எதிர்நீச்சல்: மாரிமுத்து கடைசி ப்ரோமோவில் சொன்ன வார்த்தை.. கண்கலங்கும் ரசிகர்கள்.. இனி நடப்பது?
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் செப்டம்பர் 12ம் தேதிக்கான ப்ரோமோ வெளியாகியிருக்கிறது.
இன்று வெளியான பிரமோ தான் மறைந்த நடிகர் மாரிமுத்து கடைசியாக நடித்த ப்ரோமோ என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் மாரிமுத்து சொன்ன வார்த்தைகளை கேட்டு ரசிகர்கள் பீல் பண்ணி கலங்கி வருகின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் டிஆர்பியில் முன்னணி இடத்தை வகித்து வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் தனி இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கப் போகிறதோ என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் இத்தனை நாட்களாக இந்த சீரியலில் குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்து சமீபத்தில் மரணமடைந்திருப்பது ரசிகர்களின் மத்தியில் பெருத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் அவர் கடைசியாக இறப்பதற்கு முன்பு நடித்த எபிசோடுகளின் ப்ரோமோ இன்று வெளியாகி இருக்கிறது.

அதில் முதியோர் இல்லத்தில் சாப்பாடு கொடுத்து விட்டு அவர்கள் சாப்பிடும் போது நந்தினி மற்றும் ஜனனி சந்தோஷப்படுகின்றனர். அதே நேரத்தில் வீட்டில் வேண்டுதல் என்று சொல்லிவிட்டு பொங்கல் எடுத்துக்கிட்டு ஒருத்தி வெளியில போறா? வீட்டுக்கு வந்தவளை கூட்டிட்டு குடுகுடுன்னு மேல ஒருத்தி போறா இவளுக எதையுமே சாதாரணமாக செய்வது இல்லை. வச்சா பெரிய வெடியா தான் வைக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு கரிகாலன் உங்களுக்கு எதிரா பல சதி வேலைகள் நடந்துகிட்டு இருக்கு என்று மண்டைக்குள்ளே ஓடிக்கிட்டே இருக்கு மாமா என்று சொல்ல, அதற்கு விசாலாட்சி இருக்கிற குழப்பம் பத்தாதுன்னு நீ வேற குழப்பி விடுறியா? என்று கேட்டு கரிகாலனை திட்டுகிறார். அதற்கு கரிகாலன் எனக்கு என்னமோ உங்க மேல தான் சந்தேகமே என்று விசாலாச்சியை பார்த்து சொல்கிறார்.
இப்படியாக ப்ரோமோ முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்த சீரியலில் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு அவர் நடித்த எபிசோடுகளுக்கு வேறு ஒருவர் டப்பிங் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி இன்றைய எபிசோடுடன் மாரிமுத்து நடித்த காட்சிகளும் வரப் போவதில்லையே இனி நாங்கள் எப்படி சீரியல் பார்க்கப் போகிறோம் என்று இந்த சீரியலில் ரசிகர்கள் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இந்த சீரியலில் அடுத்த குணசேகரன் யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. இந்த நிலையில் புதிய குணசேகரன் இன்னும் ஒரு சிலை நாட்களில் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன நடக்கப் போகிறது? யார் வரப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications