கடைசி நேரத்தில் பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்.. இந்த வார வெளியேற்றத்தில் இப்படி ஒரு ஏமாற்றமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 11வது வாரத்திற்கான வெளியேற்றம் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடைபெற்று இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

கடைசி நேரத்தில் நடைபெற்ற வெளியேற்றத்தால் ரசிகர்கள் பலரும் பலரும் பீல் பண்ணி கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த முறை விஜய் டிவி பிரபலங்களை பாதுகாப்பதற்காகவே இப்படி ஒரு வெளியேற்றம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த வாரம் தனலட்சுமி தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்

இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் ஒருவர் வெளியேறி கொண்டு இருப்பது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த வாரம் யார் வெளியேறும் போட்டியாளர் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். ஏற்கனவே இந்த வாரத்தில் ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போது அவர்களில் யார் வெளியேறினாலும் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு தடங்கல் தான் என்று பலரும் கருத்து கூறி வந்த நிலையில் கடைசி வாரத்தில் 5 போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து வந்த தனலட்சுமி இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

வெளியேற்றம் ஏமாற்றம் தான்

வெளியேற்றம் ஏமாற்றம் தான்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் 21 போட்டியாளர்கள் ஆரம்பத்திலேயே அறிமுகம் ஆகி இருந்தனர். அதிலும் இரண்டு போட்டியாளர்கள் மக்களின் பிரதிநிதியாகவோ தேர்ந்தெடுத்தனர். அதில் யார் ஏற்கனவே ஒருவர் வெளியேறிய நிலையில் இந்த வாரம் தனலட்சுமி வெளியேற இருப்பது பலருக்கும் ஏமாற்றம்தான். ஆரம்பத்தில் இருந்தே தனலட்சுமி நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு ஏற்ப அடிக்கடி சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். என்னதான் பிரச்சனைகளில் அவர் கலந்து கொண்டாலும் சில நேரங்களில் என்னை வீட்டிற்கு அனுப்பி விடுங்கள் என்று கேமரா முன்பு அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் வந்தார்.

 அழுகைக்குப் பிறகு வேண்டுகோள்

அழுகைக்குப் பிறகு வேண்டுகோள்

ஆனால் கேமரா முன்பு அழுத சில நொடிகளில் மீண்டும் வந்து நான் தெரியாமல் செய்து விட்டேன் என்னை வீட்டிற்கு அனுப்பி விடாதீர்கள் என்று ரசிகர்களிடம் வேண்டுகோளையும் வைத்திருந்தார் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் விருப்பம் தெரிவித்து வந்த தனலட்சுமி பல நேரங்களில் செய்து வந்ததை குறித்து நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வந்தனர். ஆனாலும் இவர் ஃப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் எப்படியும் இருந்து விட வேண்டும் என்று ஆசையை கூறி வந்தார்.

எதிர்பாராதது நடக்குமா

எதிர்பாராதது நடக்குமா

முதல் முறையாக ஜி.பி முத்துவோடு தனலட்சுமிக்கு சண்டை ஏற்பட்டது. பின்பு அசல் கோளாறுடன் சண்டை ஏற்பட்டது. அதற்கு பிறகு அசீம் அமுதவாணன் என பல போட்டியாளர்களோடு தனலட்சுமி சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் இப்போது வரைக்கும் இந்த வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் வயது குறைந்தவர் என்ற ஒரே காரணத்தினாலே இவர் செய்யும் செயல்களை பலர் மன்னித்து விடுகிறார்கள். இந்த நிலையில் நேற்று வரைக்கும் மைனா நந்தினி வெளியேறுவார் என்று கருத்து வெளியான நிலையில் நேற்றோடு வாக்கு செலுத்துதல் முடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் நின்று தனலட்சுமி வெளியேறுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்திலும் எதிர்பார்த்தது நடந்தது போல இந்த வாரமும் நடைபெறுமா? என்றும் பலர் எதிர்பார்த்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+