எதிர்நீச்சல்: போலீஸிடம் குணசேகரனை மாட்டிவிட்ட கரிகாலன்.. கடைசியில் கதை இப்படி மாறிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் இரண்டாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

அதில் குணசேகரன் குடும்பத்தினரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்கும் போது கிள்ளிவளவன் பற்றி கரிகாலன் உளறி விடுகிறார்.

அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த குணசேகரன், சக்தி மற்றும் ஜனனியை வீட்டிற்குள் மீண்டும் அழைக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

Ethirneechal Serial 2023 December 2nd promo and episod full update

அந்த வகையில் நேற்றைய எபிசோடில் ஜனனி அப்பத்தா கேஸை ரி இன்வெஸ்டிகேஷன் செய்வதற்காக நீதிபதியிடம் கம்ப்ளைன்ட் கொடுத்திருந்த காரணத்தால் போலீசார் குணசேகரன் மற்றும் அவருடைய தம்பிமார்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போய் விசாரிக்க வேண்டும் என்று வந்திருந்தனர்.

அப்போது ஸ்டேஷனுக்கு போகும்போது குணசேகரன் இத்தனை பிரச்சனைக்கும் காரணம் சக்தியும் அவருடைய பொண்டாட்டியும் தான் நான் திரும்பி வரும்போது இந்த வீட்டுக்குள்ள இருக்க கூடாது என்று கறாராக சொல்லிவிட்டு போயிருந்தார். அதை தொடர்ந்து விசாலாட்சியும் என்னுடைய பிள்ளைகளை போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்த நீங்கள் யாரும் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது என்று வீட்டு மருமகள்களை வெளியிலேயே இருக்க வைத்திருந்தார்.

அந்த நேரத்தில் ஜான்சி ராணி என்னுடைய பையனும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருக்கான். இதற்கு காரணம் உங்க பொண்ணை என் பையன் கல்யாணம் பண்ணுனது தான் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய அதனால் கோபமான ஆதிரை தன்னுடைய தாலியை கழட்டி வீசி உன்னுடைய பையனுக்கும் எனக்கும் எந்த உறவும் இல்லை என்று பிரச்சனை செய்ய அப்போது ஆதிரையை ஜான்சி ராணி அடிக்க அதனால் கோபமான ஈஸ்வரி ஜான்சி ராணி அடிக்க பிறகு மொத்த மருமகள்களும் சேர்ந்து ஜான்சி ராணியை வீட்டை விட்டு வெளியே துரத்தி விட்டிருந்தனர்.

Ethirneechal Serial 2023 December 2nd promo and episod full update

இப்படியாக நேற்றைய எபிசோடு இருந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ் குணசேகரன் மற்றும் ஞானம், கதிர், கரிகாலனை விசாரிக்கின்றனர். அப்போது திருவிழாவுக்கு யாரெல்லாம் காரில் போனீங்க என்று கேள்வி கேட்க, அதற்கு கரிகாலன் நானு, கதிர் மாமா, கிள்ளிவளவன் மூணுபேரும் வண்டியில ஒண்ணா வந்தோம் என்று சொல்கிறார்.

எதிர்நீச்சல் குணசேகரனை கதறவிட்ட ஜனனி.. மாலத்தீவில் செய்த வேலையை பாருங்க.. கூட யாருனு தெரியுதா?
அதைத் தொடர்ந்து வீட்டில் தாரா, தர்ஷினி, ஐஸ்வர்யா எல்லோரும் ஸ்கூலுக்கு போயிட்டு வீட்டிற்கு வருகின்றனர். அப்போது வீட்டு வாசலில் இருக்கும் ஜான்சி ராணி போனா போதும் என்று உங்க கிட்ட எல்லாம் நான் வம்பு இழுக்காம இருந்தேன். ஆனா இனிமே அப்படி இருக்க மாட்டேன் டி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் வீட்டிற்குள் இருக்கும் கதிர் கோபமாக ஓடி வந்து சக்தியிடம் இன்னும் என்னடா பண்ணிக்கிட்டு இருக்க போடா வெளியே என்று கத்துகிறார்.

அப்போது குணசேகரன் டேய் சக்தி உன் பொண்டாட்டிய கூட்டிட்டு வீட்டுக்குள்ள வா என்று கூப்பிடுகிறார். இப்படியாக ப்ரோமோ முடிவு அடைந்து இருக்கிறது. மீண்டும் குணசேகரன் மீது சக்தி மற்றும் ஜனனி கொடுத்து இருக்கும் கம்பளைண்டை வாபஸ் வாங்குவதற்காக குணசேகரன் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி இருக்கிறார். எப்போதுமே குணசேகரன் மட்டுமே ஜெயித்துக் கொண்டிருப்பது பார்க்கும் ரசிகர்களுக்கு அலுப்பு தட்டுகிறது.

எதிர்நீச்சல்: குணசேகரனை தொடர்ந்து ஜான்சி ராணிக்கு ஆப்பு வைத்த வீட்டு பெண்கள்.. சூப்பரான கதை மாற்றம்
என்னதான் வீட்டுப் பெண்கள் வாய் சவடால் மட்டும் போட்டுக் கொண்டிருந்தாலும் கடைசியில் குணசேகரனே ஒவ்வொரு முறையும் ஜெயித்துக் கொண்டிருப்பது பார்க்கும் ரசிகர்களுக்கு கடுப்பாக இருக்கிறது. இப்போது ஜெயிலுக்கு விசாரணைக்கு போயிருந்த குணசேகரன் அப்படியே கொஞ்ச நாளுக்கு ஜெயிலில் இருப்பது போன்று கதையை வைத்து வீட்டு பெண்கள் முன்னேற்றம் அடைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+