விதையை எடுங்க.. நட்டு வைங்க.. நேரில் வந்து பார்க்கிறேன்.. சொக்க வைக்கும் தர்ஷா!
சென்னை: செடி நடுங்கள் என்று அழகான ஒரு போஸ் கொடுத்து போட்டோ போட்டுள்ளார் தர்ஷா குப்தா.. பிறகென்ன ரசிகர்கள் மண்ணும் விதையுமாக கிளம்பி விட்டனர்.. விதைப்பதற்கு.
இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு தர்ஷா குப்தா அன்புக் கட்டளை இட்டதும் அவருடைய ரசிகர்கள் அவருக்காக களத்தில் இறங்கி செடிகளை நட்டு போட்டோவை குவித்து வருகிறார்கள்.
ஏனென்றால் செடி நடுவதற்கு பரிசாக தர்ஷா வே ரசிகர்களை நேரில் மீட் பண்ணப் போகிறாராம். இன்ஸ்டாகிராமில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் தர்ஷா குப்தாக்கு ரசிகர்கள் வட்டாரம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கண்ணுக்கு குளிர்ச்சி
இவருடைய செல்லமான சிரிப்பையும் கலக்கலான போட்டோக்களையும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து இருக்கிறதாம். அதுவும் எப்போதும் ஒரு போல இல்லாமல் விதவிதமாக ரசிகர்கள் கண்களுக்கு குளிர்ச்சியை காட்டி இன்ஸ்டாகிராமில் நன்றாகவே என்டர்டைன்மென்ட் பண்ணிக்கொண்டு இருக்கிறாராம். சீரியல்களில் வில்லியாக கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் கில்லியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பின்பற்றுவோர் அதிகம்
இன்ஸ்டாகிராம் டுவிட்டர் யூஸ் பண்ணும் அனைவருக்கும் தெரிந்த பீஸாக இவர் இருப்பதால் இவருக்கு பாலோவரும் அதிகமாக இருக்கிறார்கள். எப்போதுமே இவர் போஸ்ட் போட்டதும் இனிப்பை மொய்க்க வரும் எறும்புகள் போல இவரை மொய்க்கும் ரசிகர்களுக்கு இப்போ நல்லாவே மோட்டிவேஷனல் ஸ்பீச் கொடுத்திருக்கிறார்.

எப்பவும் சிரிச்ச முகம்
இவருடைய சிரித்த முகத்துக்கு காரணம் இவர் எப்பவுமே பாசிட்டிவ் திங்கிங் தான் இருக்க வேண்டும் .அதுபோல யாருக்கும் துளியளவும் துரோகத்தை மனதில் நினைக்க கூட கூடாது. ஏனென்றால் நாம் நினைக்கும் துரோகமும் நாம் செய்யும் செயலும் தான் நமக்கே திருப்பி வினையாக வந்து நிற்கும். அதனால் அடுத்தவர்களைப் பற்றி யோசிக்காமல் கிடைக்கும் நேரங்களில் நம்மை பற்றி பற்றியும் நல்ல செயல்களைப் பற்றியும் நினைத்துக் கொண்டு இருந்தாலே போதும் என்றும் கூறியிருக்கிறார்.

செடி நடுங்க
அதுமட்டுமல்லாமல் என்னுடைய ரசிகர்கள் அனைவரும் வீட்டில் ஒரு மரம் அல்லது செடியை நட்டு அதை எங்க வேணாலும் வைத்து ஒரு போட்டோ எடுத்து எனக்கு போஸ்ட் பண்ணி விடுங்கள். என்னை அந்த போட்டோவில் டேக் பண்ணி அனுப்புங்கள் .எனக்கு டேக் டைப் பண்ணி அனுப்பும் ரசிகர்கள் அனைவரையும் ஒருநாள் மீட் பண்ண போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

லட்டு மாதிரி வாய்ப்பு
போட்டோக்களிலே ஆரத்தி எடுக்கும் அவருடைய ரசிகர்கள் நேரில் பார்க்கும் ஆசை இல்லாமலா இருப்பார்கள் .தலைவி அப்படி சொன்னதும் பலரும் போட்டோக்களாக எடுத்து குவித்து வருகிறார்களாம். ஒருநாள் முழுக்க அனைத்து ரசிகர்களையும் மீட் பண்ணி கொண்டாடுவோம் என்று கலக்கலாக லைவில் வந்து கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் வருவதற்கு பத்து நாட்களுக்கு முன்னரே நான் உங்களிடம் தெரிவித்து விடுவேன் என்றும் கூறியிருக்கிறார். அதுவும் சென்னையைச் சுற்றிப் பார்க்க அவர்களுக்கு தான் இந்த அதிர்ஷ்டமாம்.

கரெக்டாக வரும் பதில்
ரசிகர்களின் ஒவ்வொரு கமெண்ட் களுக்கும் பதிலளிக்கும் இவர் எவ்வளவு பிசியாக இருந்தாலும் போட்டோ ஷூட் நடத்துவதில் குறை வைக்காமல் இவரை எதிர்பார்க்கும் ரசிகர்களை ஏமாற்றுவதும் இல்லையாம். தினமும் போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு கமெண்ட் களுக்கு பதிலளித்து வருகிறார். இதனால்தான் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

சூப்பர் ஆக்டிவ்
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக பலர் இருந்தாலும் இவர் தான் அதில் முதலிடத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறார் .சில நேரங்களில் குடும்ப குத்துவிளக்காகவும் சில நேரங்களில் கவர்ச்சி புயல் ஆகவும் உருமாறி வருகிறார் .தற்போது லைவில் கலக்கலான சேலை கட்டிக்கொண்டு முகத்தில் மேக்கப் எதுவும் போடாமல் ரசிகர்களின் கமெண்டுகளை படித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய போட்டோக்களையும் வீடியோக்களையும் பார்த்த பலர் ரசிகர்கள் இவருக்காக மரம் நட தொடங்கிவிட்டார்கள் இனி மழை கொட்டித் தீர்க்க தான் போகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications