கூடவே இருந்து மைனா இப்படி செய்யலாமா?ரட்சிதா மீது எந்த தப்பும் இல்லை.. கணவர் தினேஷ் கொடுத்த விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ரட்சிதா மகாலட்சுமியை பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் அவரைப் பற்றிய உண்மையான கேரக்டரை பற்றியும் அவருடைய கணவரான தினேஷ் கார்த்திக் பேசி இருக்கிறார்.

ரட்சிதா மகாலட்சுமியோடு ராபர்ட் மாஸ்டர் பழகி வருவதை குறித்து பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களும் சரி ரசிகர்களும் சரி பலவிதமாக கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை குறித்து தன்னுடைய பதில் என்ன என்பதை பற்றி ரட்சிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது.

சின்ன கருத்து வேறுபாடு

சின்ன கருத்து வேறுபாடு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியளராக இருக்கும் ரட்சிதாக்கும் எனக்கும் ஒரு சிறு கருத்து வேறுபாடு தான் இருக்கிறது ஆனால் அது விரைவில் சரியாகிவிடும். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவுடன் செய்யும் செயல்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனக்கு அதை பார்க்கும்போது கடுப்பாகத்தான் இருக்கிறது. காரணம் ராபர்ட் மாஸ்டரை விடவும் ரட்சிதாவின் உயிர்த்தோழியாகவும் அவர் கூடவே இருக்கும் மைனா நந்தினியும் பிக் பாஸ் வீட்டிற்குள் மேலும் ரட்சிதாவின் பெயரை கெடுக்கின்ற மாதிரி நடந்து கொள்ளும் விதம்தான் என்று கூறியிருக்கிறார்.

சொல்லி புரிய வைத்திருக்கலாம்

சொல்லி புரிய வைத்திருக்கலாம்

நிகழ்ச்சிக்குள் எல்லா போட்டியாளர்களும் சென்ற பிறகு ஒரு வாரம் கழித்து தான் மைனா நந்தினி உள்ளே போனார். முதல் வாரத்திலேயே ராபர்ட் மாஸ்டர் ரட்சிதாவிடம் நீங்கள் தான் என்னுடைய கிரஷ் உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் வெளியே தொடர வேண்டும் நம்முடைய உறவு என்று கூறியதை குறித்து பல்வேறு மீம்ஸுகளும் கருத்துக்களும் வெளியாகி இருந்தது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் மைனா உள்ளே சென்று இருக்கிறார். ஆனால் உள்ளே சென்ற பிறகு இதைப்பற்றி ஒரு நல்ல தோழியாக இருந்தால் ரட்சிதாவிடம் பேசி அவருக்கு புரிய வைத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல் ரட்சிதா சும்மா இருந்தாலும் கூடவே இருந்து மைனா தான் ராபர்ட் மாஸ்டர் செய்யும் செயலை ஊக்கப்படுத்தி வருகிறார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்த பேச்சி தேவையா

இந்த பேச்சி தேவையா

மைனா பிக் பாஸ் வீட்டிற்குள் அறிமுகமான ஒரு சில நாட்களில் சர்க்கரை போட்ட டீ வேண்டாம் என்று ராபர்ட் மாஸ்டர் அடம் பிடிக்கும் போது ஷிவின் அருகில் இருந்து, இங்கே பாரு மைனா இவர்கள் இருவரின் பஞ்சாயத்தை என்று சொன்னபோது கூட, சின்ன சிறுசுகள் பிரச்சனையில் நான் தலையிடவில்லை என்று கூறுகிறார். வெளியே இருந்து எல்லாம் பார்த்துவிட்டு உள்ளே சென்ற பிறகு இப்படி பேசுவது சரிதானா ?அதுபோல ரட்சிதா டாஸ்க் விளையாடிக் கொண்டிருக்கும்போது விக்ரமன் அவருக்கு ஹெல்மெட் மாட்டி விடுகிறார் ஆனால் அதை பார்த்து ராபரிடம் உங்கள் மனநிலை எங்களுக்கு புரிய முடியுது..என்ன பீலிங்கா? என்று கேட்கிறார். ஒரு பிரெண்ட் இப்படி பொது இடத்தில் இன்னொருவருடன் சேர்த்து பேசலாமா?
என்று கேள்வியை கேட்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் கேமில் எப்படி வேணாலும் விளையாடலாம் ஆனால் பர்சனல் லைப்பில் ரட்சிதாவுக்கு என்று எவ்வளவு பெரிய பெயர் இருக்கிறது. அவருக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. நாங்கள் எல்லாம் இருக்கிறோம் என்பதை தெரிந்தும் தங்களுக்கு என்டர்டைன்மென்ட் கிடைக்க வேண்டும் என்பதற்காக ரட்சிதாவின் பெயரை கெடுக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கிறார்.

கடுப்பான கணவர்

கடுப்பான கணவர்

அதுமட்டுமல்லாமல் ரட்சிதா பலமுறை தெளிவாக கூறுகிறார். நான் என் பாட்டுக்கு ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்ன வைத்து வேறு விதமாக விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று வார்னிங் கொடுத்தாலும் ,பிற போட்டியாளர்கள் ஒரு சிலர் கண்டுகொள்ளாமல் நடந்து வருகின்றனர். ஆனால் அவர்களையெல்லாம் விடவும் ரட்சிதாவை பற்றி நன்றாக தெரிந்த மைனா இப்படி செய்வதுதான் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது .எனக்கு ரட்சிதாவை பற்றி நன்றாகவே தெரியும் இந்த இடத்தில் பிரச்சனை வேண்டாம் என்று தான் ராபர்ட் மாஸ்டரிடம் பட்டும்படாமல் பேசிக் கொண்டிருக்கிறார். பல நேரங்களில் நீங்கள் எனக்கு அண்ணன் மாதிரி என்று உணர்த்தி இருக்கிறார் ஆனால் மைனா கூடவே இருந்து செய்யும் செயல்தான் மோசமாக இருக்கிறது என்று ரட்சிதாவின் கணவர் தினேஷ் வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு நீங்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+