சைக்கிளில் ஓட்டுப்போட போனேன்...என் மகன் கேட்ட கேள்வி என்ன தெரியுமா?- விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது எதர்த்தமாகவே சைக்கிளில் வாக்களிக்கச் சென்றேன். அதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது என்று விஜய் கூறியுள்ளார்.
சென்னை: என் மகன் நினைவு வந்தது. அவனுடைய சைக்கிளில் நான் சாதாரணமாக ஓட்டுப்போடப்போனேன் என்று நடிகர் விஜய் சொன்னார். ஓட்டு போட்டு விட்டு நான் வந்த பிறகு என் மகன் கேட்ட கேள்வி இருக்கே என்று சொல்லிவிட்டு சிரித்தார் விஜய்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகிறது. படத்தின் புரமோசனுக்காக நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கேற்று இயக்குநர் நெல்சன் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார் விஜய்.
நெல்சனின் கேள்விகளுக்கு பதிலளித்த விஜய், எனக்கு குறிப்பிட்ட மதம்தான் என்றில்லை. ஜார்ஜியா சென்றிருந்த நேரத்தில் நாம் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் சர்ச் இருந்தது. அதனால், அங்கு செல்லவேண்டும் என்று விரும்பினேன் என்றார்.

கடவுளும் அப்பாவும்
கடவுள் நம்பிக்கை பற்றிய கேள்விக்கு பதில் சொன்ன விஜய், நாம் ஒரு மரத்தைப் பார்க்கிறோம். அதில் எல்லோருக்கும் பூக்கள் மட்டும்தான் தெரியும். ஆனால், வேர் தெரியாது. அப்பாக்கள் ஒரு குடும்பத்தின் வேர். கடவுளுக்கும் அப்பாவுக்கும் உள்ள வேறுபாடு. கடவுள் கண்ணுக்கு தெரிய மாட்டார். அப்பா கண்ணுக்குத் தெரிவார் என்றார்.

சைக்கிளில் ஓட்டுப்போடப்போனது ஏன்
நான்கு கார் இருக்கும் போது கடந்த சட்டசபைத் தேர்தலின்போது சைக்கிளில் ஓட்டுப்போடப்போனது ஏன் என்று நெல்சன் கேட்க, அதற்கு விஜய் எதர்த்தமாகவே சைக்கிளில் வாக்களிக்கச் சென்றேன். வீட்டிற்கு பின்னால்தான் நான் ஓட்டுப்போடும் பள்ளி இருந்தது. மாடியில் இருந்து இறங்கி வந்த போது மகனின் சைக்கிள் இருந்தது. மகன் நினைவு வந்தது... உடனே சைக்கிளை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டேன்...அதில் வேறு எந்த நோக்கமும் கிடையாது' என்று தெரிவித்தார்.

மகன் கேட்ட கேள்வி
ஓட்டு போட்டு விட்டு வந்த பின்னர் அந்த செய்தியை பார்த்த என் மகன் உடனே போன் செய்து... அதெல்லாம் சரி சைக்கிளுக்கு ஒண்ணும் ஆகலையே என்று கேட்டதாக கூறி சிரித்தார். பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் சினிமா செய்திகள் மட்டுமல்ல அரசியல் செய்திகளையும் கவனித்துவருகிறேன் என்று சொன்னார் விஜய்.

மகன் சஞ்சய்
சஞ்சய் நடிப்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. நான் அவனது முடிவில் தலையிடுவதில்லை என்று கூறிய விஜய்.. ஒருமுறை, அல்போன்ஸ் புத்திரன் என்னைப் பார்ப்பதற்கு நேரம் கேட்டிருந்தார். எனக்குதான் கதை சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால், அவர் சஞ்சய்க்கு கதை கூறினார். அந்தக் கதையில் சஞ்சய் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், சஞ்சய் நடிக்க மறுத்துவிட்டார் என்றார்.
-
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில்












Click it and Unblock the Notifications