எதிர்நீச்சல்: ஈஸ்வரியை அறைந்த குணசேகரன்.. நந்தினி சொன்ன வார்த்தை.. பதறிப்போன அப்பத்தா
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் அக்டோபர் 7ஆம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
அதில் வீட்டிற்கு வந்த குணசேகரன் வீட்டு மருமகளிடம் அடுக்கடுக்கான கேள்விகளை கேட்கிறார்.

இப்போது கதிரை அறைந்ததற்காக ஈஸ்வரியை குணசேகரன் அடிக்கிறார். இந்த நிலையில் என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் எதிர்நீச்சல் சீரியலில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே நடிகர் வேலராமமூர்த்தி குணசேகரனாக அறிமுகமாகி இருக்கிறார். அவர் நேற்றைய எபிசோடில் முதல் முறையாக வீட்டிற்குள் வந்திருக்கிறார். அவர் வீட்டிற்கு வருவதற்கு முன்பே அவருடைய தாய் மாமன் அவரைப் பற்றி அதிகமான பில்டப் கொடுத்து இருந்தார்.
அதேபோலவே வீட்டிற்குள் இறங்கியதுமே குணசேகரன் அவருடைய உறவினர்கள் அனைவரையும் நீங்க எல்லாரும் வீட்டை விட்டு வெளியே போங்க என்று துரத்தி இருந்தார். அதோடு ஈஸ்வரியின் அப்பா, இனி நாங்க கிளம்புறோம் என்று சொல்ல, அதற்கு நீங்கள் இந்த வீட்டிற்கு பொண்ணை கொடுத்து பெருமை சேர்த்து இருக்கீங்க. இருங்க இருந்து சாப்பிட்டுட்டு போகலாம் என்று குத்தலாக பேசி இருந்தார்.

அதே நேரத்தில் வீட்டிற்குள் வந்த அப்பத்தா குணசேகரனை பார்த்து அதிர்ச்சி அடைந்திருந்தார். இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் நந்தினியை பார்த்து இங்கே வா என்று மிரட்டியபடியே கூப்பிட, அதற்கு நந்தினி என்னவென்று கேட்க, அதற்கு குணசேகரன், "நீ குணசேகரன் வீட்டில் இருந்தே வெளியே போய் சோத்து வியாபாரம் பாக்குறியா?" என்று கேள்வி கேட்க, அதற்கு நந்தினி "அப்போ வெளியே போய் பார்க்கலாமா?" என்று நந்தினி வழக்கம் போல எதிர்த்து பேச அதற்கு குணசேகரன் ஏய் என்று மிரட்டுகிறார்.

அதைத் தொடர்ந்து ஈஸ்வரியிடம் "ஒரு ஆம்பளைய நீ எப்படி கைநீட்டி அடிக்கலாம்" என்று கேட்க, அதற்கு ஈஸ்வரி "என்னுடைய சுயமரியாதையை காப்பாத்திக்க அடிச்சேங்க" என்று சொல்ல, அதற்கு குணசேகரன் ஈஸ்வரியின் கன்னத்தில் அறைகிறார். அதை பார்த்த அப்பத்தா, நந்தினி, ரேணுகா என எல்லோரும் பதறிப்போக கதிர் கைத்தட்டி சிரிக்கிறார்.
அதைத்தொடர்ந்து அப்பத்தா வீட்டு மருமகள்களோடு தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். அப்போதும் அவன் எதையும் லேசுல விடமாட்டான் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். இப்படியாக ப்ரோமோ முடிவடைந்திருக்கும் நிலையில் இந்த ப்ரோமோவிற்கு அதிகமான ரசிகர்கள் வேல ராமமூர்த்தியின் நடிப்பு அற்புதமாக இருக்கிறது.
ஆனால் அவர் மிரட்டல் மட்டும்தான் செய்கிறாரே தவிர வழக்கமான குணசேகரனின் நக்கல் தனம் அவருடைய முகத்தில் கொஞ்சம் கூட வரவில்லை என்பது பலருடைய வருத்தமாக இருக்கிறது. அதே நேரத்தில் இப்போது வந்திருக்கும் வேல ராமமூர்த்தியை பார்க்கும்போது முழுமையாக வில்லனாக மட்டும் தான் தெரிகிறார் என்று அதிகமான ரசிகர்கள் நடிகர் மாரிமுத்துவை மிஸ் பண்ணுவதாக ஃபீல் பண்ணி வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications