ஜெயிக்க போகிறார். இதற்கு இவருக்கு எதற்கு வீணாக ஊதியம் தர வேண்டும் என காமெடியாகவும் அதே நேரத்தில் பிரியா ராமனின் திறமையை பாராட்டியும் அவர் பேசியிருந்தார். இதனால் ஒட்டுமொத்த யூனிட்டே கலகலப்பானது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications