பூவிழி வாசலிலே லாலா லாலா! தோட்டத்தில் தோண்டும் போது! காய்ச்சலையே வரவழைத்த இளையராஜாவின் திகில் இசை!
சென்னை: பூவிழி வாசலிலே படத்தை பார்த்துள்ளீர்களா, அதில் தோட்டத்தை தோண்டும் போது சேலை வரும். அப்போது இளையராஜாவின் இசை திகிலாக இருந்தது. அதில் இயக்குநர் பாஸிலின் ஸ்பெஷல்கள் என சிலவற்றை சொல்லலாம்.
இதுகுறித்து செல்வன் அன்பு என்பவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: பூவிழி வாசலிலே... எவ்வளவு அழகான தலைப்பு. ஒரு குழந்தையின் விழி வாசல் வழியே காணும் காட்சியின் பின் விளைவுகள்தான் பூவிழி வாசலிலே திரைப்படம்.

என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு திரைப்படத்தில் ரேகா என்கிற மனநலம் குறைந்த தாயிடம் குழந்தையை ஒப்படைப்பார்கள்.
இந்தப் புள்ளியிலிருந்து தான் கதை தொடங்குகிறது.
மனநலமற்ற தாய் தன் குழந்தையுடன் வசிக்கிறாள். அவள் மனம் குழந்தையை எல்லோரும் அவளிடமிருந்து பிரித்து விடுவார்களோ என பயப்படுகிறது. கணவன் சத்யராஜைக்கூட நெருங்க விடாத அந்த மனநலமற்ற தாய் ஒரு நாள் குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்கிறாள்.
அது முதல் குடிகாரனாகி தவித்து வாழ்கிறார் சத்யராஜ். தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்த பிரிவு அவரை விரக்திக்கே கொண்டு போகிறது. தன் மனைவி தூக்கில் தொங்கிய சேலையை அப்படியே அந்த ரூமிலேயே விட்டு வைத்திருக்கும் சத்யராஜ் கூட எமோஷனல் பைத்தியமோ என்று தோன்றுகிறது.
அப்படி அவன் பிரிவுத் துயரில் ஒரு காது கேட்காத, வாய் பேசாத குழந்தையும் வந்து விட்டால் அதற்காக தன் உயிரையும் கொடுப்பான் தானே... ஆனந்த் என்கிற ரகுவரன், ரஞ்சித் என்கிற பாபு ஆண்டனி இருவரும் சேர்ந்து ரகுவரனின் மனைவியின் காமுகனான அலுவலக ஊழியரை நடுரோட்டில் வைத்து கொல்கிறார்கள். இதை குழந்தை பென்னியும், அம்மா ராஜலட்சுமியும் பார்த்துவிட ராஜலட்சுமியையும் கொன்று அவர்கள் வீட்டிலேயே புதைக்கிறார்கள்.
குழந்தை பென்னி தப்பியோடி ஜீவா என்கிற சத்யராஜ் கையில் கிடைக்கிறது. இதன் பின் நிகழும் திடுக்கிடும் திருப்பங்கள் இளையராஜாவின் நேர்த்தியான பின்னணி இசையால் நம்மை சீட் நுனியில் அசையாமல் உட்கார வைக்கிறது. இதேப் படத்தை ஃபாஸில் 'பூவினும் புதிய பூந்தென்னல்' என மம்முட்டி, நதியா, சுஜிதா நடிக்க வெளிவந்தது.
வில்லனாக சுரேஷ்கோபி, பாபு ஆண்டனி நடிக்க படம் பெரும் தோல்வியடைந்தது. க்ளைமேக்ஸில் மம்முட்டி இறப்பதாக காட்டிய சென்டிமெண்ட்டை மம்முட்டி ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதோடு மம்முட்டி நடித்த ஆறு படங்கள் அந்த ஒரே மாதத்தில் ரிலீசானதும் போட்டியை வளர்த்தன. நன்னி வீண்டும் வரிக(காவலுக்கு கெட்டிக்காரன்), ஆவநாழி(கடமை கண்ணியம் கட்டுப்பாடு), நியாய விதி, மூணு மாசங்களுக்கு முன்பு (பாசப்பறவைகள்), ஐஸ் க்ரீம், ஆயிரம் கண்ணுகள் (நூறாவது நாள்) என பெரும் போட்டியில் ஆவநாழி பெரும் வெற்றி பெற்றது. கேரளக்கரை அரசியலை உலுக்கியெடுத்த படமாக அது அமைந்தது.
தோல்வியடைந்த பூவினும் புதிய பூந்தென்னலே படத்தை வெற்றி பெற ஃபாஸில் முதலில் நம்பியது ராஜாவை. இளையராஜாவின் அற்புத பாடல்கள். மனோவை மனோ எனப் பெயரிடும் முன்பே 'அண்ணே அண்ணே' பாடலை பாட வைத்து வைத்திருந்தார் ராஜா. அந்தப் பாடலை இதற்கு உபயோகித்துக் கொண்டார் ஃபாஸில். யேசுதாஸின் சின்ன சின்ன ரோசாப்பூவே அழகான தந்தையின் பிரிவு வேதனை.
ஃபாஸில் தமிழுக்காக கதையை ரிச்சாக காட்சிப்படுத்தி இருந்தார் என்றே சொல்ல வேண்டும். சத்யராஜ் ஷாட்டுக்கு ஒரு சட்டை என விதவிதமாக அணிந்து, நெற்றியை மறைக்கும் விக் அணிந்து படு ஸ்டைலாக மாற்றி இருந்தார். நதியாவுக்கு பதிலாக நடித்த கார்த்திகா அன்று மலர்ந்த பூ போல படம் முழுவதும் ஃப்ரெஷ்ஷாக இருந்தார். அடுத்து நடந்த பெரிய மாற்றம் ரகுவரன். ஆனந்த் என்கிற பணக்கார கணவனாக ரகுவரன் அட்டகாசமாக பொருந்தி இருந்தார்.
ரகுவரன் மலையாளப் படத்தைப் பார்த்ததும் அந்த சுரேஷ்கோபி கேரக்டரை பெரிதாக செய்ய நினைத்து அவரே சில மாற்றங்களை மேற்கொண்டார். கோட், சூட் போட்டு படு ரிச்சாக வந்த ரகுவரன் கொலைகாரனாக மாற அவர் மனைவிக்கும்-ஜி.எம் வேணுகோபால் என்பவருக்குமான தொடர்பு தான். வேணுகோபால் ரகுவரனை விட அழகே இல்லாதவர். அதனால் ரகுவரனுக்கு அவர் மனைவி அவரை வெறுக்க ஒரு காரணமாக ரகுவரன் ஒரு ஊனமுற்ற கேரக்டராக மாற்றினார்.
கையில் ஸ்க்ரட்ச் வைத்து மெதுவாக நடக்கும் ரகுவரனின் அந்த மானரிஸம் ஃபாஸிலை கவர்ந்தது. மலையாளத்தில் சுரேஷ்கோபி மாற்றுத்திறனாளி கிடையாது. ரகுவரன் தன் கேரக்டருக்காக செய்த அந்த மாற்றம் கதைக்கும் அவர் பாத்திரத்துக்கும் நியாயம் செய்தது ஆச்சர்யம். இதை ஃபாஸில் மேலும் மெருகேற்ற குழந்தை பென்னி ஒரு ஸ்க்ரட்ச் வைத்து சாலையில் நடக்கும் ஒரு ஆளைப்பார்த்து நடுங்குவதாக ஒரு காட்சியை சேர்த்து இருந்தார்.
ரகுவரனின் வசன உச்சரிப்பும் கண்ணாடி வழியாக தலையை உயர்த்தி அவர் பார்க்கும் பார்வையும் மிரட்டலான இப்படி ஒரு வில்லன் நம்பியார், சிலோன் மனோகர், மேஜர் சுந்தர்ராஜன் போன்ற வில்லன்களைப்பார்த்த தமிழ் ரசிகர்களுக்கு புதிது. கையாளாக வரும் ரஞ்சித் என்கிற பாபு ஆண்டனி... அந்தக் காலத்திலேயே தன் தாடி ஸ்டைலால் மிகவும் கவர்ந்திழுக்கப்பட்ட நடிகர். அவரின் கராத்தேப்பயிற்சி உடலமைப்பும் அவர் தலையில் அணிந்து வரும் தொப்பியும் புது ஸ்டைல்...

அமைதியான பார்வையாலேயே நம்மை வெறுக்க வைக்கும் பாபு ஆண்டனி செம வில்லன்.. பாதிரியாராக பழைய நடிகர் அடூர் பாஸி. அவர் நடித்த ஒரே தமிழ்ப்படமாக இருக்கலாம். கார்த்திகா. நதியாவின் மலையாள ரோலை விட கூடுதல் அழகு கூட்டியது கார்த்திகாவின் ஸ்பெஷல். கார்த்திகாவின் 'சிறுகிளிகள் தனிமையிலே புதுக்கிளி ஒன்று வரவு' பாடல் ராஜாவின் தனி அருவி. பாரில் பாடும் 'ஆட்டமெங்கே' பாடல் செம டிஸ்கோ. ராஜாவின் அந்தப் பாடலும், அதன் நடனமும், நடனமங்கையர் முகம் வரை இன்றும் மனதில் பதிந்துவிட்ட ஒன்று. படத்தின் இன்னொரு ஜீவன் குழந்தை பென்னியாக வந்த பேபி சுஜிதா.
முந்தானை முடிச்சு படத்தில் பாக்யராஜின் காய்கறியில் சிறுநீர் கழித்த அந்தக் குழந்தை இப்படி ஒரு முகபாவனைகளோடு நிஜ வாய் பேசாத செவித்திறனுள்ள குழந்தை போலவே நடித்தது ஆச்சர்ய சம்பவம்... குழந்தை ஒன்றை பிரிந்து விட்டதாலேயே, அதுவும் ஊரே பயப்படும் ஒரு சம்பவமாக நிகழ்ந்து விட்ட பிரிவைத் தாங்காத நாயகன் ஒரு குழந்தை கையில் கிடைத்ததும் அதற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணிக்கிறான் என்பதன் நியாயம் அழகாக பொருந்தச்செய்தார் ஃபாஸில்.
குழந்தை உறவினர் இருந்தும் அனாதை. அப்பா இறந்து விட அம்மாவும் இறந்து விட அம்மாவின் தங்கை வீட்டுக்கு வரும் குழந்தை அம்மா போட்டோவை தள்ளி விடுவது நமக்கு சத்யராஜுக்கு வைத்த சஸ்பென்ஸ். போலீஸ் நிழல்கள் ரவி நல்ல மிடுக்கு. ரவி, ரகுவரன், சத்யராஜ் என கோவையன்ஸ் படம் இது. இவர்களோடு ஃபாஸில், ஜெயனன் வின்சென்ட், பாபு ஆண்டனி என 'உயரமானவர்கள்' படமும் இதுவே.
தமிழிலும், மலையாளத்திலும் முதல் காட்சியில் கொல்லப்படும் வேணு ஒரே நடிகர். இரு படத்திலும் மெடிக்கல் ஷாப்பில் மருந்து வாங்கி வருவதாக காண்பித்திருப்பார் ஃபாஸில். வாழ்வு முடியப் போகிறது வாழ மருந்து போன்ற முரண் காட்சிகள் பாஸில் திரைக்கதை சுவாரசியம். சத்யராஜ், பாபு ஆண்டனியின் படத்தை வரையும் போது ராஜாவின் ரீரெக்கார்டிங் நமக்கு ஏதோ மாயாஜால பின்னணியில் திகிலூட்டும் காட்சி அமைப்பு. இதெல்லாம் ரீரெக்கார்டிங்குக்கு பின் காட்சி எடுத்திருப்பார்கள் போல.
எல்லா விதத்திலும் சரி விகிதமாக கலந்து தரப்பட்ட இந்த த்ரில்லர் மூலம் மலையாளத்தில் தோற்றாலும் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தியிலும் வெற்றி பெற்றது சுவாரசியம்.
ஃபாஸிலின் ஸ்பெஷல்கள்:
கார் சக்கரத்தின் ரிம்மை வைத்து உதைத்ததும் கார் ஸ்டார்ட் ஆவது.
மணியை அடித்து குழந்தை மயங்கிய சத்யராஜை எழுப்பும் அந்த இதயத்துடிப்பு காட்சி.
இரண்டு முறையே பார்த்த சத்யராஜ், பாபு ஆண்டனியை அச்சு அசலாக வரைவது.
கார்த்திகா குழந்தையின் உறவு என்கிற சஸ்பென்ஸ்.
ரகுவரனிடம் செய்த கேரக்டர் மாற்றம், ஸ்டைல், பேச்சு.
ஒரு த்ரில்லர் எப்படி இருக்க வேண்டுமென இயக்குனர்களுக்கும், இசையமைப்பாளர்களுக்கும் ரெஃபரன்ஸ் இந்தப் படத்தை வைக்கலாம்... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் தோட்டத்தில் சடலங்களை தோண்டும் போது ஒரு சேலை வரும் அப்போது இளையராஜாவின் மியூசிக் பலருக்கு திகிலூட்டியதாகவும் அதனால் பலருக்கு காய்ச்சல் வந்ததாகவும் சொல்லப்பட்டது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications