எதிர்நீச்சல்: குணசேகரனை தொடர்ந்து ஜான்சி ராணிக்கு ஆப்பு வைத்த வீட்டு பெண்கள்.. சூப்பரான கதை மாற்றம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் டிசம்பர் ஒன்றாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆதிரை தன்னுடைய தாலியை மீண்டும் அறுத்து எறிகிறார்.
அதே நேரத்தில் ஆதிரையை அடிக்க பாய்ந்த ஜான்சி ராணியை வீட்டு பெண்கள் வீட்டை விட்டு அடித்து துரத்துகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் எல்லோரும் எதிர்பார்த்து இருந்த திருப்பங்கள் வர தொடங்கி இருக்கிறது. ஒரு பக்கத்தில் அப்பத்தான் கேஸை ரீ என்குயரி பண்ணுவதற்காக ஜனனி மற்றும் சக்தி கோர்ட்டில் கேஸ் போட்டு இருந்த நிலையில் குணசேகரனுக்கு எதிராக, ஜீவானந்தத்திற்கு ஆதரவாக சாருபாலா வக்கீலாக ஆஜராகி இருக்கிறார்.

இந்த தகவல்கள் நேற்று குணசேகரனுக்கு கதிர் மூலமாக தெரிய வந்திருந்தது. அதே நேரத்தில் வீட்டிற்கு வந்த போலீஸ் குணசேகரனிடம் மீண்டும் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போயிருக்கின்றனர். அதற்கு கதிர் மற்றும் ஞானம் எவ்வளவோ தடுத்து பார்த்தும் கடைசியில் முடியாமல் ஆகி இருந்தது.

அதே நேரத்தில் குணசேகரன் தான் அப்பதாவுக்கு கடைசியாக பால் கொடுத்தது மற்றும் கதவை வெளிப்பக்கமாக எதற்காக பூட்டி வைத்திருந்தது என்ற கேள்விகளை ஜனனி கேட்க அதனால் குணசேகரன் கோபத்தில் இருக்கிறார். இப்படியான நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் போலீஸோடு வீட்டை விட்டு வெளியே போகும் குணசேகரன் ஜனனி மற்றும் சக்தியிடம் நான் வீட்டுக்கு மீண்டும் வரும்போது நீங்கள் வீட்டிற்குள் இருக்கக்கூடாது வெளியே ஓடிப் போயிருங்க என்று மிரட்டி விட்டு போகிறார்.
அதைத்தொடர்ந்து ஆதிரை அழுதப்படியே கழுத்தில் கட்டி இருந்த தாலியை மீண்டும் அறுத்து எறிகிறார். ஏற்கனவே கரிகாலன் கட்டியிருந்த அன்றே அந்த தாலியை அறுத்து எறிந்தவர் தான். இப்போது மீண்டும் அந்த தாலியை கழட்டி வீச அதனால் ஜான்சி ராணி ஆதிரையை அடிக்கிறார். இதனால் கோபமான ஈஸ்வரி எங்க வீட்டு பொண்ணை எங்க முன்னாடியே நீ அடிப்பியா என்று ஜான்சிராணியின் கன்னத்தில் பளார் என்று அடிக்க, வீட்டில் உள்ள எல்லா பெண்களும் சேர்ந்து ஜான்சி ராணியை இழுத்து வெளியே விடுகின்றனர்.
எதிர்நீச்சல்: ஈஸ்வரியிடம் நேரடியாக கேள்வி கேட்டு மோதும் சாருபாலா.. சக்தி செய்த செயல்.. செம முடிவு
இப்படியாக ப்ரோமோ வெளியாக இருக்கிறது. ஒரு பக்கத்தில் காலேஜ் வேலை ஈஸ்வரிக்கு குணசேகரனால் கிடைக்காமல் இருந்தாலும் இப்போது தேர்தலில் போட்டியிடுகிறார். இதனால் தேர்தலில் ஈஸ்வரி ஜெயிக்கும் போது அதை வைத்து குணசேகரனை ஆட்டி படைக்கப் போகிறாரா? என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டுப் பெண்கள் துணிச்சலாக ஜான்சி ராணியை அடித்து வெளியே விரட்டி இருப்பதும் பலராலும் பாராட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல்: குணசேகரனுக்கு ஆப்பு வைத்த ஜனனி.. வீட்டிற்கே வந்த போலீஸ்.. இனி நடப்பது இது தானா?
ஏற்கனவே சில நாட்களாக ஜான்சி ராணியை குணசேகரன் நீ இருக்க வேண்டிய இடத்தில் இரு என்று அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறார். நேற்றைய எபிசோடில் சேரில் வந்து உட்கார வரும் போது கூட விசாலாட்சியும் உன்னுடைய இடம் எதுவோ நீ அங்கு தான் இருக்கணும் நீயெல்லாம் வந்து எனக்கு சரிசமமாக இருக்கக் கூடாது என்று மிரட்டி இருந்தார். இந்த நிலையில் இப்போது குணசேகரனை தொடர்ந்து ஜான்சி ராணியும் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு இருக்கும் நிலையில் இனி அடுத்ததாக வீட்டு பெண்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications