திருமணத்தை ரகசியமாக வைத்திருந்த சன் டிவி சீரியல் ஜோடி.. குழந்தையை குறித்து வெளியிட்ட பதிவு
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் ஒன்றாக நடித்த நடிகை நடிகர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சின்னத்திரை நடிகை ஆன திவ்யா ஸ்ரீதர் அவருடன் இணைந்து நடித்த நடிகர்வை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகு தற்போது இவர்கள் இருவரின் அன்பின் வெளிப்படாக மற்றொரு உயிர் வரப்போவதை சந்தோஷத்தோடு ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளனர்.

மறைக்கப்பட்ட திருமணம்
சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கேளடி கண்மணி என்னும் சீரியலில் நடித்து வந்த திவ்யா ஸ்ரீதர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களோடு பகிர்ந்துள்ளார். அது மட்டும் அல்லாமல் அவருடைய கணவர் அர்ணவ் பற்றியும் அவரோடு தனக்கு இருக்கும் அன்பைப் பற்றியும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். ஏற்கனவே கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆன புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. ஆனால் அது குறித்து இது நிஜ திருமணம் அல்ல, நாங்கள் விளம்பரங்களில் நடிக்கும்போது எடுத்த புகைப்படங்கள் என்று விளக்கம் கொடுத்து அந்த புகைப்படங்கள் அளிக்கப்பட்டிருந்தது .

முதல் சந்திப்பு
தற்போது திவ்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கள் அழகான பயணம் 2017 இல் தொடங்கியது. கேளடி கண்மணி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பானது. அதில் நாங்கள் ஒருவரை ஒருவர் அறிந்தோம். அது உண்மையான புரிதல் வரை நீடித்தது. இறுதியாக நாங்கள் எங்கள் வாழ்க்கையை ஒன்றாக பகிர்ந்து கொள்ள முடிவு செய்தோம் அதனால் எங்கள் வாழ்க்கையை இன்னும் அழகாக மாற்ற முடியும் என்பதை அறிந்து அதன்படி எங்கள் வாழ்க்கையை தொடங்கினோம். ஐந்து வருட ஒற்றுமை, அன்பு, கவனிப்பு,சண்டைகள், வாக்குவாதங்கள் ஆனால் இன்னும் இரு வேறு மரபுகளில் நாங்கள் இணைந்திருப்பதால் பல நல்ல உள்ளங்களால் ஆசிர்வதிக்கப்பட்டதால் நாங்கள் நிச்சயமாக அதிர்ஷ்டசாலி ஜோடிகளில் ஒருவர் என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

மகிழ்ச்சியான செய்தி
அது மட்டுமல்லாமல் எங்களின் சொந்த கனவு இல்லத்தில் காலடி எடுத்து வைப்பதன் மூலம் எங்கள் வாழ்வின் மிகப்பெரிய இலக்கை அடைந்துள்ளோம். இப்போது நாங்கள் எங்கள் வாழ்க்கையின் மிக அற்புதமான மற்றும் பொறுப்பான அத்தியாயத்திற்குள் நுழைந்துள்ளோம். விரைவில் நாங்கள் எங்கள் குழந்தையை எதிர்பார்க்கிறோம். காதலர்களாகவும், வாழ்க்கை துணைவர்களாகவும், இப்போது பெற்றோராகவும் இதை எப்போதும் போற்றுவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் பகிர்ந்து கொள்ளும் இந்த குறிப்பிட்ட பொக்கிஷத்திற்கு மாற்றீடு இல்லை என தன்னுடைய கணவரான அருணவ்வை டேக் செய்திருக்கிறார்.

ஒரே நன்றி மழை தான்
மேலும் நீங்கள் எனது குடும்பத்திற்கும் எனக்கும் அளித்த அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவுக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த தருணத்தை எடுத்துக் கொள்கிறேன். தயவு செய்து தொடர்ந்து இதே போல தனக்கு ஆதரவு அளித்து வரவேண்டும் என்று திவ்யா ஸ்ரீதர் மகிழ்ச்சியோடு நெகிழ்ச்சியாக பதிவு வெளியிட்டிருக்கிறார். இதை பார்த்த பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருடைய கணவரான அருணவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லமா சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications