Perarasu: சின்மயி மன்னிப்பு கேக்கணும்! மோகன் ஜி-யை அசிங்கப்படுத்திட்டாங்க! பேரரசு ஆதங்கம்
சென்னை: 'திரௌபதி 2' படத்தில் "எம்கானோ" பாடலைப் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட பாடகி சின்மயியை சுற்றிய சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நடிகை மதுவந்தி, இயக்குநர் மோகன் ஜி ஆகியோருக்குப் பிறகு, தற்போது பிரபல இயக்குநர் பேரரசுவும் திறமையாகவும் கடுமையாகவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சின்மயியின் மன்னிப்பு
'திரௌபதி 2' படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைச்சிருக்கார். சமீபத்தில் வெளியான "எம்கானோ" பாடலை பாடியதற்கு பின்பு சின்மயி தனது சமூக ஊடகத் தளத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். "ஜிப்ரானை எனக்கு பல வருடங்களாகத் தெரியும். அவர் ஸ்டுடியோவில் இருந்து என்னை பாட அழைத்தபோது அங்குச் சென்று பாடிவிட்டு வந்துவிட்டேன். அப்போது அங்கு ஜிப்ரான் இல்லை. இப்போதுதான் எல்லாம் புரிய ஆரம்பிக்கிறது. முன்பே தெரிந்திருந்தால் ஒருபோதும் அந்தப் பாடலைப் பாடி இருக்க மாட்டேன். அந்த கொள்கைக்கும் எனக்கும் நிறைய முரண்பாடு உள்ளது, இதுதான் உண்மை என்று பதிவிட்டு, மன்னிப்புக் கோரியிருந்தார்.
மோகன் ஜி இயக்கிய பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் போன்ற படங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மத்தைக் கொட்டுகிறது என்றும், தாழ்த்தப்பட்ட சாதிப் பிரிவு இளைஞர்களைக் கெட்டவர்களாகக் காட்டுகிறார் என்றும் விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதனால் மோகன் ஜி படத்தில் இவர் பாடியதற்காக சோசியல் மீடியாவில் சிலர் கேள்வி எழுப்பி வந்ததால் தான் சின்மயி மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டு இருந்தார்.
சின்மயி பதிவு போட்டதைத் தொடர்ந்து, இயக்குநர் மோகன் ஜியும் ஒரு பதிவு வெளியிட்டிருக்கார். "என்னுடன் 'திரௌபதி 2' படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அல்லது யாரையும் குறி வைத்துத் தாக்க வேண்டாம். திரௌபதி 2' படம் பேசுவது என் சொந்த சிந்தனை. என்னுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ இணைந்து பணியாற்றும் எந்த நபரையும் குறி வைத்துத் தாக்குவது கோழைத்தனம் ஆகும்" என்று கூறி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்திருக்கார்.
மதுவந்தி எழுப்பிய கேள்வி
சின்மயியின் இந்த மன்னிப்பு கோரும் செயலுக்கு மதுவந்தி எதிர்ப்புத் தெரிவித்து, சின்மயிக்குக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். அதாவது, சினிமாவில் இருக்கும் போது ஒவ்வொரு படத்திலும் தனது கொள்கைக்கும் கருத்துக்கும் ஒத்துப்போன பாடல்களை மட்டுமே தான் பாடியிருக்காரா சின்மயி என்ற சவாலை மதுவந்தி வைத்தார்.
சிம்மயி மன்னிப்பு கேட்டதற்கு இயக்குனர் பேரரசு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் பேசும்போது, சின்மயி இந்த படத்தின் பிரமோஷனுக்கு வரலையா? இந்த படத்தில் பாடியதற்காக அவங்க மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தாங்க. அது எவ்வளவு தவறான விஷயம், இவங்க நான் பாடுவதற்கு தடை விதித்து இருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில் சொல்லிட்டு இருந்தாங்க. இப்போ பாடுவதற்கு தொடங்கிய பிறகு இப்படி பேசிட்டு இருக்கிறது சரியா?
ஒரு படத்தை உருவாக்குவது என்பது அவ்வளவு ஈஸியான காரியம் கிடையாது. இப்ப இருக்குற சூழ்நிலையில் அது ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. அப்படி கஷ்டப்பட்டு உருவாக்கின ஒரு படத்தை பற்றி கடைசி நேரத்தில் இப்படி நெகட்டிவாக பேசுறாங்க. ஒரு படத்தின் கதை என்ன? இயக்குனர் யார்? என்று எந்த கேள்வியும் கேட்காமல் எப்படி ஒரு பாடகி பாட வருவாங்க? இது எல்லாருக்குமே இருக்கிற சந்தேகம் தானே.
பாடகி சித்ரா, சுசீலா அம்மா எல்லாரும் எத்தனை வருஷமா பாடகிகள் ஆக இருக்கிறார்கள். அவங்க இப்படி இந்த பாடல் பாட மாட்டேன், அந்த பாடல் பாட மாட்டேன் என்று சொன்னது இல்ல. எத்தனையோ ஹிட் பாடல்கள் கொடுத்த சுசீலா அம்மா தான் நேத்து ராத்திரி யம்மா என்ற பாடலை பாடுனாங்க. அதற்காக அவர்களை யாரும் தவறா பேசுனாங்களா? இல்ல அது அவங்களுக்கு வருத்தத்தை கொடுத்துச்சா? இல்லையே...
மோகன் ஜி பற்றி கடைசி நேரத்தில் இவங்க நெகட்டிவா இப்படி பேசறதால இந்த படத்திற்கு எவ்வளவு பின்னடைவு வரும்? என்ன நடந்திருந்தாலும் சரி நான் இந்த படத்தில் பாடியதற்கு மன்னிப்பு கேட்கிறேன் என்று சின்மயி சொன்னதற்காக கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த படஇயக்குனரை பற்றி தெரியாமல் நான் பாடிட்டேன் என்று அவங்க சொல்லி இருக்காங்க அதற்காக அவங்க மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என்று பேரரசு சொல்லி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications