எதிர்நீச்சலில் வெண்பா விஷயத்தில் சொதப்பிய சீரியல் டீம்.. “இந்த” விஷயம் ஞாபகம் இருக்கா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் விறுவிறுப்பான கதைக்களம் அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கிறது.

அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் நடந்த நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

ethir neechal Serial team Sothapal in case of Venba identification in kathir

அதாவது சில மாதங்களுக்கு முன்பு கதிர் பேசியதற்கும் நேற்றைய எபிசோடில் கதிர் பேசியதற்கும் அதிகமான வித்தியாசங்கள் இருக்கிறது. அது பற்றி பார்ப்போம்.

அந்த வகையில் நேற்றைக்கு எபிசோட்டில் ஆரம்பத்தில் முதியோர் இல்லத்திற்கு கொடுப்பதற்காக நந்தினி சமைத்து வைத்திருந்த சாப்பாடு பாத்திரங்களை பார்த்த கதிர் என்ன இதெல்லாம் என்று கேட்டு திறந்து பார்க்க, அப்போது நந்தினி பயந்து போய் இருக்க விசாலாட்சி அது என்னென்ன நான் சொல்றேன் என்று உண்மையை சொல்கிறார்.

ethir neechal Serial team Sothapal in case of Venba identification in kathir

அப்போது கோபத்தில் கதிர், நந்தினி கன்னத்தில் அடித்து களவாணி வேலை செய்றியா? மூணு பேரையும் தொலைச்சுப்புடுவேன் என்று கத்துகிறார். அதுபோல முதியோர் இல்லத்தில் இருந்து சூப்பர்வைசர் பொண்ணு போன் பண்ண அவரையும் கண்டமேனிக்கு திட்டி போனை தூக்கி எறிந்து போனை உடைத்து விடுகிறார்.

அதைத்தொடர்ந்து நந்தினி நான் அவர்களுக்கு இன்னைக்கு ஒரு நாளைக்கு சாப்பாடு கொடுத்து விடுகிறேன் என்று கெஞ்சி பார்த்தும் அதற்கு கதிர் சம்மதிக்கவில்லை. அந்த நேரத்தில் அந்த சூப்பர்வைசர் வீட்டிற்கு வந்து பிரச்சனை செய்ய, அவரிடமும் நிலைமையை சொன்னாலும் அவரும் புரிந்து கொள்ளாமல் எங்களுக்கு நீங்க கை நீட்டி பணம் வாங்கி இருக்கீங்க பணம் வேண்டும் என்று அந்த பெண்ணும் பிரச்சனை செய்ய வேறு வழி இல்லாமல் நந்தினி கழுத்தில் இருந்த தாலி செயினை கழட்டி கொடுக்கும்போது கோபமான விசாலாட்சி, நந்தினியை கன்னத்தில் அறைந்திருந்தார்.

ethir neechal Serial team Sothapal in case of Venba identification in kathir

அதோடு ஞானமும் நேற்றைய எபிசோடில் ரேணுகாவை மட்டுமல்லாமல் வீட்டில் இருக்கும் மற்ற பெண்களையும் மரியாதை குறைவாக பேசி இனி மூணு பேரும் எதிர்த்து பேசக்கூடாது. பழையபடி வீட்டில் எப்படி இருந்திங்களோ அப்படித்தான் இருக்கணும் என்று சொல்லி மிரட்டிக் கொண்டிருந்தார். அதற்கு ஈஸ்வரி என்ன தம்பி நீங்களும் மாறிட்டீங்களா? என்று கேட்க, இனிமேல் நானும் ஆரம்பிச்சுட்டேன். நீங்க எல்லாம் மாறிட்டீங்க..! நீங்க எல்லாரும் சேர்ந்து என் அண்ணனை வீட்டைவிட்டு அனுப்பிட்டீங்க. இதனால இனிமே இந்த வீட்டில் ஆம்பளைங்க சொல்றதுதான் கேட்கணும் என்று அவரும் பிரச்சனை செய்திருந்தார்.

அதைத்தொடர்ந்து மாடிக்கு கதிர், ஞானம், கரிகாலன் மூவரும் வரும்போது அங்கு ஜீவானந்தன் மகள் விளையாடிக் கொண்டிருப்பதை பார்த்த கதிர் தாராவிடம் இது யாரு உன்னுடைய சினேகிதியா? இங்க விளையாட கூடாது வெளியே போங்க என்று திட்டி அனுப்பினார். அப்போது தர்ஷினி இது எங்க அம்மாவோட பிரண்டோட பொண்ணு என்று சொல்ல யாரு அந்த பிரண்டு இது யாரோட குழந்தை என்று கேள்வி கேட்க, அதற்கு அப்போது கரிகாலனும் சேர்ந்து கதிரை ஏற்றி விட்டார். ஈஸ்வரி அக்காவுக்கு சின்ன வயசுல கவுனை போட்ட மாதிரியே இருக்கா? என்று கரிகாலன் கேட்க, அதைக் கேட்டு ஞானம் திட்டி இருந்தார். ஆனாலும் கதிர் இந்த குழந்தை யாரு என்று மீண்டும் மீண்டும் கேட்டு ஈஸ்வரியை அவமானப்படுத்தி இருந்தார்.

ethir neechal Serial team Sothapal in case of Venba identification in kathir

இதுதான் நேற்றைய எபிசோடில் நடந்த முரண்பாடான காட்சிகள். ஏற்கனவே ஜீவானந்தத்தை கொலை செய்வதற்காக அவருடைய வீட்டிற்கு கதிர் கிள்ளிவளவனோடு செல்லும் போது அங்கு ஜீவானந்தத்தின் குழந்தையை கதிர் பார்த்திருந்தார். அது குறித்து வீட்டில் வந்து கூட குணசேகரனிடம் ஜீவானந்தத்திற்கு கல்யாணம் முடிந்து ஒரு குழந்தையும் இருக்கு. ஒரு பெண் குழந்தை இருக்குது என்று குறிப்பிட்டு கூறியிருந்தார். அதுபோல ஜீவானந்தம் மனைவியை கிள்ளி வளவன் சுட்ட போதும் வெண்பா அங்கு இருந்தபோது கதிர் பார்த்திருந்தார். ஆனால் நேற்றைய எபிசோடு இது யார் என்று ஈஸ்வரியிடம் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்.

இதை சீரியல் தரப்பினர்கள் மறந்து விட்டார்களா? அல்லது கதிருக்கு உண்மையில் இதை ஜீவானந்தம் குழந்தைதான் என்று தெரிந்துதான் நேற்றைய எபிசோடில் நடித்துக் கொண்டிருக்கிறாரா? என்பதும் கேள்வியாக இருக்கிறது. அதே நேரத்தில் இனி இந்த குழந்தையை வைத்து தான் ஜீவானந்தத்தை கோவில் திருவிழாவிற்கு வர வைத்து கதிரும் ஞானமும் கொலை செய்ய முயற்சி செய்வார்களா என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் கௌதம்க்கு ஏற்கனவே ஜீவானந்தம் மனைவியை கொலை செய்தது குணசேகரன் கதிரும் சேர்ந்து தான் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில், இப்போது வெண்பா குணசேகரன் வீட்டில் இருப்பதை தெரிந்ததும் உண்மையை ஜீவானந்தம் இடம் சொல்வாரா? அப்படி உண்மை தெரியும்போது என்ன மாதிரி ரியாக்ஷன் நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+