எதிர்நீச்சல் குணசேகரன் இவர்தான் ரகசியத்தை உடைத்த இயக்குனர்.. அதனால்தான் கதையில் இப்படி மாற்றமாம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக காலமானார்.
தொடர்ந்து அவருடைய கேரக்டரில் இனி யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்து வருகிறது.

இந்த நிலையில் முதல் முறையாக குணசேகரன் கேரக்டர் பற்றி இந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் மனம் திறந்து பேசி இருக்கிறார். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த மாரிமுத்து குணசேகரன் கேரக்டரில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து காட்டி இருந்தார். நடிகர் மாரிமுத்து எத்தனையோ திரைப்படங்களில் நடித்தும் இயக்கியும் இருந்தாலும் அதை எல்லாம் விட குணசேகரன் கேரக்டர் பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்து இருந்தது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் சில வாரங்களுக்கு முன்பு எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது மாரிமுத்துவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட அவர் மருத்துவமனைக்கு சென்றிருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனில்லாமல் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்திருந்தார். இது பெரும் அதிர்ச்சியாக அனைவருக்கும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர் நடித்து வந்த குணசேகரன் கேரக்டரில் யார் நடிப்பார் என்று எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலின் இயக்குனர் சில தினங்களுக்கு முன்பு நடிகர் மாரிமுத்துவிற்கு தனியார் சேனல் ஒன்றில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் பலரும் மாரிமுத்து பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த வகையில் எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் அந்த நிகழ்ச்சியில் பேசும் போது, குணசேகரன் என்றால் அது மாரிமுத்து சார் ஒருவராக மட்டும் தான் இருக்க முடியும்.
மாரிமுத்து சார் ஆரம்ப காலகட்டத்தில் இயக்குனர் வசந்த் சாரிடம் வேலை பார்க்கும் போது அவர் மாரிமுத்து பெயர் பழசா இருக்கு அதனால உங்க ஊர் பக்கத்தில் பிரபலமாக இருக்கும் சேதுபதி என்ற பெயரை வச்சு கொள்வோம் என்று மாற்றி இருந்தாராம்.ஆனால் அந்தப் பெயர் கொஞ்சம் கூட மாரிமுத்து சாருக்கு பிடிக்கவே இல்லையாம். முதல் திரைப்படத்தில் பெரிய அளவில் அந்த பெயர் பிரபலம் அடையாததால் பிறகும் தன்னுடைய மாரிமுத்து என்ற பெயரில் வைத்துக் கொண்டாராம்.

அப்பா அம்மா தனக்கு வைத்த பெயரை நாம எப்படி மாற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தார். யாராவது அவரை சேதுபதி என்று கூப்பிட்டால் கூட அவருக்கு கோபம் தான் வருமாம். ஆனால் எதிர்நீச்சல் மூலமாக அவரை மாரிமுத்து என்பதை விடவும் ஆதி குணசேகரன் என்று எல்லோருக்கும் பிரபலமடைந்துவிட்டார். அப்போது கூட சார் நான் இப்போ உங்க பெயரை மாற்றி விட்டேன் என்று சொன்னேன்.
அவர் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார். இது நான் மட்டுமல்ல மக்களும் அவருக்கு கொடுத்த அங்கீகாரம் அதனால் அவர் இந்த ஆதி குணசேகரன் பெயரை அவ்வளவு நேசித்தார். அதனால் அந்த பெயர் அவருக்கு மட்டும் தான் சரியாக இருக்கும் என்றுதான் கதையில் சிறு திருத்தங்கள் செய்து கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.
அதே நேரத்தில் ஆதி குணசேகரன் இல்லை என்று ஒரேடியாக முடிக்க முடியாது என்பதால்தான் அவர் வீட்டை விட்டு போய்விட்டார் என்பது போன்று கதையை கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம். பின்னர் வரும் காலம் கட்டத்தில் கதையில் அவருடைய பெயர் மீண்டும் வரலாம் என்றும் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications