எதிர்நீச்சல்: தரமான சம்பவம்.. காலேஜில் ஈஸ்வரியை அவமானப்படுத்த போன குணசேகரனுக்கு கிடைத்த அதிர்ச்சி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நவம்பர் 25ஆம் தேதிக்கான எபிசோடு வெளியாகி இருக்கிறது.
அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தனக்கு கிடைத்த வேலையை வேண்டாம் என்று ஈஸ்வரி உதறி தள்ளுகிறார்.

அதே நேரத்தில் காலேஜுக்கு வந்து பிரச்சனை செய்வதற்காக குணசேகரன் தன்னுடைய குடும்பத்தை கூட்டிக்கொண்டு வருகிறார். இந்த நிலையில் என்ன நடக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் சில மாதங்களுக்கு பிறகு இப்போது தான் வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. இதில் அப்பத்தா உயிரோடு இருக்கிறா? அல்லது குணசேகரன் அப்பத்தாவை மறைத்து வைத்திருக்கிறாரா? அல்லது ஜீவானந்தம் அப்பத்தாவை மறைத்து வைத்திருக்கிறாரா? என்று பல கேள்விகள் இப்போது ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.

அதே நேரத்தில் அப்பத்தா ஆசைப்பட்டபடி வீட்டு பெண்கள் எதிர்நீச்சல் அடித்து தங்களுடைய வாழ்க்கையில் முன்னேறுவார்களா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் ஈஸ்வரிக்கு ஜீவானந்தம் சொன்னபடியே காலேஜில் வேலை கிடைத்திருந்தது. இதுகுறித்து நேற்றைய எபிசோடில் கூட குணசேகரன் தடுத்து பார்த்தும் முடியாது நான் கண்டிப்பாக என்னுடைய வேலையை பார்ப்பேன்.
நடிகர் மாரிமுத்து பேசிய கடைசி வீடியோவை பகிர்ந்த எதிர்நீச்சல் பிரபலம்.. கண்கலங்க வைத்த வார்த்தை
நான் வேலைக்கு போகும் முடிவை யார் சொன்னாலும் மாற்ற மாட்டேன் என்றெல்லாம் தைரியமாக பேசி இருந்தார். இது ரசிகர்களின் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது. அதே நேரத்தில் அருணை ஆக்சிடெண்ட் செய்தது குணசேகரன் மற்றும் கதிர் தான் என்ற உண்மையையும் எஸ் கே ஆர் குடும்பத்திற்கு தெரிய வந்திருக்கும் நிலையில் ஜீவானந்தத்திற்கு ஆதரவாக சாருலதா குணசேகருக்கு எதிராக வக்கீலாக ஆஜராகி இருக்கிறார்.

இந்த நிலையில் இன்று வெளிவந்த ப்ரோமோவில் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்த சக்தி மற்றும் ஜனனி இடம் ஞானம் கேள்வி கேட்கிறார். அப்போது சக்தி அப்பத்தா விஷயத்துல உண்மையைக் கொண்டு வராமல் விடமாட்டோம். கூடிய சீக்கிரத்துல அவனை கண்டு பிடிக்காமல் நாங்க விட மாட்டோம் என்று சொல்கிறார். இதனால் குணசேகரன் கடும் கோபத்தில் இருக்கிறார்.
எதிர்நீச்சல்: மீண்டும் வந்த அப்பத்தா.. கோர்ட்டில் அதிர்ச்சி கொடுத்த ஜீவானந்தம்.. செம ட்விஸ்ட்
அதைத்தொடர்ந்து காலேஜில் ஈஸ்வரி அங்கிருக்கும் பிரபஷனரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது அவரிடம் ஜனனி அக்கா ஒரே ஒரு முறை ரெக்யூஸ்ட் பண்ணி கேளுங்க அவங்க ஒத்துக்குவாங்க என்று சொல்ல அதற்கு ஈஸ்வரி வேண்டாம் ஜனனி என்னால இங்க ஒர்க் பண்ண முடியாது என்று கூறி அங்கிருந்து கிளம்பி வருகிறார்.

அந்த நேரத்தில் காலேஜுக்கு குணசேகரன், ஞானம், கதிர், கரிகாலன் நான்கு பேரும் வருகின்றனர். அப்போது ஞானம் அங்கு இருக்கும் நபரிடம் ஈஸ்வரின்னு ஒருத்தி இங்க கிளாஸ் எடுக்க வந்திருக்காளே அவ எங்க இருக்கான்னு கேட்க, அந்த நபர் ஈஸ்வரி இருக்கும் இடத்தை சொல்லிக் கொடுக்க கோபமாக குணசேகரன் குடும்பத்தினர் வருகின்றனர். இதனால் என்ன நடக்கப்போகிறது என்று எதிர்பார்ப்பு இருக்கிறது.

அதே நேரத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இப்பொழுது நடக்க தொடங்கி இருக்கிறது. ஜீவானந்தம் தான் ஈஸ்வரிக்கு காலேஜ் வேலையை வாங்கி கொடுத்தது. ஆனால் இப்போது அங்கு தனக்கு தன்மான பிரச்சனை வந்திருப்பதால் ஈஸ்வரி அங்கிருந்து வேண்டாம் என்று தைரியமாக முடிவெடுத்து வெளியேறுகிறார். இனி அவர் முயற்சி செய்து அடுத்த வாய்ப்பை பெறுவாரா? அல்லது குணசேகரன் தடுப்பதால் வீட்டிற்குள் அடங்கிப் போக இருக்கிறாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications