எதிர்நீச்சல்: ஜெயிலில் காணாமல் போன குணசேகரன்.. வீட்டிற்கு தேடி வந்த நாச்சியப்பன்.. கோபத்தில் ஈஸ்வரி
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் பத்தாம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் போலீஸ்காரர்களால் கைது செய்து கூட்டிட்டு போன குணசேகரனை காணவில்லை என்று வழக்கறிஞர் கூறுகிறார்.

அதே நேரத்தில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் மீண்டும் குணசேகரனின் வீட்டிற்கு வந்து அவரை பார்க்க வேண்டும் என்று சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் கதை ஒவ்வொரு நாளும் வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆதி குணசேகரன் ஆக நடிகர் வேலராம மூர்த்தி அறிமுகமான பிறகு சீரியலில் மிரட்டல் காட்சிகள் தான் அதிகமாக இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது. வந்த முதல் நாளே போலீஸ் ஆபீஸர்களை அடித்த புதிய குணசேகரன் பற்றி சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் நேற்றைய எபிசோடில் குணசேகரனை போலீஸ் ஆபீஸர் கைது செய்து கூட்டிட்டு போயிருந்தனர். அப்போது அவரை தொடர்ந்து காரில் கதிர், ஞானம், கரிகாலன் மூன்று பேரும் போய்க்கொண்டிருந்தனர். குணசேகரனை கைது செய்தது குறித்து ஞானம் வழக்கறிஞருக்கு போன் மூலம் தகவல் சொல்லியிருந்தார்.
அதே நேரத்தில் வீட்டில் அனைத்து பெண்களும் சோகமாக இருக்கும் நிலையில் விசாலாட்சி வழக்கம்போல அவர்களை வசை பாடிக் கொண்டிருந்தார்.என் பையன் ஜெயிலுக்கு போனதுக்கு காரணம் நீங்கதான் என்று விசாலாட்சி சொல்ல, அதை கேட்டு கோபமான ரேணுகா நாங்க தான் உங்க பையனை போலீஸ் ஆபீஸரை எட்டி மிதிக்க சொன்னமா? என்று கேட்க, அதற்கு என் பையன் வந்த முதல் நாளே உங்க முகர கட்டையும் மூஞ்சியும் சரியே இல்ல.

அதான் நான் பார்த்தேனே, ஆரத்தி எடுக்க சொல்லி வர சொன்னா நீங்க ஆளாளுக்கு ஒரு பக்கம் மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கீங்க. ஏய் ஈஸ்வரி... அவன் உன் புருஷன் அந்த நினைப்பு கொஞ்சமாவது உன் மனசுல இருக்கா? என்று நேற்றைய எபிசோடில் வீட்டு மருமகள் திட்டியிருந்தார்.
அதற்கு ஜனனி விசாலாட்சியை பதிலுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜனனியின் அப்பா நாச்சியப்பன் வீட்டிற்கு வந்து இருக்கிறார். அவரிடம் ஜனனி என்னப்பா திடீர்னு என்று விசாரிக்கிறார். அதற்கு நாச்சியப்பன் எங்க வீட்டில ஒரு முக்கியமான நிகழ்வு அதனாலதான் என்னுடைய சம்மந்திய அழைக்க வந்தேன் என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் கதிர்,ஞானம், வழக்கறிஞர் எல்லோரும் பரபரப்பாக இருக்கின்றனர். அப்போது வழக்கறிஞர் கதிர், ஞானத்திடம் நீங்க ஒரு விஷயம் தெரிஞ்சுக்கங்க சார், உங்க அண்ணன் இங்க இல்ல என்று சொல்ல கதிர் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார். அதைத்தொடர்ந்து விசாலாட்சி வீட்டில் மருமகளிடம் அவமானப்படுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்.
அதில் கோபமான ஈஸ்வரி உங்க பையன் பேசறது தான் முட்டாள்தனம் என்று சொல்ல, அதற்கு என் பிள்ளை முட்டாள்னா எவண்டி அறிவாளி? அந்த ஜீவானந்தம்மா.. என்று கேட்க, ஈஸ்வரி கடும் கோபத்தில் நிற்க அனைவரும் அதிர்ச்சி அடைந்து கோபப்படுகின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கிறது.
இந்த நிலையில் இன்று நாச்சியப்பன் வீட்டிற்கு மீண்டும் வந்திருக்கும் நேரத்தில் பழைய குணசேகரன் அதாவது மாரிமுத்து இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அவர் நாச்சியப்பனை கிண்டல் செய்து கலாய்ச்சி இருப்பார் என்றெல்லாம் மாரிமுத்து குறித்து நினைவுகளை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
அதேபோல ரேணுகா அன்றைக்கு கதிருக்கு கன்னத்தில் ஓங்கி அறை விட்டது போல இன்னைக்கு இப்படி பேசிய விசாலாட்சிக்கும் ஒரு அறை கொடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி இன்று என்ன நடக்கப் போகிறதோ என்று ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications