சூப்பரா பொங்குதே டிடி.. குபீர் உற்சாகமான ரசிகர்கள்.. குதூகல போட்டோஸ்!
சென்னை: சிவப்பு தான் எடுப்பாக இருக்கும் என்று சிவப்பு புடவையில் கலக்கியிருக்கும் டிடியை பார்த்து அசந்துபோன ரசிகர்களால் வாவ்... சொல்லாமல் இருக்க முடியவில்லையாம்.
எப்படிப் பார்த்தாலும் அழகாக இருக்கிறதே என்று ரசிக்கும் ரசிகர்களால் கமெண்ட்கள் பொழிகிறது.
அதிசயமாக புடவையில் வந்தாலும் இதுதான் வெள்ளிக்கிழமை மங்களம் பொங்க எனும் கேப்ஷனுடன் அவர் போட்டுள்ள போட்டோஸ்களைப் பார்த்து ரசிகர்கள் குபீர் உற்சாகமடைந்து வருகின்றனராம்.

புடவையில் ஓவியமாக
காற்றில் முடி கவிதையாக பேச, உடலோடு ஒட்டியபடி புடவையும் சரசரக்க, செல்லமான சிரிப்பினால் மங்களகரமாக மாறியிருக்கும் டிடியை பார்த்ததும் அசந்து போன ரசிகர்கள் அனு அனுவாக ரசித்து கமெண்டுகளை கொட்டுகின்றனர். இப்படியே போய்க் கொண்டிருந்தால் இவருக்கு மட்டும் எப்படித்தான் அழகு கூடிக்கொண்டே இருக்கிறது என்று சிலருக்கு பொறாமை கூடினாலும், ரசிப்பதில் குறைவது இல்லையாம். வயது ஆனாலும் வாலிபம் போகவில்லை என்று கூறுவார்கள். அது ஒரு சிலருக்குத்தான் செட்டாகும் அந்த வகையில் டிடி எனும் திவ்யதர்ஷினியும் ஒருவர்.

மாறாத புன்னகை
தொகுப்பாளர் என்று சொன்னதுமே டக்கென்று அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது டிடி தான். இவருடைய ஜாலியான பேச்சையும் கலகலப்பான கேரக்டரையும் அனைவருக்கும் பிடித்துவிடும். எவ்வளவு மன கவலையோடு இருந்தாலும் இவர் முன்பு அந்தக் கவலைகள் எல்லாம் சிறிது நேரம் கூட நிலைத்து நிற்காது என்று இவருடன் பழகும் நபர்கள் தெரிவித்து வருவர்கள். அந்த அளவுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதிலும் இவர் தலை சிறந்தவர் தான். அதனால் தான் பல விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொள்ளும் போதெல்லாம் அடுத்தவர்களுக்கு முன்னுதாரணமாக மோட்டிவேஷனல் ஸ்பீச்களை கொடுப்பதிலும் இவர் வல்லவர்.

ரசிகர்களின் ஆசையும் இதுதான்
அதுமட்டுமல்லாமல் தன்னுடைய முயற்சியினால் இந்த அளவிற்கு முன்னேறி இருக்கும் இவர் கொஞ்ச நாட்களாக பீல்ட்டை விட்டு விலகி இருந்தார். அதற்கு காரணம் அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த மனக்கசப்புகள் என்று ரசிகர்கள் கூறி வந்தாலும் இவர் மீண்டும் பழைய நிலையிலே வரவேண்டும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், மீண்டும் அதே பழைய டிடி ஆக தற்போது இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இதைத்தான் எதிர்பார்த்தோம் என அவருடைய ரசிகர்களும் இவருக்கு மோட்டிவேஷனல் கொடுத்து வருகின்றனர். எந்த சூழ்நிலையும் மனம் தளராமல் தன்னுடைய கேரக்டரை பாதிக்கும் எதுவும் தனக்கு தேவையில்லை என்று விலகி வைத்து விட்டு இப்போது தன்னுடைய துறையில் பிஸியாக இருக்கிறார்.

கொஞ்சம் அடாவடி தான்
இவரைப் போலவே பல பெண்கள் வாழ்க்கையில் கஷ்டங்களை சந்தித்தாலும் அதை எல்லாம் எப்படி தூக்கி எறிந்து விட்டு வர வேண்டும் என்று இவர் முன்னுதாரணமாக செயல்பட்டு வருகிறார். அதனால்தான் இவரால் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைய முடிந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். இவருடைய வளர்ச்சியைப் பார்த்து இவரை வைத்து சிலர் நெகட்டிவ் கமெண்டுகளைப்போட்டு வந்தாலும் அவர் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப் படுவதே இல்லை. தனக்கு தேவை இல்லாததை தூக்கி எறிந்து விட்டு தனக்குப் பிடித்ததை செய்வது தான் இவருடைய பாலிசி. அதுதான் என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் என்று கூறியிருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: அண்ணாமலை சொன்ன வார்த்தை! ஜெயிலுக்கு போகும் விஜயா.. மீனா செய்த உருப்படியான முடிவு -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications