எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா? மறைமுகமாக நடக்கும் இந்த வேலை தான்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களின் பாராட்டை பெற்றுக் கொண்டிருக்கிறது ஆனால் அதற்கு முக்கியமான காரணம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா..?
பிற சீரியல்களை விட இந்த சீரியலை பற்றி அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர் அதே நேரத்தில் இந்த சீரியலுக்கான பிரமோவுக்காகவும் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.
அதற்கு காரணம் இந்த சீரியல் பிற சீரியல்களை விட கதை மட்டுமல்லாமல் பல நுணுக்கமான வேலைகளிலும் வித்தியாசத்தை காட்டி இருக்கிறது. அதுதான் இந்த சீரியலில் வெற்றிக்கு காரணம் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இதில் கதை வில்லனாக இருக்கும் குணசேகரனின் பங்களிப்பை சொல்லியே ஆக வேண்டும். இவருடைய அல்டிமேட் காமெடி கலந்த வில்லத்தனம் அதிகமான ரசிகர்களை கவர்கிறது. காரணம் இதில் செயற்கை தனமான வசனங்களோ, அல்லது முக எக்ஸ்பிரஷனும் ஓவர் பில்டப்பும் இல்லாமல் எதார்த்தமாக நம்முடைய அப்பா போலவோ அல்லது நம்முடைய ஊர்காரர்கள் போலவோ இவர் நடந்து கொள்ளும் விதம் பலரையும் கவர்ந்திருக்கிறது.
பிற சீரியல்களில் வில்லனுக்கும் இவருக்கும் அதிகமாக வித்தியாசம் இருக்கிறது. காரணம் இவர் எதார்த்தமாக சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளை பற்றியும் நக்கலாக பேசி விடுகிறார். அது மட்டுமல்லாமல் இப்போது கூட தர்ஷினி தன்னுடைய ஆண் நண்பரை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்து படித்துக் கொண்டிருப்பார். ஆனால் அது தப்பு என்று குணசேகரன் பேசியிருக்கிறார். இது சீரியலில் அவர் வில்லனாக செய்தாலும் இதையும் அதிகமானோர் பாராட்டத்தான் செய்கிறார்கள்.அதனாலேயே இவரை பலருக்கும் பிடிக்கிறது. அதனால் தான் தற்போது ட்ரெண்டிங் ஸ்டார் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து ஜான்சி ராணி மற்றும் கரிகாலனை சொல்லலாம். கரிகாலனின் நடிப்பு அந்த சூழ்நிலையை அப்படியே கலகலப்பாக மாற்றி விடுகிறது. நேற்றைய எபிசோடில் கூட குணசேகரன் ஆபத்தான நிலையில் ஐசியுவில் இருக்கும் போது கூட இவர் எல்லாரும் இங்கே இருந்து கொண்டு இருந்தா சரிப்பட்டு வராது. சுடுகாடு எங்க இருக்குன்னு சொல்லு மாமா நான் போய் ஆக வேண்டிய காரியத்தை பார்க்கேன் என்று பேசிக் கொண்டிருக்கிறார். அப்போ அவர் மீது கோபம் வந்தாலும், சில நிமிடங்களில் அவருடைய முக எக்ஸ்பிரஷனை பார்த்ததும் மாறிவிடும்.

வெகுளியாக லொடலொட வென பேசும் கரிகாலன் ரசிகர்களின் மனதை கவர்ந்ததால் தான் ஆதிரை அருணை காதலிப்பதை கூட அதிகமான ரசிகர்கள் விரும்பவில்லை. தொடர்ச்சியாக ஆதிரையை திட்டிக் கொண்டிருந்ததும் இந்த கரிகாலனால் தான். அதே போல வில்லனுக்கே வில்லனாக ஜான்சி ராணியும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் மற்ற சீரியல்களைப் போல அதிகமான மேக்கப் கதாநாயகிகளும் போடுவதில்லை. எளிமையாக வீட்டில் பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படியே காட்டப்படுகிறார்கள். ரேணுகா மட்டும் எப்போதும் தன்னுடைய உடைக்கு மேட்சாக வளையல் அணிந்து கொண்டு இருக்கிறார். ஆனாலும் அதுவும் கண்ணை உறுத்துற மாதிரி இல்லாமல் எளிமையாக இருப்பதாலேயே இந்த சீரியல் மற்ற சீரியல்களை விட வித்தியாசம் காட்டுகிறது.
அதுபோல இந்த சீரியலில் இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். அது "ஒளிப்பதிவு". இந்த சீரியலில் ஒளிப்பதிவாளராக சந்தானம் இருக்கிறார். அவர் இதற்கு முன்பு எந்த சீரியலையும் ஒளிப்பதிவு செய்து இருக்கிறாரா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த சீரியலில் தனித்துவத்தை காட்டி இருக்கிறார்.
பொதுவாக திரைப்படங்களில் ஹரியின் திரைப்படங்கள் வித்தியாசமாக இருக்கும் பூஜையறையில் ஒருவர் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் அவரை காண்பிப்பதற்கு முன்பு தெருவில் இருந்தே வேகமாக கேமரா வந்து கடைசியாக பூஜை அறையில் நிற்கும். அது போன்று தான் எதிர்நீச்சல் சீரியலிலும் கேமரா வித்தியாசமாக கையாளப்படுகிறது.
இது குறித்து இந்த சீரியல் நடிகர்கள் பலமுறை பேட்டிகளில் கூறியிருக்கின்றனர். நாங்கள் மேக்கப் போடாமல் இருந்தாலும் கூட எங்களுடைய ஒளிப்பதிவாளர் அதை அழகாக வெளிப்படுத்தி விடுகிறார் என்று அந்த திறமை கூட இந்த சீரியலின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது என்று சொல்லலாம்.

அதுபோல பெண்கள் என்றால் வீட்டில் எப்போதும் அழுது கொண்டுதான் இருப்பார்கள் என்பதை மட்டும் காட்டாமல். இந்த சீரியலில் எதார்த்தமாக பெண்கள் தலையை சொரிவது போன்றும், கிண்டல் செய்யும் போது வாயை லேசாக மூடிக்கொண்டு பேசுவது போன்றும் காமெடியாகவும் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நந்தினி மற்றும் ரேணுகா எதார்த்தமான காமெடி அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனால் தான் அவர்களுக்கும் இந்த சீரியலால் பெரிய அளவில் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அது மட்டுமல்லாமல் இந்த சீரியல் மற்ற சீரியல்களைப் போல அடிக்கடி ஒவ்வொரு கேரக்டருக்கும் போக்கஸ் வைத்து கதை இழுத்துக் கொண்டிருப்பது கிடையாது. ஒரு நாளில் எவ்வளவு கதை சொல்ல முடியுமோ அந்த அளவிற்கு கதை சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் ஒவ்வொருவருக்காக க்ளோசப் வைத்து சில நிமிடங்களை வீண் செய்வது இல்லாமல் இருப்பதும் இந்த சீரியலின் சிறப்பாக இருக்கிறது.
அதே நேரத்தில் இந்த சீரியலில் சில சில மிஸ்டேக் இருக்கத்தான் செய்கிறது. அதை குறித்தும் ஏற்கனவே விவாதித்து இருக்கிறோம். ஆனாலும் பிளஸ் பாயின்ட் ஏகப்பட்ட இருப்பதால்தான் இந்த சீரியல் டிஆர்பி யில் பட்டய கிளப்பி கொண்டிருக்கிறது. இப்போது கூட இந்த சீரியல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. அது பலபேர் தூங்கும் நேரம், அல்லது பல தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளை தூங்க வைக்கும் நேரம் ஆக இருக்கிறது.
அதனால் எங்களால் இந்த சீரியலை பார்க்க முடியவில்லை என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த சீரியலுக்கு 8:30 அல்லது 9 மணி டைமிங் கிடைத்தால் இன்னும் வேற லெவலில் டிஆர்பி யில் புரட்சி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து அதிகமான ரசிகர்களும் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். பொறுத்து இருந்து பார்ப்போம் இனி என்ன நடக்கப் போகிறது என்பதை.
அதுபோல தெலுங்கு திரைப்பட கதை போன்றும், ஹரியின் ஸ்கிரீன் பிளே போன்றும் காட்சிக்கு காட்சி திருப்பங்களும், எதிர்பார்ப்புகளோடு கதை வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. அத்தோடு திரைக்கதை பட்டையை கிளப்புகிறது. திரைக்கதையில் இருக்கும் வேகத்தின் காரணமாகத்தான் அடுத்து என்ன நடக்கும் என்று ரசிகர்களால் யூகிக்க முடியாத வகையில் பல டுஸ்ட்களும் இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications