இரண்டு நாளாக ஒன்னும் நடக்கலையேன்னு பார்த்தா, நல்லா பண்ணிட்டாங்க... கமல் பேச்சு காத்தோட போச்சி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எந்த பிரச்சனையும் நடைபெறவில்லை என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இன்றைய முதல் ப்ரோமோ விருந்து அளித்திருக்கிறது.
வார இறுதி நாட்களில் கமல் என்னதான் அட்வைஸ் கொடுத்தாலும் நாங்க இப்படித்தான் என்று போட்டியாளர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் .அதுவும் தனலட்சுமி இருக்கும் இடத்தில் பிரச்சனை வந்து சேருகிறதா? இல்லை பிரச்சனை இருக்கும் இடத்திற்கு தனம் இருக்கிறாரா? என்று குழப்பமாகவே இருக்கிறது.

ஸ்பெஷல் சீசன் தான்
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டை சச்சரவு இருந்தா தான் அது சுவாரசியம். ரியாலிட்டி ஷோவாக இருந்தாலும் இது எந்த ஒரு ரியாலிட்டி ஷோவும் இதோட டிஆர்பி அடித்துக் கொள்ள முடியாத வகையில் இருந்து வருகிறது .அந்த அளவிற்கு ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை கழுவி ஊத்தினாலும் பார்த்து ரசிக்கின்றனர். அதற்கு காரணம் போட்டியாளர்கள் செய்யும் சண்டைகளும், கலவரங்களும் தான் .அந்த வகையில் இந்த சீசன் ஒரு படி மேலே சென்று இருக்கிறது. 40 நாட்களில் செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்திற்குள்ளே தொடங்கிவிட்டனர். தற்போது 31 வது நாள் தொடங்கி இருப்பதால் இவர்களுடைய ஆட்டம் வேற லெவலில் இருந்து வருகிறது.

காது கிழிந்து விடும் போல
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி குசு குசுவென இந்த சீசனில் பேசி வருகிறார்கள் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்ததாலோ என்னவோ இன்றைய ப்ரோமோவில் கத்தி சண்டை இட்டு ப்ரோமோவை பார்ப்பவர்களின் காதுகள் கிழியும் அளவிற்கு சண்டைகள் இருக்கிறது. இதில் யார் பக்கம் தவறு இருக்கிறது என்பதே கணிக்க முடியாத வகையில் இருக்கிறது. ஆனாலும் கமல் என்னதான் அட்வைஸ் கொடுத்தாலும் அப்போ மட்டும் தலையை ஆட்டிக் கொள்ளும் போட்டியாளர்கள் வார நாட்களில் தங்களுடைய ஆட்டத்தை தொடங்கி விடுகிறார்கள்.

தப்பு தப்பு தான்
ஏற்கனவே மணிகண்டனுக்கு கமல் நீங்கள் அசீம் மாதிரி ஆஹிராதீங்க என்று வார்னிங் கொடுத்து இருக்கிறார் .ஆனால் இன்று அசீமை விட ஒரு படி மேலே சென்று தனலட்சுமியோடு, மணிகண்டன் சண்டை இட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் யாரையும் வாடி போடி என்று அழைத்தால் தப்பு என்று வாதிட்டு கொண்டிருந்த தனலட்சுமி இன்று மணிகண்டனை அவன் இவன் என அழைத்து வசமாக வாங்கி கட்டிக் கொண்டிருக்கிறார் .இந்த ப்ரோமோ தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த வாரமும் பஞ்சாயத்து இருக்கு
ஒவ்வொரு வாரமும் நடக்கும் சண்டை பஞ்சாயத்துகளில் தவறாமல் இடம்பிடிக்கும் ஒரு நபராக தனலட்சுமி இருந்து வருகிறார். இவர் இருக்கும் இடத்தில் சண்டை வந்துவிடுகிறதா? அல்லது இவராகவே கன்டென்ட் கிரியேட் பண்ணுகிறாரா? என்பது பார்ப்பவர்களுக்கு சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் தனலட்சுமி மற்றும் மணிகண்டன் சம்பவம் குறித்து பெரிய பஞ்சாயத்து காத்திருக்கிறது என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். வேறு யாரும் சண்டை இட்டால் இந்த அளவிற்கு ப்ரோமோவில் ஹெவி சவுண்ட் கேட்டதில்லை .ஆனால் அங்கே தனலட்சுமி குரல் இருந்தாலே காதிலிருந்து உய்... என்ற சத்தம் தான் கேட்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications