கொட்டும் பனியில் தாரைதப்பட்டை...மெர்சல் காட்டிய ரசிகர்கள்..அஸ்வினிடம் இதை எதிர்பார்க்கலயே??
சென்னை: காலை வேலையில் என்ன சொல்ல போகிறாய் திரைப்பட வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் செய்த செயல் பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது.
Recommended Video
அஸ்வினுக்காக ரசிகர்கள் செய்த செயலைப் பார்த்து அஸ்வின் ஒரு நிமிடம் திகைத்துப் போய் உள்ளார்.

இது எதிர்பார்க்காத செயல்
மிகுந்த எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருந்த அஸ்வின் தன்னுடைய கனவு நினைவானது நினைத்து திகைத்துப்போய் உள்ளார். அதற்கு காரணமான ரசிகர்களின் செயல் சமூகவலைத்தளத்தில் பரவிவருகிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் என்ன சொல்ல போகிறாய் எனும் திரைப்படத்தின் வெளியீட்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தியேட்டர்களில் ரசிகர்கள செய்த செயல் வேற லெவல் தான் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது நாள் வரைக்கும் அஸ்வினை கலாய்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் கூட தற்போது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

காத்திருப்புக்கு கிடைத்த வாய்ப்பு
பல சின்னத்திரை சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோக்களும் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிக்காட்டி கொண்டிருந்த அஸ்வின், எப்போது தனக்கு ஒரு வெள்ளித்திரை வாய்ப்பு வரும் என்று ஆர்வத்தோடு காத்திருந்த நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த ஆதரவு மற்றும் வெற்றி காரணமாக இவருக்கு என்ன சொல்லப் போகிறாய் என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை அதிக அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பெரும் முயற்சி எடுத்து அஸ்வின் தன்னுடைய வாயால் அதைக் கெடுத்துக்கொண்டார். அதிமான சந்தோசத்தின் காரணமாக இவர் பேசிய வார்த்தைகள் இவருக்கு எதிராக அமைந்து விட்டது.

தவறை உணர்ந்த அஸ்வின்
தவறு செய்வது மனித இயல்புதான் அதை திருத்திக் கொள்வது தான் பெரிய குணம் என்பதை இவர் புரிந்து கொண்டு தன்னுடைய தவறை இனி வாழ்க்கையில் நடந்து விடாதபடி தற்போது இருந்து வருகிறார். சமூக வலைத்தளத்தில் பவ்யமான பல போஸ்ட்களை வெளியிட்டு அன்று நடந்ததற்கான விளக்கங்களையும் தன்னுடைய தவறுகளையும் கூறிக்கொண்டிருந்தார். இதை ஏற்றுக்கொண்ட பல ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுத்து வந்தனர். ஒருசில நெட்டிசன்கள் வழக்கம்போல இவருடைய செய்கையை கலாய்த்துக் கொண்டிருந்தனர். இருந்தாலும் இந்த நேரத்தில் தற்போது அவருடைய பல நாள் கனவு திரைப்படம் வெளியாகி உள்ளது.

எதிர்பார்க்காத வரவேற்பு
திரைப்படம் வெளியாகி இருக்கும் இந்த நேரத்தில் ரசிகர்களின் ஆதரவு எப்படி இருக்குமோ என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், தற்போது கொட்டும் பனியிலும் தாரை தப்பட்டைகள் முழங்க அஸ்வினுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்து ரசிகர்களும், திரைப்பட குழுவினரும் அசத்தி இருக்கின்றனர். இதைப் பார்த்து திகைத்து போன அஸ்வின் தன்னுடைய பவ்யமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் மத்தியில் மீண்டும் இனி வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பு கூடி இருக்கின்றது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications