தர்ஷா குப்தா விலகிட்டார்.. களையிழந்து போன செந்தூரப் பூவே.. சோகத்தில் ரசிகர்கள்!
சென்னை : செந்தூரப்பூவே சீரியலுக்கு டாட்டா காண்பித்து விட்டார் தர்ஷா குப்தா. தர்ஷா குப்தா இதுபற்றி நம்மிடம் ஒரு வார்த்தை கூட சொல்லலையே என்று செல்லமாக கோபிக்கும் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பீலிங்கோடு கமெண்டுகளை போடுகின்றனர்.
இன்ஸ்டாகிராமின் செல்ல தலைவி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டாலும் செந்தூரப்பூவேவில் அனலடிக்கும் ஐஸ்வர்யாவாக மாற்றி விட்டீர்களே என்றுதான் பலரும் புலம்புவர்.
சின்னத்திரையில் இப்படி கொடி நாட்டி வந்த தர்ஷா குப்தாவுக்கு இப்போது வெள்ளித்திரை வாய்ப்பு வந்து விட்டது. இதனால் செந்தூரப்பூவேவுக்கு டாடா காட்டி விட்டார். வெள்ளித்திரையில் களமிறங்கும் தர்ஷாவுக்கு குவியும் வாழ்த்துக்களால் இணையதளமே ஸ்தம்பித்துள்ளது.

கண்ணாலே மிரட்டுறாரே
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே சீரியலுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கதாநாயகனாக ரஞ்சித் துரைசிங்கம் கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரோஜா கேரக்டரில் ஸ்ரீநிதி மேனன் நடிக்கிறார். ரஞ்சித்தின் முதல் மனைவியாக பிரியா ராமனும் நடித்திருக்கிறார். இதில் ரஞ்சித்தின் மாமன் மகளான ஐஸ்வர்யா கேரக்டரில் தர்ஷா குப்தா நடித்து வந்தார். இவர்தான் இந்த சீரியலின் மெயின் வில்லியும் கூட. அழகில் ஹீரோயினுக்கு டப் கொடுத்துக்கொண்டிருக்கும் தர்ஷா இந்த சீரியலின் நெகட்டிவ் ரோலில் நடித்தாலும் ரசிகர்களின மனதில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சீரியலில் இவரைப் பார்த்து கழுவி ஊற்றும் ரசிகர்கள் கூட இவருடைய அழகை புகழ்வதில் தவறுவதில்லை.

மயக்கும் பேரழகி
தர்ஷா குப்தாவுக்கு சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் வெள்ளித்திரை கதாநாயகிகளுக்கு போட்டியாக சமூக வலைதளத்தை கலக்கி வருகிறார். தன்னுடைய க்யூட்டான சிரிப்பினாலும் குழந்தை போன்ற மனதினாலும் ரசிகர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். இவர் இன்ஸ்டாகிராம் ,ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற எல்லா சமூக வலைத்தளத்திலும் செம ஆக்டிவ் தான். தினமும் போஸ்ட் போட்டு ரசிகர்களுக்கு தன்னுடைய முகத்தையும் அழகையும் மறந்து விடாதபடி பண்ணிக் கொண்டிருக்கிறார். அதனாலேயே இவர் ஒருநாள் போஸ்ட் போடவில்லை என்றாலும் இவரை நினைத்து கமெண்ட்ஸ்களில் பீல் பண்ண தொடங்கிவிடுகின்றனர்.

ஒர்க் பிசி தான்
ஒரு சில நேரங்களில் இவருக்கு நெகட்டிவ் கமெண்டுகள் வந்தாலும் அதை எல்லாம் கண்டுக்கொள்ளாமல் தனக்கு ஆதரவு தரும் ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்திருக்கிறாராம். ஆரம்பத்தில் இன்ஸ்டாகிராமில் இவருடைய போஸ்டுக்கு கமெண்ட் போடும் ரசிகர்களுக்கு எல்லாம் ரிப்ளை செய்துகொண்டிருந்தார். ஆனால் தற்போது சூட்டிங்கில் படு பயங்கரமாக மாறிவிட்டதால் ரசிகர்களை கண்டு கொள்ளவில்லையே என பலர் கமெண்ட்ஸ் களில் புலம்பி வருகின்றனர். ஒரு லைக் ஆவது எங்களுடைய கமெண்ட்டுக்கு போடலாம் என்று பீல் பண்ணவும் தவறவில்லை. ஆனால் லைவில் வரும்போது தன்னுடைய சூழ்நிலையிலும் நேரமில்லாத காரணத்தையும் கூறிக் கொண்டிருக்கிறார். அதனைக் கேட்டதும் ரசிகர்கள் கொஞ்சம் மனநிறைவு அடைந்திருக்கின்றனர்.

சினிமாவுக்கு முன்னேற்றம்
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் அறிமுகமாகி இப்போ பல சீரியல்களில் ரெக்கை கட்டி பறந்து வருகிறார். இவருடைய வளர்ச்சி ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறது .அது ரசிகர்களின் ஒத்துழைப்பாலும் இவருடைய திறமையினாலும் என்று கூறியிருக்கிறார். தற்போது இவர் மின்னலே மற்றும் செந்தூரப்பூவே சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ஏற்கனவே ஒரு திரைப்படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். இப்போ மீண்டும் வேறு திரைப்படத்திலும் கமிட்டாகி இருப்பதால் சீரியலில் கவனத்தை செலுத்த முடியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

அதுக்காக தான் இருக்குமோ
அதனால்தான் இந்த செந்தூரப்பூவே சீரியலில் இருந்து இவர் விலகிவிட்டார் என்று ரசிகர்கள் பீல் பண்ணி வருகின்றனர். ஆனாலும் இவர் இதைப்பற்றி ரசிகர்களிடம் எதுவுமே கூறாத நிலையில் இன்றைய விஜய் டிவியின் ப்ரோமோ வில் ஐஸ்வர்யாவுக்கு பதிலாக இனி இவர் என புது நடிகையை போட்டு விட்டார்கள். இதை பார்த்ததும் ஷாக் ஆன ரசிகர்கள் அப்போ தர்ஷாவுக்கு என்ன ஆச்சு அவர்தான் இந்த வில்லத்தனத்துக்கு செட் ஆவார் என்று கூறிவருகின்றனர். தற்போது சன்னி லியோன் ,டிக் டாக் பிரபலமான ஜீபி முத்து நடிக்கும் திரைப்படத்தில் இவரும் நடிக்கிறார். அதற்கான ஷூட்டிங் வேலைகள் ஆரம்பித்த நிலையில் அதற்காக இந்த சீரியலில் இருந்து விலகி இருப்பாரோ என்று ரசிகர்கள் புது விளக்கம் கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் இதுபற்றி தர்ஷாவே காரணம் சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும் பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications