வில்லங்க சான்றிதழ் டூ பாகப்பிரிவினை.. சிவாஜி வீடு மீட்க அவர் வர்றாரா? தமிழக அரசு தலையிடுமா: பிரபலம்
சென்னை: சிவாஜி வீடு ஜப்தி விவகாரத்தில் தமிழக அரசு தலையிட வாய்ப்பு இல்லை. குடும்பம் சார்ந்து கடன் வாங்கியிருந்தால், அரசு தலையிடலாம். இது தனிப்பட்ட நபருக்கு பணம் வாங்கப்பட்டது.. ஆனாலும், அன்னை இல்லம் என்பதால், அரசு சார்பில் இல்லாவிட்டால் தனிப்பட்ட முறையில் முதல்வர் தலையிடலாம்" என்று பத்திரிகையாளர் சுபைர் தெரிவித்துள்ளார்.
சிவாஜி வீடு ஜப்தி தொடர்பாக, நீதிமன்ற உத்தரவு மனுதாரரான தனபாக்கியம் என்டர்பிரைசஸ் மூலம் தி.நகர் சார் பதிவாளருக்கு கொடுக்கப்பட்டது. இதையடுத்து அன்னை இல்லம் பங்களாவின் வில்லங்க சான்றிதழில், நீதிமன்ற உத்தரவுப்படி 4-ல் ஒரு பங்கு பறிமுதல் செய்யப்படுவதாக பதிவு செய்திருக்கிறார் சார் பதிவாளர்.

அன்னை இல்லத்தின் தற்போதைய மதிப்பு சுமார் 88 கோடி ரூபாய் என்றால், ராம்குமாரின் பங்கு 22 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். எனினும், துஷ்யந்த் கொடுக்க வேண்டிய மொத்தக் கடன் 10 கோடிக்கு உள்ளேதான் இருக்கிறது. எனவே கடனை வசூலிக்கும் செயல்பாடுகளில் வேகமாக இருக்கிறது தனபாக்கியம் என்டர்பிரைசஸ்.
பாகப்பிரிவினை
நேற்றைய தினம் ராம்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், பாகப்பிரிவினையின்படி, அந்த வீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்றும் என் தம்பி பிரபுவிற்குத் தான் அந்த வீடு சொந்தம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மனு தாக்கல் செய்யவும் இருப்பதாகச் சொல்லப்பட்டது.
இதை கேட்ட நீதிமன்றம், ஜப்தி உத்தரவை நிறுத்தி வைத்து இதுதொடர்பாக 2 தரப்பினரும் பேசி முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தி ராம்குமார் மனுத் தாக்கல் செய்ய அனுமதி அளித்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 3ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.
பைனான்ஸ் பிரச்சனை
இந்நிலையில், Jeeva Cinema சேனலுக்கு பத்திரிகையாளர் சுபைர் பேட்டி தந்துள்ளார். அதில், "எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும், ஆரம்பத்தில் கையிலுள்ள பணத்தை சிறிது போட்டு படத்தை எடுத்துவிட்டு, அதற்கு பிறகுதான் மிச்சம் மீதிக்கு பைனான்ஸ் வாங்குவார்கள். ஆனால், இந்த படத்துக்கு 2, 3 பேரிடம் பைனான்ஸ் வாங்கியிருக்கிறார்கள்.
சிவாஜி குடும்பத்தினர் இவ்வளவு காலம் சினிமாவில் இருக்கிறார்கள். சிவாஜி பிலிம்ஸ் என்ற நிறுவனமும் சொந்தமாக வைத்து, அதை ராம்குமார்தான் கவனித்து வருகிறார்..
அப்படியிருக்கும்போது, ஒரு நடிகருக்கு எவ்வளவு பட்ஜெட்டில் படம் எடுப்பது என்பது தெரியாதா? அல்லது பாரம்பரியமாக சினிமா கம்பெனியை நடத்தியவர்களுக்கு இன்றைய சினிமா சூழலை புரிந்து கொள்ள முடியவில்லையா? அல்லது ஒரு குறிப்பிட்ட நடிகருக்கு எவ்வளவு முதலீடு செய்தால், அந்த படத்தை விற்க முடியும் என்ற கணக்கு இருக்கிறது. இது எப்படி தெரியாமல் போய்விட்டது என்பதுதான் அனைவரும் கேட்க கூடிய கேள்விகள்.
பண்ணையார் மனநிலை
கடன் தந்தவர்கள் எல்லாரும், படத்தை தங்களுக்கே தந்துவிடும்படி ஆரம்பத்திலிருந்தே கேட்டும், ராம்குமார் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லையாம்.. ஒரு பண்ணையார் மனநிலையிலேயே ராம்குமார் நடந்த கொள்வதாக சொல்கிறார்கள். பஞ்சாயத்துக்கும் ஒத்துழைப்பும் தரவில்லை என்பதால், கோர்ட்டுக்கு பாதிக்கப்பட்டவர்கள் போனார்கள்..
ஒரு பெரிய குடும்பத்தை சேர்ந்தவர்களின் விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்துள்ளதால், அதை கவனமாக கையாள வேண்டும் என்று நீதிமன்றம் நினைக்கிறது. எனவே, மத்தியஸ்தர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடித்து கொள்ள சொல்கிறார்கள் நீதிபதிகள். பொதுவாக, மத்தியஸ்தர்கள் என்றால், மூத்த வழக்கறிஞர்களை நியமிப்பார்கள்.. ஆனால், சிவாஜி குடும்பம் விவகாரம் என்பதால், ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரனை நியமித்து, இது தொடர்பாக பேசி முடிக்க சொல்கிறது நீதிமன்றம். ஒரு சம்மனுக்குகூட ராம்குமார் தரப்பிலிருந்து வரவில்லையாம்.
யார் பொறுப்பு
எனவே, விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றுகூறி மீண்டும் ஹைகோர்ட்டுக்கு பைனான்சியர்கள் சென்றபோதுதான், வீட்டை ஜப்தி செய்யுங்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது அனைவருக்குமே அதிர்ச்சியை தந்துள்ளது. அன்னை இல்லம் கூட்டு குடும்பத்துக்கு சொந்தமானது. இந்த குடும்ப சொத்தை எப்படி இவர்களால் தனிப்பட்ட முறையில் அடமானம் வைக்க முடிந்தது? பாகப்பிரிவினை இருந்திருக்கும் என்கிறார்கள்.
இந்த படத்தை ரிலீஸ் செய்தாலும் அந்த கடனை அடைக்க முடியாது என்கிறார்கள்.. படத்தை வெளியிட்டாலும் நஷ்டம் என்பதால்தான், அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள்... பிரபு, ராம்குமார் ஒன்றாகவே ஒரே வீட்டில் இருந்தாலும், இவ்வளவு பெரிய தொகைக்கு யார் பொறுப்பு எடுப்பது? எப்படியும் பணத்தை கட்டியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இன்று ஏற்பட்டுள்ளது.
அரசு தலையிடுமா
தமிழக அரசு இதில் தலையிட வாய்ப்பு இல்லை. குடும்பம் சார்ந்து கடன் வாங்கியிருந்தால், அரசு தலையிடலாம். இது தனிப்பட்ட நபருக்கு பணம் வாங்கப்பட்டது.. ஆனாலும், அன்னை இல்லம் என்பதால், அரசு சார்பில் இல்லாவிட்டால் தனிப்பட்ட முறையில் முதல்வர் தலையிடலாம்.
இப்படித்தான் ஒருமுறை எம்ஆர் ராதா குடும்பத்திலும் பிரச்சனை வந்தது. ராதாரவி படங்களை எடுக்கும்போது வங்கியில் கடன் வாங்கி நஷ்டமாகி, கடைசியில் தேனாம்பேட்டை வீடு ஜப்திக்கு வந்தது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீட்டு தந்து, இனிமேல் இப்படி செய்யாதீர் என்றார்.
அதேபோல, நாகர்கோவிலில் என்எஸ் கிருஷ்ணன் வீட்டை, எம்ஜிஆர் அன்று காப்பாற்றி தந்தார். எனவே, முதல்வர் அல்லது சினிமா துறையினர் முன்வந்து, இந்த விவகாரத்தை தீர்க்க உதவலாம். இது பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது" என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications