Dude vs Bison vs Diesel 1st day box office: பைசன், டீசல், டியூட் முதல் நாள் போட்டியில் கோடியை அள்ளியது இவங்கதான்!
சென்னை: இந்த ஆண்டுத் தீபாவளித் திருவிழா, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. வழக்கமாகப் பெரிய நடிகர்களின் படங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் பண்டிகைக் காலத்தில், துருவ் விக்ரமின் 'பைசன்', பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்', மற்றும் ஹரீஷ் கல்யாணின் 'டீசல்' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகி, திரைத்துறையினரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
இந்த மூன்று படங்களின் முதல் நாள் வசூல் நிலவரங்கள் தற்போது வெளியாகி இருக்கும் நிலையில், பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனிங் ரேஸில் யார் மாஸ் காட்டியிருக்கிறார்கள் என்று இங்கே விரிவாகப் பார்க்கலாம்.

பிரதீப் ரங்கநாதனின் டியூட்
முதல் நாள் வசூல் ஒப்பீட்டுப் பந்தயத்தில், பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' திரைப்படம் அமோகமான வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளது. அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கிய இந்தப் படத்தை, தென்னிந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏ.ஜி.எஸ். நிறுவனமும், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே நேரடியாகவும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்தது.
வசூல் சாதனை
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா என மூன்று மாநிலங்களிலும் அதிகப்படியான திரையரங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட 'டியூட்', முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 10 கோடிக்கும் மேல் வசூல் செய்து விட்டதாகச் சாக்.நிக் (Sac.nik) இணையதளம் தெரிவித்துள்ளது. 'டியூட்' படம் செம ஜாலியாக, ஃபன்னாக, செம எண்டர்டைனராக இருப்பதாகவும், படத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்து வரவேற்கத்தக்கது என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இரண்டாவது இடத்தில் துருவ் விக்ரமின் பைசன்
அடுத்த இடத்தில், அழுத்தமான கதைக்களத்துடன் களமிறங்கிய துருவ் விக்ரமின் 'பைசன் - காளமாடன்' திரைப்படம் உள்ளது. இந்தப் படம் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேஷனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. இயக்குநர் மாரி செல்வராஜ் இந்தப் படத்தை இயக்க, பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
பைசன் வசூல்
வலுவான கதை, சமூக அரசியல் பேச்சு, தென் மாவட்ட மக்களின் வாழ்வியல், ரசனையான கபடி மற்றும் காதல் காட்சிகள் என அனைத்தும் நிறைந்திருந்தாலும், இந்தப் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 2.5 கோடி வசூலித்துள்ளது என்று சாக்.நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. படத்தில் மாரி செல்வராஜ் பேசியுள்ள அரசியல் சமூகத்திற்குத் தேவையான அரசியலாக உள்ளது என்றும், இந்தப் படத்திற்குத் தேசிய விருதுகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மூன்றாவது இடத்தில் ஹரீஷ் கல்யாணின் டீசல்
இந்தப் பந்தயத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் படம், ஹரீஷ் கல்யாணின் 'டீசல்' திரைப்படம் ஆகும். முந்தைய இரண்டு படங்களுடன் ஒப்பிடுகையில், 'டீசல்' படத்திற்குக் கிடைத்த திரையரங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகும். இந்தப் படம் முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 25 இலட்சம் மட்டுமே வசூலித்துள்ளது என்று சாக்.நிக் வலைதளம் தெரிவித்துள்ளது.
பாராட்டு
படம் பார்த்தவர்கள், 'சர்தார்' படத்தில் தண்ணீர் மாஃபியாக்கள் குறித்துப் பேசப்பட்டது போல், இந்தப் படத்தில் டீசல் மாஃபியாக்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது என்றும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் படம் நன்றாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.
தீபாவளி ரேஸில் பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' அமோக வெற்றி பெற்றிருந்தாலும், மூன்று இளம் நடிகர்களின் படங்களும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. முதல் நாள் வசூலைக் கடந்து, இனிவரும் நாட்களில் படங்களின் வரவேற்பு மற்றும் பாசிட்டிவ் விமர்சனங்களின் அடிப்படையில் வசூல் கூடும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications