Exclusive: நீயா நானா சக்ஸஸுக்கு காரணம் இதுதான்! தலைப்பில் இத்தனை விஷயம் இருக்கு! இயக்குனர் பளிச்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி பல வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெறுவதற்கு காரணம் என்ன என்பது பற்றி இந்த நிகழ்ச்சியின் "இயக்குனர் சில்வெஸ்டர் திலீபன்" ஒன்இந்தியா தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி 2006 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இருந்து இந்த நிகழ்ச்சிக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் வார இறுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிவந்தது. இப்போது ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனாலும் ஒவ்வொருவாரமும் இந்த நிகழ்ச்சியில் என்ன தலைப்பில் விவாதம் நடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருக்கிறது. வியாழக்கிழமை இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகும் போது அது குறித்த பரபரப்பும் மக்கள் மத்தியில் தொற்றிக் கொள்கிறது. எத்தனையோ நிகழ்ச்சிகள் புதியது புதியதாக வந்தாலும் நீயா நானா நிகழ்ச்சியை அடித்துக் கொள்ள முடியாது என்று ரசிகர்கள் ஆணித்தரமாக சொல்லி வருகிறார்கள்.

இந்த அளவிற்கு மக்கள் இந்த நிகழ்ச்சியை ரசிப்பதற்கு காரணம் என்ன என்பது பற்றி இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் ஒன் இந்தியா தமிழில் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் இயக்குனர் சில்வெஸ்டர் திலீபன் பேசுகையில் நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது தான் நீயா நானா நிகழ்ச்சி புதியதாக தொடங்கப்பட்டிருப்பதாக எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்த நேரத்தில் இருந்த எல்லா நிகழ்ச்சியை விடவும் இந்த நிகழ்ச்சி வித்தியாசமாக இருக்கிறதே என்று எனக்கே ஒரு வியப்பாக இருந்தது. உடனே நான் அந்த நிகழ்ச்சியில் விவாதத்தில் கலந்து கொள்ள கொடுக்கப்பட்ட போன் நம்பருக்கு போன் செய்து பேசினேன். அப்போது அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி சார் தான் போன் எடுத்து பேசினார். அவரிடம் நான் இந்த நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்று சொன்னேன். உடனே அவர் நேரில் வரச் சொன்னார்.

பிறகு என்னை சந்தித்ததும் நான் ஜேனலிசம் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னதும் என்னை பார்ட் டைம் நீயா நானா நிகழ்ச்சியில் சேர்ந்து கொள்ள சொன்னார். நானும் சரி என்று வேலை பார்த்துக் கொண்டுதான் படித்துக் கொண்டிருந்தேன். அதற்குப் பிறகுதான் நீயா நானா நிகழ்ச்சியில் உள்ளே நடக்கும் விஷயங்கள் எனக்கு தெரிய ஆரம்பித்தது. எத்தனையோ விவாத நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டாலும் நீயா நானா நிகழ்ச்சி தனித்து நிற்பதற்கு காரணம் அந்த நிகழ்ச்சியின் தலைப்புகள்தான்.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கோபிநாத், இயக்குனர் ஆண்டனி எல்லோரும் நண்பர்கள். அவர்களுடைய விவாதமே மக்கள் மனதில் இருக்கும் கருத்துக்களை எடுத்து சொல்வதாக தான் இருக்கும். ஒரு விஷயம் இப்படித்தான் என்று காலம் காலமாக பின்பற்றப்பட்டு வந்தால் அது ஏன்? எப்படி? எதற்காக? என்று உடைக்கும் வகையில் தான் ஆண்டனி சாரின் கேள்விகள் இருக்கும். அதே மனநிலையில் கோபிநாத் இருப்பதால்தான் இந்த நிகழ்ச்சி இவ்வளவு மக்களை சென்றடைந்திருக்கிறது.

சில வருடங்கள் கழித்து ஆண்டனி சார் என்னை இயக்குனராக மாற்றி இருந்தார். அதற்கு பிறகு நான் தமிழ்நாட்டு மக்களின் குரலாக தலைப்புகள் இருக்க வேண்டும் என்று யோசித்து அதன்படி விவாதத்தை வைக்கிறோம். அதனால் தான் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் எளிமையாக சென்றடைகிறது. நாம நினைப்பதையே இங்கே பேசுகிறார்களே என்று எல்லோரும் சொல்லும் வகையில் இயல்பாக நிகழ்ச்சியை கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.
கடந்த வாரத்தில் கூட வெளிநாட்டில் இருக்கும் தமிழர்கள் தமிழ் மரபை மாறாமல் இருப்பது குறித்து ஒரு எபிசோடு எடுத்து இருந்தோம். இது எதற்காக இந்த முயற்சி எடுத்தோம் என்றால் ஒரு கதையை சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அதில் பல நண்டுகள் இருந்தாலும் தமிழ்நாட்டின் நண்டு மட்டும் அடுத்தவனை முன்னேற விடாமல் கீழே இழுத்து போட்டுக் கொண்டிருப்பது போல சிலர் கதை சொல்வார்கள்.
இது பொய் என்று நிரூபிக்கும் வகையில்தான் நாங்கள் தமிழ் மக்கள் பல நாடுகளில் இருந்தாலும் தமிழை மறக்கவில்லை, தமிழ் பாரம்பரியத்தை மறக்கவில்லை என்பதை எடுத்து சொல்வதற்காக அந்த எபிசோடு நடத்தினோம். இதுபோல சின்ன சின்ன விஷயங்களிலும் மக்களின் அறியாமை உடைபட வேண்டும் என்பதில் கவனமாக இருப்பதால் இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்று இயக்குனர் சில்வெஸ்டர் தீபன் கூறியிருக்கிறார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications