ஜீவானந்தம் விஷயத்தில் பின்வாங்கும் ஜனனி.. அதிரடி காட்டும் ஈஸ்வரி.. விறுவிறுப்பான தருணம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்று ஈஸ்வரி, ஜனனி மற்றும் நந்தினி மூவரும் முடிவு எடுக்கின்றனர்.
ஆனால் ஜீவானந்தத்தை சந்திக்க ஈஸ்வரி ஐடியா சொல்ல, அதை ஜனனி நான் செய்ய மாட்டேன் என்று சொல்கிறார்.
இந்த நிலையில் ஜூலை 28ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் என்ன நடந்தது என்பதை பற்றி பார்க்கலாம்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அடுத்தடுத்த எதிர்பாராத திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஜீவானந்தத்தினுடைய துப்பாக்கி மிரட்டலால் பயந்து போய் இருந்த குணசேகரன் தன்னுடைய சொந்த வீட்டிலும் ஜீவானந்தத்திற்கு பங்கு இருக்கு என்பதை தெரிந்து அதிர்ச்சியாக நெஞ்சுவலி வந்துவிடுகிறது.
இந்த நிலையில் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் இருந்த குணசேகரனுக்கு இப்போது ஒரு கை செயல் இழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதை முறையாக பயிற்சி செய்து கொண்டு இருந்தால் ஒருவேளை சரி செய்ய முடியும் இல்லை என்றால் இப்படி தான் அவர் காலம் முழுக்க இருக்க வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் குணசேகரனை பார்க்க வந்த ஈஸ்வரி, நந்தினி மற்றும் ஜனனியை கதிர் பார்க்க விடாமல் துரத்தி அடித்து இருக்கிறார். ஆபத்தான கட்டத்தில் குணசேகரன் இருப்பதை புரிந்து கொண்ட நந்தினி, ஈஸ்வரி, ஜனனி மூவரும் இதற்கு காரணம் ஜீவானந்தம் தான் இருக்கும் சொத்தை நம்ம மீட்டுக் கொண்டு வந்து விட்டால் குணசேகரன் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடுவார் என்று கூறி, நாம் ஜீவானந்தத்தை சந்திக்க வேண்டும் என்று மூவரும் ஆஸ்பிட்டலை விட்டு கிளம்பி இருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரமோ வெளியாகி இருக்கிறது. அதில் குணசேகரன் எனக்கு ஒரு கை செயலிழந்து விட்டது என்று தெரிந்ததும். டாக்டரிடம் சொல்லி ஊசி போட்டு கொன்னு விட சொல்லுங்க. நான் இனி உயிரோடு இருந்து பிரயோஜனமே இல்ல. ஏற்கனவே என் மானம் மரியாதை எல்லாம் போயிட்டு. இப்போ என்னுடைய கையும் செயலிழந்து போயிட்டு,இனி நான் இருந்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்று அழுது கொண்டிருக்கிறார்.
குணசேகரனை தம்பிமார்கள் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க, அதே நேரத்தில் ஜீவானந்தத்தை நாம் சந்திக்க வேண்டும் என்றால் கௌதமிடம் அதற்கு அரேஞ்ச் பண்ண சொல்லி கேட்கலாம் என்று ஈஸ்வரி ஐடியா கொடுக்க, நான் கௌதமிடம் பேசமாட்டேன் அக்கா என்று ஜனனி கோபத்தோடு பேசுகிறார். அதற்கு ஈஸ்வரி நான் பேசுறேன் என்று சொல்ல, ஜனனி அதிர்ச்சி ஆகிறார். இப்படியாக பிரமோ முடிவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் இந்த எபிசோட்டில் ஜீவானந்தத்தை ஈஸ்வரி, ஜனனி, நந்தினி மூவரும் சந்திப்பார்களா? அப்படியே சந்தித்தால் என்ன மாதிரி பிரச்சனை நடக்கும் என்று எதிர்பார்ப்பாக இருக்கிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications