கொட்டும் மழையில் ஆட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர் முல்லை, தனம்..வைரலாக்கும் ரசிகர்கள்
சென்னை: மழையில் நனைந்தபடி பாண்டியன் ஸ்டோர் நடிகைகள் போட்ட ஆட்டம் வைரலாக பரவி வருகிறது.
Recommended Video
சென்னை எங்கும் மழையாக இருக்கும் நேரத்தில் மாடியில் முல்லை மற்றும் தனத்தின் ஆட்டம் பலரையும் கவர்ந்திருக்கிறதாம்.
மழை நேரத்தில் இப்படி ஆட்டம் போட்டால் சளி பிடித்து விட போகிறது என்று ரசிகர்களின் கருணை ஆறாக ஓடுகிறது.

மழையிலும் ஆட்டம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகைகள் தற்போது மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மழையினால் பல இடங்களில் பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர்கள் இந்த நேரத்திலும் சந்தோஷமாக மழையை கொஞ்சி விளையாடி இருப்பது ஒரு சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் பலர் இந்த வீடியோவை ரசித்து வருகின்றனர்

ரசிகர்களை கவர்ந்த தனம், முல்லை
எந்த சூழ்நிலையிலும் இப்படித்தான் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சிலர் இவர்களுக்கு ஆதரவாக கமெண்டுகளை கொட்டிக் கொண்டிருக்கும் போது, சீரியலில் அக்கா தங்கச்சியாக நடித்துவரும் காவியா மற்றும் சுஜிதா இவர்கள் இருவரும் முல்லை, தனமாகவே ரசிகர்களின் உள்ளத்தில் வாழ்ந்து வருகின்றனர். அதனால் தான் இவர்களுடைய ஆட்டத்தை பார்த்து கமெண்ட்களில்
தனம், முல்லை என்று இவர்களை அழைத்து கமெண்டுகளை அனுப்பி இருக்கின்றனர்.

ரசிகர்களின் கேள்வி
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்போது குடும்பமாக சென்னையை சுற்றி பார்க்க சென்றிருக்கும் நேரத்தில் அங்கே கன மழை கொட்டிக்கொண்டு இருக்கிறது. இந்த நேரத்திலும் சீரியலில் எந்த தடையும் இல்லாமல் ஒரு மகா சங்கமத்தை போட்டுவிட்டனர். இதை பார்த்துக் கொண்டிருக்கும் நிறைய ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்ததும் சும்மா விடுவார்களா?? இதையும் வைத்து கலாய்க்க தொடங்கி விட்டார்கள். சென்னையில் சுற்றிப் பார்க்க வந்த இடத்தில் இப்படியா ஆட்டம் போடுவீங்க என்று பலர் வெள்ளந்தியாக கேள்விகளை கேட்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் அறிவுரை
அண்ணன் தம்பிகளின் பாசத்தை கருவாக கொண்டு குடும்ப ஒற்றுமையை மையமாக எடுத்திருக்கும் இந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் ரசிகர்களின் மனதில் வரவேற்பு இருந்து வருகிறது. தற்போது முல்லை மற்றும் தனம் மழையில் நனைந்தபடி ஆட்டம் போட்டதை பார்த்ததும் பலர் உடம்புக்கு சரி இல்லாமல் போய்விடும் என்று பதறி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சீரியலில் தனத்திற்கு குழந்தை தற்போது தான் பிறந்து இருப்பதால் குழந்தை பிறந்த நேரத்தில் இப்படி எல்லாம் ஆட்டம் போட கூடாது என்று பலர் அறிவுரைகளையும் கூறி வருகின்றனர். சீரியல் வேறு சினிமா வேறு என்பதை மறந்து இவர்கள் பேசுகிறார்கள் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications